‘சிங்காரம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட்,  ஜாவா சுந்தரேசன், படவா கோபி, விச்சு,  செண்ட்ராயன், சரவணசக்தி, டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், கே.எம். கணேஷ்கர், ஹலோ கந்தசாமி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கே.வி. கதிர்வேலு.

ஒளிப்பதிவாளர் :- பிரசன்னா எஸ். குமார்.

படத்தொகுப்பாளர் :- லாரன்ஷ் கிஷோர்.

இசையமைப்பாளர் :- சாம் சி. எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ராக் புரொடக்‌ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் – ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி.

மக்கள் தொடர்பு :- ரியாஸ் கே அஹமத்.

வெளியீட்டு தேதி :- 30 அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  2.75./5.

தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை என்ற அடையாளத்தைக் கடந்து, அவ்வப்போது அழுத்தமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் யோகி பாபு. அந்த வரிசையில், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் நரிக்குறவர் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலிகளையும், உரிமைக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சிங்காரம்’.

1990-களின் பின்னணியில் நகரும் கதை, வாழ்வாதாரத்திற்காக ஊர் ஊராகப் பயணிக்கும் நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் கே.வி. கதிர்வேலு.

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த கதையின் நாயகன் யோகி பாபு, தனது தாய், தந்தை, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஊர்களாக சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தங்களை சக மனிதர்கள் என்று பார்க்காமல் பாகுபாடு காட்டுவதை எண்ணி கதையின் நாயகன் யோகி பாபு வருந்துகிறார்.

கதையின் நாயகன் யோகி பாபு மற்றும் அவரது சமூகத்தினர் தங்களுக்கான அடையாளம் இல்லாமலே பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் பதவி நாயகன் ஜோகி பாபுவின் தந்தை எம் எஸ் பாஸ்கருக்கு காலில் பெரிய காயம் இருப்பதால் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் ஆபரேஷன் செய்வதற்கு பணம் தேவை படுகிறது‌.

இந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த கதையின் நாயகன் யோகி பாபுவின் சகோதரிகளை அந்த ஊரில் உள்ள அரசியல்வாதியின் தம்பி தப்பாக நினைத்து கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைக்க இரவு நேரத்தில் கதாநாயகன் யோகி பாபுவின் சகோதரிகள் இந்த விஷயத்தை பற்றி பேச அதை எம் எஸ் பாஸ்கர் கேட்க மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த நிலையில், நாயகன் யோகி பாபுவின் தந்தை எம் எஸ் பாஸ்கர் வாங்கி வைத்திருந்த லாட்டரி சீட் மூலம் கதையின் நாயகன் யோகி பாபு கோடீஸ்வரராகி விடுகிறார்.

கதையின் நாயகன் யோகி பாபு மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆனாலும் அவருடைய வாழ்க்கை மாறினாலும், அவர்களது  சமுகத்தினரிடத்தில் காட்டப்படும் பாகுபாடு மட்டும் எந்த நிலையிலும் மாறாமல் இருந்து வருகிறது.

பணத்தால் தனக்கு கிடைத்த கோடீஸ்வரன் என்ற  அடையாளமும், மரியாதையும் தனது சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என  கதையின் நாயகன் யோகி பாபு, விரும்புகிறார் ‌

தனது சமூகத்தினருக்கு  மரியாதையும் அடையாளமும் கிடைக்க வேண்டும் என நினைத்த கதையின் நாயகன் யோகி பாபு நினைத்த காரியம் நடப்பதற்கு ஒரு வாய்ப்பு ஒன்று  அமைகிறது.

கதையின் நாயகன் யோகி பாபுவிற்க்கு கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது சமூகத்திற்கான மாற்றத்தை உருவாக்கினாரா?, மாற்றத்தை உருவாக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘சிங்காரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சிங்காரம்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி வார்த்தைகளை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு,
செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து ரசிகர்கள் பாராட்டு பெறுகிறார்.

இந்த இந்த சிங்காரம் திரைப்படத்தின் நடித்திருக்கும் மற்ற அனைத்து வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்செண்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, செண்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு மூலம்  காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக திரைப்படம் ஆக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையை சிறப்பான திரைக்கதையில் இன பாகுபாட்டினால் பாதிக்கப்படும் மக்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்  இயக்குநர் கே.வி. கதிர்வேலு,

மொத்தத்தில், பணம் ஒருவனைப் பணக்காரனாக்கலாம்… ஆனால் சமூகம் அவனுக்குக் கொடுக்கும் மரியாதையைப் பெற இன்னும் எத்தனை காலங்கள் தான் போராட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதே ‘சிங்காரம்’ எழுப்பும் கேள்வி!

CLOSE
CLOSE
error: Content is protected !!