‘நூறு கோடி வானவில்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், எம். ரினில், விஜே பார்வதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சசி.

ஒளிப்பதிவாளர் :- பிரசன்னா எஸ். குமார்.

படத்தொகுப்பாளர் :- எம். சுபராக்.

இசையமைப்பாளர் :- சித்து குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- மாதவ் மீடியா | அருண் அருணாசலம்.

தயாரிப்பாளர்கள் :- பாலாஜி காப்பா | அருண் அருணாசலம்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

வெளியீட்டு தேதி :- 06  நவம்பர்  2026.

ரேட்டிங் :-  3.25./5.

காதல் என்பது ஒருவரை ஒருவர் விரும்புவதோடு முடிந்து விடுவதில்லை. எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகள், மனமாற்றங்கள் எனப் பல உணர்வுகளைக் கடந்து பயணிப்பதுதான் காதல். அத்தகைய உணர்வுபூர்வமான காதல் கதையை கோவாவின் அழகிய பின்னணியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சசி.

மும்பையில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரியும் வரும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்,  தனது வேலையிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் ஒருவராக இருந்து வருகிறார்

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், கோவாவிற்க்கு தொலைக்காட்சியில் புதியதாக வைரலாக கூடிய ஒரு ப்ரோக்ராம் கொடுக்க வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனம் கூற  அந்த இந்த ப்ரோக்ராம் படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார்.

கோவாவில் டூரிஸ்ட் கைடாக பணி புரிந்து கொண்டிருக்கும்  கதாநாயகி சித்தி இத்னானியை சிக்னலில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் சந்திக்கிறார்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கதாநாயகி சித்தி இத்னானி இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பு மெல்ல காதலாக மாறுகிறது.

ஆனால், கதாநாயகி சித்தி இத்னானி வாழ்க்கையில் ஏற்கெனவே சிறு வயது முதலே  மற்றொருவர் இருக்கிறார்.

எதிர்பாராத விதமாக விபத்தில் கோமா நிலையில் இருக்கும் அவருடன் கதாநாயகி சித்தி இத்னானி இருக்கும் உறவு, கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மீதான காதல் ஏற்படுகிறது.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மீது உள்ள காதலால் கதாநாயகி சித்தி இத்னானி இருவரும் இணைந்தார்களா?, இணையவில்லையா?, என்பதுதான் இந்த ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் வழக்கம்போல் காதல் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்..

நகைச்சுவை கலந்த காட்சிகளிலும், காதலை வெளிப்படுத்தும் தருணங்களிலும், மனதுக்குள் ஏற்படும் ஏமாற்றங்களை வெளிக்காட்டும் இடங்களிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

இந்த ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானிக்கு இந்த நூறு கோடி வானவில் திரைப்படத்தில் உன்னுடைய நடிப்புத் திறமையை  வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

பழைய காதலுக்கும் புதிய உறவுக்கும் இடையே நடக்கும் மனப் போராட்டத்தில் எந்த காதலை ஏற்றுக் கொள்வது என  முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை மிகவும் அழகாக கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி  வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், எம். ரினில், விஜே பார்வதி, உள்ளிட்டோர் திரைக்கதைக்கு ஏற்றவாறு தங்களுடைய  பங்களிப்பை மிகச் சிறப்பாக  வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு.மூலம்  கோவாவின் இயற்கை அழகையும், வண்ணமயமான இடங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காதல் கதையின் உணர்வுகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, காதல் மற்றும் பிரிவு சார்ந்த காட்சிகளில் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

காதல் கதைக்குள் குடும்பப் பின்னணி, தனிப்பட்ட லட்சியம், பழைய உறவுகளின் தாக்கம் போன்ற அம்சங்களையும் இணைத்திருக்கிறார். ஃபென்னி நடத்தும் ‘ஸ்கூட்டர் கேர்ள்’ நிகழ்ச்சிக்கான யோசனைகளும், வினோ – ஃபென்னி இடையேயான நெருக்கமும் ரசிக்கும்படி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சசி.

மொத்தத்தில், இந்த நூறு கோடி வானவில் – காதலின் நிறங்களுக்குள் சிக்கிக்கொள்ளும் மனங்கள்!கோடி வானவில் திரைப்படம் நூறு கோடி வானவில் – காதலின் நிறங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் மனங்கள்!

CLOSE
CLOSE
error: Content is protected !!