சபரி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராமன், ஷசாங், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அனில் காட்ஸ்.

ஒளிப்பதிவாளர்கள் :- ராகுல் ஸ்ரீவத்சவ் & நானி சமிடிசெட்டி.

படத்தொகுப்பாளர் :- தர்மேந்திர ககரலா.

இசையமைப்பாளர் :- கோபி சுந்தர்.

தயாரிப்பு நிறுவனம்:- மகா மூவிஸ்.

தயாரிப்பாளர் :- மகேந்திர நாத் கோண்ட்லா.

தன் தந்தை மற்றும் சித்தி எதிர்ப்புடன் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவர் கணேஷ் வெங்கட்ராமன் விவாகரத்து செய்துவிட்டு தனது மகளுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார், தன் மகள்தான் உலகம் என வாழ்ந்து வருகிறார்.

அதே சமயம், கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரிடம் இருந்து அவருடைய மகளை பிரிப்பதற்கு அவரது கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சி செய்கிறார்.

இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் மகள் தன்னுடைய மகள் என சொந்தம் கொண்டாடுவதோடு, அந்த சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் உங்களது மகளை உயிருடன் விட்டு விடுகிறேன் என கூறுகிறார்.

கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரின் மகளை மையம் கோபி சொந்தம் கொண்டாடுவது ஏன்? அதே கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரின் மகளை கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கோடி ரூபாய் பணம் கேட்பது எதற்காக?, தனது செல்ல மகளை மைம் கோபியிடம் இருந்து மீட்டாரா? மீட்கவில்லையா? என்பதுதான் இந்த ‘சபரி’ திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த சபரி திரைப்படத்தில் கதையின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

தன் கணவரின் துணை இல்லாமல் வாழும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார், பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

தன் மகளை பின் தொடரும் மிகப்பெரிய ஆபத்தான மைன் கோப்பியிடமிருந்து செல்ல மகளை காப்பாற்ற போராடும் வரலட்சுமி சரத்குமாரின், நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் இரண்டையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த சபரி திரைப்படத்தில் வில்லனாக மைம் கோபி நடித்திருக்கிறார்.

திரைப்படம் ஆரம்பக் காட்சியிலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும் மைக் கோபியின் கதாபாத்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது.

மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த அவரது நடவடிக்கைகள் அனைத்துக் காட்சிகளிலுமே மிரட்டலாக இருந்தாலும், திரைப்படத்தில் இறுதி கட்ட காட்சியில் கதாபாத்திரம் ஒன்றும் இல்லாமல் ஆகி விடுகிறது.

வரலட்சுமி சரத்குமாரின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாகவும் அருமையாகவும் செய்திருக்கிறார்கள்.

கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்‌ஷாவின் நடிப்பு அருமை.

ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிகவும் மிக அழகாக அமைந்துள்ளது.

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தன் மகளை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை மென்மையாகவும், காட்சிப்படுத்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

தாய் மகள் பாசப் போராட்டத்தை வைத்து , சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் அனில் கட்ஸ்,

மொத்தத்தில், ‘சபரி’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் சவாரி செய்யவில்லை.

ரேட்டிங் 2.25/5

error: Content is protected !!