தமிழ்க்குடிமகன் திரைவிமர்சனம் ரேட்டிங்:-2.5./5.

நடிகர் & நடிகைகள் :- சேரன், லால், ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், அருள்தாஸ், ரவிமரியா, ராஜேஷ், மெயில்சாமி, துருவ, தீப்ஷிகா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- இசக்கி கார்வண்ணன்.

ஒளிப்பதிவு :- ராஜேஷ் யாதவ்.

படத்தொகுப்பு :- ஆர்.சுதர்சன்.

இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- லட்சுமி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- எசக்கி கார்வண்ணன்.

ரேட்டிங் :- 2.5./5.

உயர்ந்த சாதியினர் இருக்கும் கிராமத்தில் கதாநாயகன் சேரன் மனைவி, மற்றும் மகன், அம்மா, தங்கை வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த கிராமத்தில் சலவைத் தொழில் மற்றும் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் ஒரே குடும்பமாக கதாநாயகன் சேரனின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக இந்த இறுதி சடங்கு செய்யும் தொழிலை செய்து வருகிறார்கள்.

கதாநாயகன் சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லாமல் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் சேனல் வில்லேஜ் அதிகாரி அரசு வேலையில் தேர்வு எழுதி சேர வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

ஆனால், உயர் சாதியினர் கதாநாயகன் சேரனை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர்.

எப்படியாவது தனது தங்கையை படிக்க வைத்து டாக்டராக வேண்டும் என்ற கனவில் கதாநாயகன் சேரன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் உயர் சாதியை சேர்ந்த லாலின் மகனுக்கும், இறுதிச் சடங்கு செய்யும் குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் சேரனின் தங்கையும் லாலின் மகனும் காதலித்து வருகிறார்கள்

இவர்கள் காதலில் சில பிரச்சினைகள் எழ கதாநாயகன் தங்கையை தெருவில் வைத்து அடித்து விடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க மேலும் உயர் சாதியை சேர்ந்த லாலின் தந்தை இறந்து விடுகிறார்.

அவருக்கு இறுதிக் காரியங்கள் செய்ய கதாநாயகன் சேரன் அடுத்து வர சொல்கிறார்கள்.

ஆனால், கதாநாயகன் சேரன் இனி நான் அந்த இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் தொழிலைச் இனிமேல் செய்யப் போவதில்லை என கூறுகிறார்.

இதனால் ஊருக்குள் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.

ஊரில் உள்ள உயர்ந்த சாதியை சேர்ந்த மக்களிடம் கோபத்துக்கு கதாநாயகன் சேரனின் குடும்பத்தினர் ஆளாகிறார்.

இறுதியில் கதாநாயகன் சேரன் இறுதி சடங்கு செய்யும் தொழிலை செய்தாரா? செய்யவில்லையா? கதாநாயகன் சேரனுக்கு ஊரில் உள்ள உயர்ந்த சாதியினரால் ஏற்பட்ட பிரச்சினை என்ன? என்பதுதான் இந்த தமிழ் குடிமகன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தமிழ் குடிமகன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் சேரன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இயக்குனர் சேரன், தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்து இருக்கிறார்.

தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்க படுவதையும் உணர்வு பூர்வமாக நடிப்பால் கடத்த முயற்சி செய்து இருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இயக்குனர் சேரனின் பாவப்பட்ட முகம் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் அவருடைய பக்குவப்பட்ட நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

அவர் குடும்பத்திற்கு தன் தங்கைக்கு ஏற்பட்டிருக்கும், நிலைமையிலும் கோபத்தை கூட மிக அமைதியாகவும், மரியாதையாகவும் அவர் வெளிப்படுத்துவது ஏன் என்று தான் தெரியவில்லை.

ஆனால், அனைத்து காட்சிகளிலும் அவர் ஒரே மாதிரியாக இருப்பது தான் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுக்கிறது.

வேல ராமமூர்த்தி சாதி வெறியால் தன் மகளை இழந்து சாதி வெறி இல்லாமல் திருந்தி மக்களோடு மக்களாக  வாழ்ந்து வருகிறார்.

அந்த ஊரில் கதாநாயகன் சேரனுக்கு பாசத்துடன் அரவணைக்கும் ஒரே துணை ஊர் பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் வேல ராமமூர்த்தி.

வேல ராமமூர்த்தி இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சேரனுக்கு உறுதுணையாக நல்ல ஒரு கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் சேரனுக்கு மனைவியாக வரும் ஸ்ரீ பிரியங்கா பெரியதாக திரைப்படத்தில் வேலை இல்லை.

வில்லனாக வரும் லால் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அருள்தாஸின் நடிப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

திரைபபடத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருகிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பில் மூலம் கவர்ந்து இருக்கிறார்.

வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

எதிர்க்கட்சி வக்கீலாக வரும் ரவி மரியா வழக்கமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசை மற்றும் பாடல்கள்
பின்னணி இசை மூலமாக திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

தன் குல தொழிலை மாற்ற நினைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

சிறந்த கதையை கையில் எடுத்த இயக்குனர், திரைக்கதையில் தெளிவில்லாமாலும் பெரிய நடிகர்களை வைத்து சரியாக கையாள தெரியாமலும் இந்த தமிழ் குடிமகன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

மொத்தத்தில் தமிழ்க் குடிமகன் – திரைப்படம் சாதி வெறி பிடித்து மாறாமல் இருக்கும் மக்களை மாற்றுவதற்கான மற்றொரு முயற்சி