அம்புநாடு ஒம்பது குப்பம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75/ 5.

நடிகர் & நடிகைகள் :- சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம், மதன், ரமேஷ், மித்ரன், லோகிதன், மற்றும் பலர்,

எழுத்து & இயக்கம் :- ஜி.ராஜாஜி.

ஒளிப்பதிவாளர் :- ஓ.மகேஷ்.

படத்தொகுப்பாளர் :- பன்னீர் செல்வம்.

இசையமைப்பாளர் :- அந்தோணி தாசன்.

தயாரிப்பு நிறுவனம் :- பி.கே. ஃபிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- பூபதி கார்த்திகேயன்.

ரேட்டிங் :- 1.75/ 5.

சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அருகில் உள்ள பின் தங்கிய கிராமம், பல சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்.

சாதி வேறுபாடு உள்ள ஒரு கிராமத்தில். மேல் சாதி சேர்ந்த மக்களும், கீழ் சாதி மக்கள் எந்த நாளிலும் உயர்ந்து விட கூடாது என மேல் சாதி சேர்ந்தவர்கள் முனைப்போடு இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.

அந்தத் திருவிழாவில் மேல் சாதியை சேர்ந்த மக்களிடையே கோவில் மரியாதை செலுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதே சமயம் கீழ் சாதி சேர்ந்த ஒருவன் கோவிலில் உள்ள பூசாரி கையில் வைத்திருக்கும் தட்டில் விபூதி எடுக்கும் நேரத்தில் தட்டு கீழே தமிழ் விழுந்து விடுவதால், மேல் சாதியினருக்கும் கீழ் சாதியினருக்கும்  கலவரம் வெடிக்கிறது.

இறுதியில் மேல் சாதி மேல் சாதி கலவரம் என்ன ஆனது? கோவில் திருவிழா முறையாக நடைபெற்றதா? நடைபெறவில்லையா? கீழ் சாதி மேல் சாதி பிரச்சனை தீர்ந்ததா? தீரவில்லையா? என்பதுதான் இந்த அம்பு நாடு ஒன்பது குப்பம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் சங்ககிரி மாணிக்கம், மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

சங்ககிரி மாணிக்கம் மனைவியாக நடித்திருக்கும் ஹர்ஷிதாஸ்ரீ, கொடுத்த கதாபாத்திரத்தை நல்லபடியாக நடித்திருக்கிறார்.

விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த அம்புநாடு ஒம்பது குப்பம் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கு புதிய முகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளர் ஓ.மகேஷ் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசையமைப்பாளர் ஆண்டணி தாசின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு ஒட்டவில்லை என்பதுதான் உண்மை.

உண்மை கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ராஜாஜி  ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் பெரியதாக திரைப்படம் ஒர்க்கவுட் ஆகவில்லை.

காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.

சொல்ல வந்த கருத்து நியாயம் என்றாலும், எடுத்த விதம் நியாயம் இல்லாமல் இருக்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து  திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜாஜி.

மொத்தத்தில் இந்த அம்புநாடு ஒம்பது குப்பம்  சாதி பிரச்சனை சொல்லும் திரைப்படம்.