’ஏ.ஆர்.எம்’ (Ajayante Randam Moshanam – ARM) திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- டொவினோ தாமஸ், கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சைட், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜித்தின் லால்.

ஒளிப்பதிவாளர் :- ஜோமோன் டி ஜான் isc.

படத்தொகுப்பாளர் :- ஷமீர் முஹம்மது.

இசையமைப்பாளர் :- திபு நினன் தாமஸ்.

தயாரிப்பு நிறுவனம்:- மேஜிக் ஃப்ரேம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ்.

ரேட்டிங் :- 3.75./5.

மலையாள திரைப்பட உலகில் நடிகர் டொவினோ தாமஸின் 50வது திரைப்படமான ஏஆர்எம் (அஜயந்தே ரண்டம் மோஷனம்) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கேரளாவின் சியோதிகாவைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் கதாநாயகன் டோவினோ தாமஸ் கதாநாயகி கிருத்தி ஷெட்டி காதலித்து வருகிறார.

பல காலங்களுக்கு முன்பு கிராமக் கோவிலில் இருந்து விலையுயர்ந்த ஸ்ரீபூதி விளக்கைத் திருடிச் சென்ற அவரது தாத்தா மணியனின் (டோவினோ தாமஸ்) செய்த செயலால் கெட்டப் பெயரால் அவரது வாழ்க்கையில் ஊர் மக்கள் திருடனாகவே பார்த்து அவமானப்படுத்துகிறார்கள்.

இதற்கிடையே, விலையுயர்ந்த ஸ்ரீபூதி அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஸ்ரீபூதி விளக்கு இருக்கும் ஊருக்கு வரும் வில்லன் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை கதாநாயகன் டோவினோ தாமஸ் மூலமாகவே விலையுயர்ந்த ஸ்ரீபூதி விளக்கை திருட வைக்கவும் முயற்சி செய்கிறார் ஹரிஷ் உத்தமன்..

கதாநாயகன் டோவினோ தாமஸ் அந்த அதிசய விளக்கு கிடைத்ததா?, கிடைக்கவில்லையா?, கதாநாயகன் டோவினோ தாமஸின் கதாநாயகி கிர்த்தி ஷெட்டி காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா? என்பதுதான் இந்த ‘ஏ.ஆர்.எம் திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த ஏ.ஆர்.எம் திரைப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ், நடித்து இருக்கிறார்

கதாநாயகனாக நடித்திருக்கும் டொவினோ தாமஸ், காதல், வில்லத்தனம், வெள்ளந்தியான சுபாவம் என அனைத்தையும் மிக இயல்பாக கையாண்டு இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மணியன் மற்றும் குஞ்சிக்கெழு அஜயன் அழகிய முன்று
கதாபாத்திரத்தில் ஆக்ரோஷம் நிறைந்த மனிதராக நடிப்பிலும், உடல் மொழியிலும் வெறித்தனமாக நடித்திருக்கிறார்.

இந்த ஏ ஆர் எம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்‌ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களின் நடிப்பும் கதாபாத்திரத்தை எற்றப்போல் அளவாக அமைந்திருக்கிறது.

பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற கதாபாத்திரங்களும் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் அழகான கேரள பகுதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் மிகவும் சிறப்பாக மிக அழகாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்கள் மற்றும், பின்னணி இசை திரைப்படத்தின் தரத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜிதின் லால், ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் திரைப்பட ரசிகர்களை ஒட்டுமொத்த கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்து விடுவதோடு, மட்டுமல்லாமல் பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே திரைப்படம் பார்க்கும் நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடுகிறார்.

மொத்தத்தில், இந்த ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் திரையரங்கில் சென்று கண்டிப்பாக பார்க்க கூடிய சிறந்த படைப்பு.