எக்ஸ்ட்ரீம் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நக்ஷத்ரா, ராஜ் குமார் நாகராஜ், அனந்த் நாக், அமிர்தா ஹால்டர், சிவம் தேவ், ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர், ஜெயராஜ் ஜெய, குட்டி கமலாத்மிகா, மாஸ்டர் கோகுல், தன சேகர், ஓட்டேரி சிவா, சந்திர மௌலி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – ராஜவேல் கிருஷ்ணா.

ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா.

படத்தொகுப்பாளர் :- ராம்கோபி.

இசையமைப்பாளர் – ஆர்.எஸ். ராஜ்பிரதாப்.

தயாரிப்பு நிறுவனம் – சீகர்
பிக்​சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் – கமலா குமாரி , ராஜ்குமார்.என்.

ரேட்டிங் – 2.5./5.

சிட்டிக்குள் புதியதாக கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள கான்கிரீட் போடப்பட்ட தூணில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது.

அந்த பெண்ணை கொலை செய்யப்பட்டு, அந்த கான்கிரீட் கலவையோடு சேர்த்து அந்தத் தூணில் வைத்துள்ளனர்.

கதாநாயகன் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் நாகராஜ் இந்த பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை கொல்லப்பட்டது வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான அபிநக்‌ஷத்ரா என்று தெரிய வருகிறது.

இச்சமயத்தில், அந்த காவல்நிலையத்திற்கு புதிதாக காவல்துறை துணை ஆய்வாளராக ரக்ஷிதா மஹாலஷ்மி பணிக்கு சேருகிறார்.

அபி நக்‌ஷத்ராவின் கொலை வழக்கை பற்றி காவல்துறை துணை ஆய்வாளராக ரக்ஷிதா மஹாலஷ்மி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில் குற்றவாளிகளை கதாநாயகன் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் நாகராஜ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளராக ரக்ஷிதா மஹாலஷ்மி இருவரும் இணைந்து கொலையாளியை கண்டு பிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜ்குமார் நாகராஜ் நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் சத்தய சீலான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், பார்ப்பதற்கு நல்ல உடல்வாகுடன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் அரசியல்வாதி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் நடிக்கலாம்.

காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, காவல்துறை உடையில் கம்பீரமாக மிக அழகாகவும் நடித்து இருக்கிறார்.

கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா, சில பெண்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படும் அப்பாவி ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

அம்ரிதா ஹல்டர், மாடர்ன் என்ற பெயரில் பார்ப்பவர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் மாடலாக உடை உடுத்தும் பெண்ணாக கவர்ச்சியில் தாராளம் காட்டி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவம் தேவ், ஆனந்த் நாக், அபி நட்சத்திரா அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரிதா, ராஜ்குமார் நாகராஜின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஸ்வரி ராஜி உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு என்ன தேவையோ அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் டிஜே பாலாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் எம்.எஸ். ராஜ்பிரதாப், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் திரைக்கதைக்கு உயிரோட்ட கொடுத்து இருக்கிறார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது மற்றும் போதை கலாச்சாரம் அதிகரிப்பது போன்ற விசயங்களை பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், கதைக்கு தேவையானதாகவும் காட்சிப்படுத்தி அருமையாக இருக்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா,

மொத்தத்தில், ‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்படம் பார்த்தவர்களை எக்ஸலண்ட் என கூறுவார்கள்.