அக்கரன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- M.S. பாஸ்கர், ஆகாஷ் பிரேம் குமார், கபாலி விஸ்வாந்த், வெண்பா, பிரியதர்ஷினி அருணாச்சலம், நமோ நாராயணா, கார்த்திக் சந்திரசேகர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அருண் கே பிரசாத்.
ஒளிப்பதிவாளர் :- எம்.ஏ.ஆனந்த்.
படத்தொகுப்பாளர் :- பி. மணிகண்டன்.
இசையமைப்பாளர் :- எஸ்.ஆர். ஹரி.
தயாரிப்பு நிறுவனம் :- குன்றம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- கே.கே.டி.
தமிழ் திரைப்படங்கள் உள்ள பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை நம்பி திரைப்படம் எடுக்கும் இந்த நேரத்தில் கதையை மட்டுமே நம்பி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.
தன் மனைவியை இழந்து குஸ்தி வாத்தியாரான எம் எஸ் பாஸ்கர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
தன் மூத்த மகளான வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.
ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து நிச்சயதார்த்தம் வரை சென்றதால் நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என் உறுதியாக இருக்கிறார் வெண்பா.
நிச்சயம் செய்த மாப்பிள்ளை கபாலி விஸ்வாந்த் சிறைச்சாலைக்கு சென்றவர் என்பதால் தனக்கு மாப்பிள்ளையாக வரக்கூடாது என எம் எஸ் பாஸ்கர் உறுதியாக இருக்கிறார்.
இதற்கிடையில் எம் எஸ் பாஸ்கரின் இளைய மகளான ப்ரியதர்ஷினி, மருத்துவராக வேண்டும் என்ற கனவில் மருத்துவம் படிப்பதற்காக நீட் நுழைவு தேர்விற்கு தயாராகி வர நீட் தேர்விற்காக ஒரு தனியார் இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாணவர்களும் பத்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்டியூட் நிறுவனம் கேட்பதாக எம் எஸ் பாஸ்கரின் இளைய மகள் ப்ரியதர்ஷினி தனது அக்கா வென்பாவிடம் கைபேசியில் தெரிவிக்கிறார்.
அன்றைய தினமே இளைய மகள் ப்ரியதர்ஷினி படிப்பை முடித்துவிட்டு இன்ஸ்டியூட்டில் இருந்து வீடு திரும்பவில்லை காணாமல் போய்விடுகிறார்.
தனது இளைய மகள் ப்ரியதர்ஷினியை காணவில்லையென்று எம் எஸ் பாஸ்கரும் தனது தங்கையை காணவில்லையென்று வெண்பாவும் துடித்துப் போகிறார்கள்.
காணாமல் போன தனது இளைய மகள் ப்ரியதர்ஷினியை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்துக்கு சென்று வென்பாவும் எம் எஸ் பாஸ்கர் புகார் அளிக்கிறார்கள்.
வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கின்றனர்.
அதன்பிறகு எம் எஸ் பாஸ்கரின் மூத்த மகள் வெண்பாவிற்கும் கபாலி விஸ்வநாத் திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? எம் எஸ் பாஸ்கரின் காணாமல் போன இளைய மகள் பிரியதர்ஷியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த அரக்கன் திரைப்படத்தின் மீதிக் கதை.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர், இந்த அக்கரன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தனது இரண்டு மகள்கள் மீது உள்ள பாசத்தை வெளிக்காட்டும் காட்சிகளாக இருக்கட்டும், இரண்டு மகள்கள் தான் தன் உலகம் என்று வாழ்ந்து வருவதாக இருக்கட்டும் தனது மகள்களுக்கு நடந்ததை நினைத்து மனம் உருகி உடைந்து அழும் காட்சியாக இருக்கட்டும் என பல காட்சிகளின் தனது அனுபவ நடிப்பை எம் எஸ் பாஸ்கர் மிகவும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர், பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான தந்தை கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து திரைப்படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்.
எம்.எஸ். பாஸ்கரின் மூத்த மகளாக வரும் வெண்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காணாமல் போன தனது தங்கையை நினைத்து வெண்பா
மனம் உடையும் காட்சியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
எம் எஸ் பாஸ்கரன் இளைய மகளாக வரும் ப்ரியதர்ஷினி தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக அளவாக செய்து முடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் அரசியல்வாதியாகவே நேர்ந்து விடப்பட்ட நமோ நாராயணனுக்கு, இதிலும் அதே நேர்த்திக்கடன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் அருமையாக அசால்டாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.
வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமாரும், கார்த்திக் சந்திரசேகரும் திரைப்படங்களில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
எம் எஸ் பாஷரின் மூத்த மகள் வெண்பாவின் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி திரைப்படத்தின் திடீர் திருப்பத்தால் மற்றொரு கதையின் நாயகனாக உருவெடுக்கும் கபாலி விஷ்வாந்த், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் கதை ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் எஸ.ஆர்.ஹரி இசை மற்றும் பின்னணி இசை ஆக்ஷன் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பலம் சேர்த்திருக்கிறார்.
திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே திரைப்படம் பார்க்கும் நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் இயக்குநர் அருண் கே.பிரசாத், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் வழக்கமான பழிவாங்கும் கதையாக திரைப்படத்தை நகர்த்தி சென்றாலும், பிளாஷ்பேக் மற்றும் அதில் வரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அமர்ந்திருக்கும் சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
ஆக்ஷன் திரில்லர் ஜானர் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் அருண் கே.பிரசாத், அரசியல், நீட் பயிற்சி மையங்களில் நடக்கும் மோசடி போன்ற விசயங்கள் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருப்பதோடு இறுதியில் ஒரு திருப்பத்தை வைத்து அசத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘அக்கரன்’ சுட்டெரிக்கும் கோடை அக்கினியில் தன் மகளுக்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல் உக்கிரனாக மாறுகிறான்.
ரேட்டிங் :- 3.25/5.











