‘நீளிரா’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-நவீன் சந்திரா, சனந்த், கபில வேணு, ரூபா கொடுவாயூர், வித்து, சித்து குமரேசன், நவயுகம், சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சோமீதரன்.

ஒளிப்பதிவாளர் :- செல்வரத்தினம் பிரதீபன் .

படத்தொகுப்பாளர் :- ராதா ஸ்ரீதர் .

இசையமைப்பாளர் :- கே.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஸ்பிரிட் மீடியா.

தயாரிப்பாளர்கள் :- கார்த்திகேயன் எஸ் – கார்த்திக் சுப்பராஜ், ராணா டக்குபட்டி, பவன் நரேந்திரா,  அருள்மொழித்தேவன்,  காளிமுத்து, கல்யாண் சுப்ரமணியன்.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :-  4.2./5.

ஈழப் போரின் பின்னணியில் உருவாகியுள்ள ‘நீளிரா’ (Neelira – Long Night) திரைப்படம், வெறுப்பையோ வன்முறையையோ பணமாக்காமல், போர்ச் சூழலின் மனித உணர்வுகளை இயல்பாகப் பேசும் ஒரு படைப்பாகும்.

ஈழப் போரின் போது, ஒரு திருமணத்திற்காக இரு வீட்டார் சந்திக்கும், ஒரு நீண்ட இரவில்  நிகழும்  சம்பவங்களைப் பற்றிய கதை.

ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களிலும் பல போர் திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

ஆனால் அவற்றை காட்டிலும் போர் பின்னணியில் போர் சூழலுக்கு நடுவில் வாழும் மக்களின் வாழ்வியலை பற்றியும், அவர்கள் மன ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றியும், நம்மை போல இயல்பாக அவர்கள் இருப்பார்களா? என்பதை காட்டும் திரைப்படங்கள் என வரும் திரைப்படங்கள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தலைப்பு திரைப்படத்தின் கதைப்படி, “நீளிரா” என்றால் நீண்ட இரவு என்பது தான் அதன் பொருள்.

போர் சூழலில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை இது.

1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த “நீளிரா” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்.

“நீளிரா” என்ற இந்த அருமையான படைப்பு ஏப்ரல் 3, 2026 அன்று முதல்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இலங்கையில் போர் பகுதிகளில் பதட்டமான சூழலுக்கு நடுவில்  வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஈழ தமிழர்களின் தமிழ்  குடும்பத்தில் உள்ள ஒரு பெண் பிள்ளைக்கு  திருமணம்  நடக்கும் இருக்கும் நிலையில்அந்த திருமணத்துக்குக் கூட இந்திய அமைதி காப்பு படையிடமும் (IPKF), இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற வேண்டிய நிலை அந்த ஈழ தமிழர்கள் வாழும் அந்த கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

விடிந்தால் ஈழ தமிழர்களின் தமிழ்  குடும்பத்தில் உள்ள அந்த  பெண்ணுக்கு திருமணம் நடக்க இருந்த  சூழலில் அவர்கள் வீட்டிற்கு வெளியே IPKF வீரர்கள் சிலர் வந்து நிற்க, அந்த திருமண வீட்டில் இருப்பவர்களுக்கோ  பதட்டமாக இருக்க அதே நேரத்தில் வேறு ஒரு இடத்தில் ராணுவத்துக்கும் தமிழ் ஈழ  போராளிகளுக்கும் இடையே தீவிர சண்டை நடந்து கொண்டிருக்க விடியும் வரை, IPKF வீரர்கள் இந்த வீட்டிலேயே இருக்கிறார்கள்.

அந்த திருமண வீட்டிற்குள் தஞ்சம் புகும் IPKF வீரர்கள் சிலர் அந்த  குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் அனைவரையும் எப்படி எல்லாம் நடத்தினார்கள்? போராளிகள் இவர்களை தேடி வந்தார்களா?, தேடி வரவில்லையா?, இந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்ததா?,  திருமணம் நடக்கவில்லையா?, அந்த போரில் எளிய மக்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதுதான் இந்த “நீளிரா” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “நீளிரா” திரைப்படத்தில்  முதன்மை கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், மிக மிக அருமையாக  நடித்திருக்கிறார்.

இந்த “நீளிரா” திரைப்படத்தில் படித்திருக்கும் திருமண குடும்பத்தினராக வேணு, ரூபா கொடுவாயூர், சுவாதி கிருஷ்ணன், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித், சனத், கபிலா, ஆகியோர் துப்பாக்கி முனையில் அவர்களின் பதட்டத்தை  தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு மூலம் ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை மிக சிறப்பாக ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் கே வின் இசையில் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஈழத்தில் நடக்கும் அனைத்து போர்களும் எல்லா பிரச்சனைகளும் வன்முறையில் முடியாது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி  மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்  இயக்குனர் சோமிதரன்.

கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒன்று அதை இங்கு  நாங்கள்   வெளிப்படுத்த முடியாது அதை நீங்கள் திரையரங்குகளுக்கு சென்று நேரில் பார்த்தால் மட்டுமே அந்த உணர்வை பெற முடியும் என்பது உறுதி.

மொத்தத்தில், “நீளிரா” திரைப்படம் ஈழத் தமிழர்களின் ஈழம் எங்கள் நாடாகும், இனிமையான எங்கள் வீடாகும் ஈழத் தமிழகம் தழைக்கட்டும், வலி தாங்கும் மூங்கில் புல்லாங்குழல், நலம் தரும் நட்பு” கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்க வேண்டிய ஒரு சிறந்த திரைப்படம்.

error: Content is protected !!