வல்லவன் வகுத்ததடா திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, regin ரோஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விநாயக் துரை.
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் நல்லமுத்து.
படத்தொகுப்பாளர் :- அஜய்.
இசையமைப்பாளர் :- சகிஷ்னா சேவியர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபோகஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- விநாயக் துரை.
ஏடிஎம் காவலாளியாக பணியாற்றும் அந்த காவலாளியின் இளைய மகள் தனது காதலித்த ஒருவருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாடகை வாகனம் ஓட்டுனராக பணியாற்றுகிறார்.
சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் நிறைமாத கர்ப்பிணியாக தனது கணவருடன் அம்மா வீட்டிற்கு வருகிறார்.
ஒன்பதாவது மாதத்தில் நடக்கும் சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு தாய் வீட்டின் கடமையை செய்வதற்காக பணம் தேவைப்படுவதால் தந்தை பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு வருகிறார்.
அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்து ஒன்று ஏற்படுகிறது.
அந்த விபத்து குறித்தும் , அத்துடன் அவரது தந்தை எடுத்து வந்த இரண்டு லட்சம் ரூபாய் காணாமல் போக தனது தந்தைக்கு நடந்த விபத்தை பற்றி மூத்த மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
அந்த நடந்த விபத்தை பற்றி கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை புகார் மீதுஎன்ன நடவடிக்கை எடுத்தது? விபத்துக்குள்ளான தந்தை காப்பாற்றப்பட்டாரா? காப்பாற்றப்படவில்லையா? அவரைக் காப்பாற்றுவதற்காக தேவைப்பட்ட பணம் மூத்த மகளுக்கு கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த வல்லவன் வகுத்ததடா’ திரைப்படத்தின் திரைக்கதை.
இந்த வள்ளுவன் வகுத்ததடா திரைப்படத்தில் கதாநாயகனாக சரண் தேஜ்ராஜ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சரண் தேஜ்ராஜ் அவருடைய கதாபாத்திரத்தை வந்து மிக சிறப்பாக முடித்து இருக்கிறார்.
இந்த வள்ளுவன் வகுத்ததடா திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக சுவாதி மீனாட்சி நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகி சுவாதி மீனாட்சி ஒவ்வொரு ஆண்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும்போது அவருடைய நடிப்பில் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்.
அறிமுக நடிகை சுவாதி மீனாட்சி இயல்பான நடிப்பால் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறது.
கதாநாயகன் சரண் தேஜ்ராஜ் நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பால் மனதை கவர்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து கதைக்கு ஏற்ப தனது பணியை சிறப்பாகவே செய்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவின் மூலம் பட்ஜெட் திரைப்படம் என தெரிகிறது.
படத்தொகுப்பாளர் அஜயின் பணி நேர்த்தியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியருக்கு இசை மற்றும் பாடல்களுக்கு பெரிய அளவில் மெனக்கிடவில்லை.
இந்த திரைப்படத்திற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் பின்னணி இசையை மட்டுமே கொடுத்து திரைப்படத்திற்கு கை கொடுத்திருக்கிறார்.
பணத்திற்கு பின்னால் திரியும் அனைத்து கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திரைப்படம் என்றாலும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் திரைப்படத்தின் தொடக்க காட்சியிலேயே பணம் யார் கைக்கு கிடைக்கும் என்பது திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களால் எளிதாக யூகித்து விட முடிகிறது.
சுவாரசியம் குறையாமல் டார்க் காமெடி ஜேனரில் நேர்த்தியாக சொல்லப்பட வேண்டிய கதையை மற்றும் திரைக்கதையை இயக்குனருக்கு போதிய அனுபவம் இல்லாததால் இப்படி ஒரு கதையை சொல்லும் போது கூட ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுவதாலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையாமல் செய்யாமல் சோர்வடைய செய்துவிட்டார்.
மொத்தத்தில், இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ திரைப்படம் சுமாராக இருக்கிறது.
ரேட்டிங்:- 2./5.











