’யூத்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்
தேவதர்ஷினி, சூரஜ் வெஞ்சனமொடு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கென் கருணாஸ்.

ஒளிப்பதிவாளர் :- விக்கி.

படத்தொகுப்பாளர் :- நாஷ்.

இசையமைப்பாளர் :- ஜி வி பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- பார்வதா என்டர்டெயின்மென்ட் .

தயாரிப்பாளர் :- கருப்பையா ராம், சுலோச்சனா குமார்.

மக்கள் தொடர்பு :- பரணி அழகிரி.

ரேட்டிங் :-  3.5./5.

சென்னையில் பேக்கரி ஒன்றை நடத்தி கொண்டு சூரஜ் வெஞ்சனமொடு, மற்றும் மனைவி தேவதர்ஷினி மற்றும் மகன் கதாநாயகன் கென் கருணாஸ், உடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் கென் கருணாஸ், கொஞ்சம் கூட படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் நிலையில், பள்ளியில் படிக்கும் போது ஒரு அழகான பெண்ணை காதலித்து கல்லூரி, வேலை, கல்யாணம் என்று செட்டில் ஆக வேண்டும் என நினைக்கிறார்.

கதாநாயகன் கென் கருணாஸ், எந்த ஒரு பெண்ணும் காதலிக்கவும்  கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் தன்னோடு  பள்ளியில் படிக்கும் கதாநாயகி மீனாட்சி தினேஷ் கதாநாயகன் கென் கருணாஸ், காதலிக்க தொடங்குகிறார்.

கதாநாயகி மீனாட்சி தினேஷ் கதாநாயகன் கென் கருணாஸ்,காதலிக்க இருவரும் சந்தோஷமாக காதலித்துக் கொண்டு  இருக்கிறார்கள்.

சில நாட்களில் கதாநாயகி மீனாட்சி தினேஷ் வெளியூருக்கு செல்லும் நிலையில், இடைப்பட்ட நாட்களில் மற்றொரு பெண்ணான கதாநாயகி பிரியான்ஷி கதாநாயகன் கென் கருணாஸ், காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கதாநாயகன் கென் கருணாஸ், அந்த  பெண்ணான கதாநாயகி பிரியான்ஷி காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இது ஒரு கட்டத்தில்  கதாநாயகன் கென் கருணாஸ் தெரிய வந்து  பெண்ணான கதாநாயகி பிரியான்ஷி
காதலிக்கும் விஷயம் கதாநாயகி மீனாட்சி தினேஷ்க்கு தெரியவர காதலை முறித்துக் கொண்டு சென்று விடுகிறார்.

கதாநாயகி பிரியான்ஷியின்  தான் மீது வைத்திருந்த காதலும் பொய் என்று கதாநாயகன் கென் கருணாஸ் தெரிய வருகிறது.

இறுதியில் இரண்டு முறை காதல் தோல்விகளை பார்த்த கதாநாயகன் கென் கருணாஸ் வாழ்க்கை என்ன ஆனது?

கதாநாயகன் கென் கருணாஸ் படிப்பு என்ன ஆனது? என்பதுதான் இந்த ‘யூத்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘யூத்’ திரைப்படத்தில் கதாநாயகனாக கென் கருணாஸ், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ், இளைஞனின் அலட்சியம், கோபம், உணர்ச்சி, அதன் பிறகு வரும் பொறுப்பு ஆகிய மாற்றங்களை இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆக்ஷன் காட்சிகளிலும் நடனத்திலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

இந்த ‘யூத்’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா மூவரும் நடித்துள்ளார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா மூவருமே போட்டி போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கதாநாயகன் கென் கருணாஸ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சூரஜ் வெஞ்சனமொடு,, நடிப்பில் ரசிகர்களை கண்கலங்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் கென் கருணாஸ் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கவும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும்  திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விக்கி, ஒளிப்பதிவு மூலம், திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் இளைய தலைமுறை சூழலுக்கு ஏற்றபடி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இன்றைய இளைய சமுதாயத்தினரின்  வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள் மற்றும் அதில் இருந்து திருந்தி வரும் மாற்றங்களை சொல்ல முயற்சிக்கும் எளிய கதையை சிறந்த திரைக்கதையாக அமைத்து இன்றைய தலைமுறையை குறிவைத்து திரைப்படத்தை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கென் கருணாஸ்.

மொத்தத்தில், ‘யூத்’ இளம் தலைமுறையை  குறிவைத்து உருவாக்கப்பட்ட சிறப்பான திரைப்படம்.

error: Content is protected !!