“ரணம் அறம் தவறேல்” திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரணிதி, தாசரதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விளங்கு கிச்சா ரவி, தயாளன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஷெரீஃப்.
ஒளிப்பதிவாளர் :- பாலாஜி கே ராஜா.
படத்தொகுப்பாளர் :- முனீஸ்.
இசையமைப்பாளர் :- அரோல் கொரேல்லி.
தயாரிப்பு நிறுவனம் :- மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- மது நாகராஜன்.
தமிழ் திரைப்பட உலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 25 வது திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’.
அவருடைய திரையுலக பயணத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன், ஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்சன் ஆர்ட்டிஸ்ட் எனும் அரிய புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இந்த “ரணம் அறம் தவறேல்” திரைப்படம் அமைந்திருக்கிறது.
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் இறந்தவர்களின் கால், கை, வேறு உடம்பு என அனைத்து பாகங்களும் தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் அட்டைப் பெட்டியில் காவல் நிலையம் வாசலில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்படுகிறார்கள்.
காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை மற்றும் சிதைந்த இறந்த பிணங்களின் உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான கதாநாயகன் வைபவ் விசாரணைக்கு காவல்துறையினருக்கு உதவியாக இருக்கிறார்.
அதேசமயம் இந்த கொடூர செயல்களை செய்து வரும் கொலைகாரனை பற்றி காவல்துறை ஆய்வாளர் பத்மன் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
கதாநாயகன் வைபவின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நபர்களுடையது என கண்டுபிடிக்கிறார்.
அதேசமயம் இந்த வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளர் பத்மன் காணாமல் போகிறார்.
இதனால் அந்த வழக்கு புதிய காவல்துறை அதிகாரியான கதாநாயகி தான்யா ஹோப் கைவசம் ஒப்படைக்கப்படுகிறது.
இவரும் கதாநாயகன் வைபவ் மற்றும் கதாநாயகி தான்யா ஹோப் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சியை மேற்கொள்கிறார்கள்.
கதாநாயகன் வைபவ் மற்றும் கதாநாயகி தான்யா ஹோப் இருவரும் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும் போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன.
இறுதியாக இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? இப்படி கொடூரமாக கொலை செய்யும் உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த ரணம் அறம் தவறேல் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “ரணம் அறம் தவறேல்” திரைப்படத்தில் கதாநாயகனாக வைபவ் நடித்திருக்கிறார்.
சால்ட் & பெப்பர் லுக்கில் கதைக்கேற்ற கதாநாயகன் வைபவ் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்
கதாநாயகன் வைபவ். எமோஷன்ஸ் காட்சிகளில் ஒரு விதமான அப்பாவித்தனமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
இந்த “ரணம் அறம் தவறேல்” திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப். நடித்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் கதாநாயகி தன்யா ஹோப் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
மற்றொரு கதாநாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகி நந்திதா ஸ்வேதா, இளம் விதவையாக 13 வயது பெண்ணுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியம் என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவரது நடிப்பு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மற்றொரு கதாநாயகியாக வரும் நந்திதா ஸ்வேதா கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார்.
இறந்த தனது மகளை இழந்து கண் கலங்கும் காட்சிகளில் திரைப்படம் பார்த்தவரக்ள் அனைவரின் கண்களையும் குளமாக்கி விட்டார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக வரும் சரஸ் மேனன் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார்.
மூன்று கதாநாயகிகளுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் வரும் தாசரதி அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து இறந்த பிரேதங்களை உறவு கொள்ளும் கதாபாத்திரத்தில் மிகவும் கொடூரமாக மிக மிரட்டலாக நடித்திருக்கிறார்.
நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் வில்லன் தாசரதி இவருடைய கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் மிக விரிவாக காட்சிப்படுத்திருக்கலாம்.
இறந்த பிணங்களை பிணவறையில் இருக்கும் பிணம் உடைப்பவர் மட்டுமே இறந்த பிணத்தை உடலுறவு கொள்வதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் மருத்துவம் பார்க்கும் மருத்துவரே (வில்லன் தாசரதி) இறந்த பிணங்களை உடலுறவு கொள்வது மிகவும் கொடூரமானது.
மற்றொரு கதாநாயகி நந்திதா ஸ்வேதாவின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரனிதி, கதாநாயகன் வைபவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டார்லிங் மதன், காவலராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் என அனைத்து கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, இரவு நேர காட்சிகளை அளவான லைட்டிங் அமைத்து மிகவும் நேர்த்தியாக திரைப்படமாக்கி, காட்சிகளோடு ரசிகர்களை பயணிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, பாடலை கலர்புல்லான ஒளிப்பதிவை கொடுத்து திரைப்படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் அரோல் கொரோலியின்பின்னணி இசை க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கிறார்.
திரைப்படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த இடத்திலும் திரைக்கதை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் நகர்வதோடு, திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கும், குற்றத்திற்கும் ஏதோ பின்னணி இருக்கிறது, என்பது போல் காட்சிகளை வடிவமைத்து நம்மை யூகிக்க வைக்கும் இயக்குநர் ஷெரிஃபை பாராட்டியாக வேண்டும்.
இப்படி முழு திரைப்படத்தையும் படு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ஷெரிஃப், இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை பார்த்த திருப்தியோடு, இதுவரை திரைப்பட உலகில் சொல்லப்படாத ஒரு குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த “ரணம் அறம் தவறேல்” 2024ஆம் ஆண்டு முதல் சிறந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.











