தி டோர் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பாவனா, கணேஷ் வெங்கடராமன், ஜெய பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்த குமார், கிரீஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷ்னி, சித்திக், வினோலியா,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெய்தேவ்.

ஒளிப்பதிவாளர் :- கௌதம் ஜி.

படத்தொகுப்பாளர் :- அதுல் விஜய்.

இசையமைப்பாளர் :- வருண் உன்னி.

தயாரிப்பு நிறுவனம்:- ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி.

தயாரிப்பாளர் :- நவீன் ராஜன்.

ரேட்டிங் :- 3./5.

கட்டிடக்கலை நிபுணரான கதாநாயகி பாவனா, புதியதாக கட்டப் போகும் அடுக்குமாடி குடியிருப்பிற்காக டிசைன் ஒன்றை வடிவுமைக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டப் போகும் இடத்தில் பழங்காலத்து வீடு ஒன்று இருக்க அந்த இடத்தில் பழமையான ஒரு அம்மன் கோவில் ஒன்றை கட்டிட பணிக்காக இடித்து விடுகிறார்கள்.

அந்த அம்மன் கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கதாநாயகி பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை தொடங்கும் போது, கதாநாயகி பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன வென்று கதாநாயகி பாவனா தெரிந்து கொள்வதற்கு முயற்சிக்கும் போது, கதாநாயகி பாவனா சென்று சந்திக்கும் நபர்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள்.

கதாநாயகி பாவனா சந்திக்கும் நபர்களின் இறப்புக்கு கதாநாயகி பாவனாவுக்கு என்ன சம்மந்தம்?, பின் தொடரும் அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? என்பதுதான் இந்த ‘தி டோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தி டோர் திரைப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடித்திருக்கிறார்.

தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும் கதாநாயகி பாவனாவின் நடிப்பு அற்புதமாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் கதாநாயகி பாவனா கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, ஒளிப்பதிவு மூலம் பசுமை நிறைந்த கொடைக்கானல் ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் வருண் உன்னியின் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து உள்ளது

திகில் மற்றும் கிரைம் திரில்லர் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து, அவற்றை இலகுவான முறையில் நகர்த்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜெய்தேவ்.

மொத்தத்தில், ‘தி டோர்’ திகில் திரைப்படத்தில் பயம் கம்மியாக உள்ளது.