அரண்மனை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சுந்தர் C, தமன்னா, ராஷி கண்ணா, குஷ்பூ, சிம்ரன், சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, K.S. ரவிக்குமார், டெல்லி கணேஷ், ஜெய பிரகாஷ், கோவை சரளா, ராஜேந்திரன், யோகி பாபு, VTV கணேஷ், கருடா ராம், சிங்கம் புலி, தேவா நந்தா, சஞ்சய், விச்சு விஸ்வநாதன், யாதின் சுரேகர்
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுந்தர்.C.
ஒளிப்பதிவாளர் :- E.கிருஷ்ண சாமி.
படத்தொகுப்பாளர் :- பென்னி ஒலிவர்.
இசையமைப்பாளர் :- ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு நிறுவனம் :- அவ்னி சினி மேக்ஸ் (பி) லிமிடட் மற்றும்
பென்ஸ் மீடியா (பி) லிமிடட்.
தயாரிப்பாளர்கள் :- குஷ்பு சுந்தர், A.C.சண்முகம், A.C.S. அருண் குமார்.
கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சந்தோஷ் பிரதாப் மற்றும் அவருடைய மனைவி கதாநாயகி தமன்னா இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஒரு பழைய அரண்மனையை சில பழுது பார்க்கும் பணிகளை செய்து அந்த அரண்மனை புதுப்பித்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப்.
அந்தப் பழைய அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி கதாநாயகி ராஷி கண்ணா ஆகியோரும் அதே அரண்மனையில் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, திடீரென்று ஒரு நாள் காலை வாக்கிங் செல்லும் போது தீய அமானுஷ்ய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார்.
சந்தோஷ் பிரதாப் உருவத்தில் அந்த அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய அமானுஷ்ய சக்தி அவருடைய குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது.
அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து தன் குழந்தைகளை காப்பாற்ற போராடும் தாய் கதாநாயகி தமன்னா மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
கதாநாயகி தமன்னாவின் கொடூரமான கொலையை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்து விடுகிறார்கள்.
தனது தங்கை கதாநாயகி தமன்னா தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்டு அந்த கிராமத்துக்கு வரும் கதாநாயகி தமன்னாவின் அண்ணன் கதாநாயகன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் மாப்பிள்ளை கொலைக்கான பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை தெரிந்து கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
அதே சமயத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
அந்த கிராமத்தில் நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் கதாநாயகன் சுந்தர்.சி-க்கு தீய அமானுஷ்ய சக்தி பற்றி தெரிய வருகிறது.
அந்த தீய அமானுஷ்ய சக்தி, தனது தங்கை கதாநாயகி தமன்னா, மாப்பிள்ளை சந்தோஷ் பிரதாப் மற்றும் கிராம தலைவரின் மகன் அதேபோல் தனது தங்கையின் மகளையும் அந்த அமானுஷ்ய சக்தி கொலை செய்ய முயற்சிப்பதையும் கதாநாயகன் சுந்தர் சி அறிந்துக் கொள்கிறார்.
அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து கதாநாயகன் சுந்தர்.சி. தன் தங்கையின் மகளை காப்பாற்ற போராடுகிறார்.
அந்த தீய அமானுஷ்ய சக்தியை எப்படி அழிக்கிறார்? தீய அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? தன் தங்கையின் மகளை கதாநாயகன் சுந்தர் சி எப்படி காப்பாற்றினாரா? காப்பாற்ற வில்லையா? என்பதுதான் இந்த அரண்மனை 4’ திரைப்படத்தின் மீதி கதை.
இந்த அரண்மனை போர் திரைப்படத்தில் கதாநாயகன் ஆக சுந்தர் சி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சுந்தர்.சி, தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தனது நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை தன் தங்கையை நினைத்து வருந்துவது காட்சிகளில் வழக்கம் போல் வலம் வரும் கதாநாயகன் சுந்தர்.சி, காதல் காட்சிகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை.
ஏனென்றால் இந்த திரைப்படத்தில் அழகான கதாநாயகி இருந்தும் காதல் காட்சிகள் இல்லை.
கதாநாயகி தமன்னா, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கும் அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம், குழந்தைகள் மீது உள்ள பாசம் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் ஒரே காட்சியில் நடிப்பின் மூலம் ஸஅழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாயாகவும், பேயாகவும் தனது பணியை மிகவும் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
திரைப்படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் வரும் பாடலில் சிம்ரன் மற்றும் குஷ்பு ஆட்டம் போட வைக்கவும் திரையரங்கில் விசில் சத்தங்கள் காதை பிளக்கிறது.
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி அனைத்தும் மெய் மறந்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.
இவர்களுடன் இணைந்து மறைந்த சேசுவின் காட்சிகள் காமெடி மிகப்பெரிய அளவில் போனஸாக அமைந்திருக்கிறது.
சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, K.S. ரவிக்குமார், டெல்லி கணேஷ், ஜெய பிரகாஷ், ராஜேந்திரன், கருடா ராம், சிங்கம் புலி, தேவா நந்தா, சஞ்சய், விச்சு விஸ்வநாதன், யாதின் சுரேகர் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள்.
கலை இயக்குநர் குரு ராஜ் கலைவண்ணத்தில் காடு போன்று உள்ள காட்சிகள் இறுதிக் காட்சியில் வரும் அம்மன் சிலை மற்றும் அசுரன் சிலை, மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் இ. கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் திரைப்படமாக்கி இருப்பதோடு, திரைப்படத்திற்காக செய்த செலவுகளை காட்சிகளில் கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை மற்றும் பாடல்கள் திரைப்படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிலும், இறுதிக் காட்சியில் வரும் அம்மன் பாடல் ஆக்ரோஷமாகவும், பக்தி பரவசத்துடனும் அமைந்திருக்கிறது.
திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை மிக அருமையாக அமைத்துள்ளார்.
இந்த அரண்மனை 4 திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் மிக முக்கியமான ஒன்று அப்படிப்பட்ட திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையும் மற்றும் வசனத்தையும் இயக்குனர் வெங்கட் ராகவன் மிக அருமையாக கையாண்டு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி வழக்கம் போல் லாஜிக்குகள் அனைத்தையும் ஓரம் தள்ளி வைத்துவிட்டு, மக்களுக்கான பொழுதுபோக்கு என்ற மேஜிக்கை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு மிக பிரமாண்டமாகவும் அருமையாகவும் இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் – இந்த ‘அரண்மனை 4’ படம் கோடை விடுமுறையை குடும்பத்துடன் சென்று குழந்தைகளை குஷிப்படுத்தி கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
ரேட்டிங் 4./5











