‘சொர்க்கவாசல்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நாட்டி, சனியா ஐயப்பன், ஷரஃப் தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராகவேந்திரா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், மவுரிஷ், சாமுவேல் ராபின்சன், காக்கா கோபால், பொற்கொடி, பரம், சந்தானபாரதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சித்தார்த் விஸ்வநாத்.

ஒளிப்பதிவாளர் :- பிரின்ஸ் ஆண்டர்சன்.

படத்தொகுப்பாளர் :- செல்வா ஆர்.கே.

இசையமைப்பாளர் :- கிறிஸ்டோ சேவியர்.

தயாரிப்பு நிறுவனம் :- திங்க் ஸ்டுடியோஸ், ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்.

ரேட்டிங்:- 3.75./5.

1999 ஆம் ஆண்டு காலகட்டங்களில் சென்னை சென்ட்ரலில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குள் நடந்த மிகப்பெரிய கலவரத்தை மையமாகக் கொண்டு கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்..

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி, தன் தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டி கடையை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஆர் ஜே பாலாஜியின் கனவு தனியாக ஒரு ஹோட்டல் தொடங்க வேண்டும் என்பதுதான் என வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜிக்கு தெரிந்த வங்கி அதிகாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

அந்தக் கொலையை செய்தது கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி தான் என அவரை கைது செய்து மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறார்.

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி, செய்யாத கொலைக்கு குற்றவாளியாக மத்திய சிறைச் சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

மத்திய சிறைச்சாலையில் மிகப்பெரிய தாவாவான செல்வராகவன் மத்திய சிறைச்சாலையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், மத்திய சிறைச்சாலையில் புதிதாக வரும் சிறைத்துறை அதிகாரிக்கும் மிகப்பெரிய தாவாவான செல்வராகவனுக்கும் மோதல் ஏற்படுகிறது.

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி நான் குற்றம் அற்றவன் நடந்த அந்தக் கொலையை நான் செய்யவில்லை என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜியின் எண்ணத்தை புரிந்துக்கொள்ளும் சிறைத்துறை அதிகாரி, கதாநாயகன் ஆர்ஜே பாலாஜியை வைத்தே, மிகப்பெரிய தாவாவான செல்வராகனை திருத்துக் கட்டுவதற்கு திட்டம் திட்டுகிறார்.

சிறைத்துறை அதிகாரியின் திட்டம் நிறைவேறாமல் வேறு ஒன்று நடந்துவிட, அதன் மூலம் சிறைச்சாலையில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்படுகிறது.

சிறைச்சாலையில் மிகப்பெரிய அளவில் நடந்த அந்த கலவரத்தில் கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜியின் வாழ்க்கை எப்படி எல்லாம் புரட்டிப்போடுகிறது,

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி தான் நிரபராதி என நிரூபித்து சிறை சாலையில் இருந்து வீடு திரும்பினாரா?, திரும்பவில்லையா?

சிறைத்துறை அதிகாரி நினைத்தது நடந்ததா?, நடக்கவில்லையா?, என்பதுதான் இந்த சொர்க்கவாசல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவி இளைஞராக மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியால் நடக்கும் சதிவலையில் சிக்கினாலும் அதில் இருந்து எப்படி மீள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், என கதைக்கான கதாநாயகனாக மட்டும் இன்றி, இந்த சொர்க்கவாசல் திரைப்படத்தின் கதையை தாங்க கூடிய நடிகனாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.

சிகாமணி என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவனின் உருவம் அந்த இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்றாலும், வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றின் மூலம் அந்த கதாபாத்திரத்தை சற்று தாங்கிப் பிடித்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

சிறைத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷரப் யுதீன், துணை சிறைத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், டைகர் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம்ஷா, பாலாஜி சக்திவேல், சீலன், அந்தோணிதாசன் தேசுதாஸ், ரவி ராகவேந்திரா, கெண்ட்ரிக், காகா கோபால், சாமுவேல் ராபின்சன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, சிறைச்சாலையில் கதை நகர்ந்தாலும் படத்தொகுப்பு மூலம் காட்சிகளை மிக அருமையாக தொகுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு மூலம் சிறைச்சாலையில் நடக்கும் கலவரத்தை காட்சிப்படுத்திய விதம் மிகவும் எதார்த்தமாக உள்ளது.

இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் வைத்து கொண்டு திரைப்படத்தின் கதைக்கரு என்றாலும் முழுக்க முழுக்க சிறைச்சாலையில் நடக்கும் களமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத், சிறைச்சாலைகுள் நடக்கும் கதை இருந்தாலும், காட்சிகள் அனைத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதோடு, மட்டுமல்லாமல் கலவரத்திற்கு மிகப் பெரிய தாதாவான சிகாமணியின் மரணம் காரணமாக இருந்தாலும், கலவரம் தீவிரமடைந்த பிறகு முக்கிய காரணத்தை மறந்துவிட்டு, ஆளுக்கொரு ஒரு காரணத்திற்காக கலவரத்தில் ஈடுபட்டதை காட்சிப்படுத்தியதும் சரி, திரைக்கதை மூலமும் சரி மிக அருமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பதோடு, அதை மிக சிறந்த முறையில் காட்சிப்படுத்தி மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் மிரட்டலான மேக்கிங்.