‘அனந்தா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய் ஜீ மகேந்திரா, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுரேஷ் கிருஷ்ணா.
ஒளிப்பதிவாளர் :- சஞ்சய் பி.எல்.
படத்தொகுப்பாளர் :- எஸ் ரிச்சர்ட்.
இசையமைப்பாளர் :- தேவா.
தயாரிப்பு நிறுவனம் :-
தயாரிப்பாளர் :- கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி.
ரேட்டிங் :- 3./5.
புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதைதான் இந்த அனந்தா திரைப்படம்.
புட்டபர்த்தி சத்யசாய் பாபாவின் இறுதிக் காலத்தில் தான் ஆத்ம பக்தர்களாக ஜந்து பேரை இந்தியாவில் இருந்து புட்டபர்த்தி சத்யசாய் பாபாவின் ஆலயத்திற்கு அழைக்கிறார்.
புட்டபார்த்தியில் உள்ள சத்யசாய் பாபா ஒருமுறை கடைசியாக ஆசிரமத்திற்கு வருமாறு கூறியதாக ஆஸ்ரமத்தில் உள்ள நிர்வாகி நிழல்கள் ரவி தெரிவிக்க, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்று கூடுகிறார்கள்.
மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு, காசியை சேர்ந்த சுஹாசினி மணிரத்னம், பாலக்காட்டைச் சேர்ந்த ஒய் ஜீ மகேந்திரா, ஸ்ரீ ரஞ்சனி, சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாசலம், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்களது வாழ்க்கையில் புட்டபார்த்தி சத்யசாய் பாபா ஏற்படுத்திய அற்புத மாற்றங்களை அனுபவக் கதைகளாக அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
முதல் கதை.
மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் பாபா நடத்திய அற்புதங்களை ஜெகபதி பாபு சொல்ல, வழக்கமாக திரைப்படங்களில் வில்லனாக குற்றச் செயல்கள் புரியும் ஜெகபதி பாபு இதில் நல்லவராகவும், பக்தி மானாகவும் வந்து கொள்ளையர்களை நல்வழிப் படுத்துவதே அற்புதமான நடிப்பு ஆச்சரியம்தான்.
இரண்டாவது கதை.
பாலக்காட்டைச் சேர்ந்த ஒய் ஜீ மகேந்திரா, ஸ்ரீ ரஞ்சனி, தம்பதிகளில் 30வது திருமண நாளில் தான் மனைவி இறந்து போக, தான் காரணத்தை புட்டபர்த்தி சென்று தெரிந்து கொண்டதை ஒய் ஜி மகேந்திரா சொல்கிறார்.
ஒய். ஜி மகேந்திராவின் பாலக்காட்டு மலையாளம் கலந்த தமிழில் பேசிய நடிப்பு பற்றி ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒய். ஜி மகேந்திராவின் அவரது மனைவி ஶ்ரீ ரஞ்சனியில் நெகிழ்ச்சியான நடிப்பும் அருமையாக உள்ளது.
மூன்றாவது கதை.
சென்னையில் வசிக்கும் பரதநாட்டியக் கலைஞரான அபிராமி வெங்கடாச்சலம் பிரபல பரதநாட்டிய போட்டியில் கலந்து செல்லும் இடத்தில் காலில் அடிபட்டு ஆட முடியாத நிலை ஏற்படுகிறது.
அவரது அப்பா தலைவாசல் விஜய் கடவுளை திட்டுகிறார்.
புட்டபார்த்தி சத்யசாய் பாபா தனது சக்தியை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறார்.
நான்காவது கதை.
காசியை சேர்ந்த சுகாசினிக்கு பல்லாண்டுகளாக குழந்தை இல்லாமல் பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் அடைகிறார்.
ஒரு கட்டத்தில் அந்த சாய்பாபா கொடுத்த குழந்தைக்கு உயிர் பிரச்சனை ஏற்படுகிறது.
சுஹாசினி தனது ஒரே மகன் காசி கங்கை நிதியில் முழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று கூற இதனையடுத்து புட்டபார்த்தி சத்யசாய் பாபாவிடம் சுஹாசினி சரணடைகிறார்.
அந்தக் குழந்தையை பாபா எப்படி காப்பாற்றினார் என்பதை சுகாசினி புட்டபார்த்தி சத்யசாய் பாபா சக்தியை எப்படி வெளிப்படுத்துகிறார்.
ஐந்தாவது கதை.
அதேபோல் தொழிலதிபர் ஜெகபதி பாபுக்கு வாழ்வில் எப்படி திருப்பம் கிடைத்தது, ஒய் ஜி மகேந்திரன் தனது மனைவியை பறிகொடுத்தபோது நடந்த சம்பவம் என்ன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடனப் பெண்ணுக்கு நடந்த அதிசயம் என்ன உள்ளிட்ட ஐந்து முக்கிய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் வீடு காட்டு தீயால் பாதிக்கப்படுகிறது.
இந்த காட்டுத்தீயில் ஆபத்தில் இருந்து புட்டபார்த்தி சத்யசாய் பாபா தன் பக்தர்களை எப்படி எல்லாம் காப்பாற்றினார்.
என்பதுதான் இந்த ஆனந்தா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஆனந்தா திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரா, ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி மணிரத்னம், அபிராமி வெங்கடாச்சலம்,, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் என திரைப்படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சஞ்சய் பி.எல் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
புட்டபார்த்தி அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களின் வாழ்க்கை நடந்த அனுபவங்களை மையமாக வைத்து இந்த அனந்தா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
மொத்தத்தில், இந்த ‘ஆனந்தா’ புட்டபர்த்தி சத்யசாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது











