“கெவி” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், விவேக் மோகன் “தர்மதுரை” ஜீவா, காயத்திரி, உமர் பாரூக், காமம் மேன் கணேஷ், ஜெகத் ராமன், அபிமன்யு மீனா, வினோ நடுவன், ராம்போ விமல், இமைராஜ் குமார், சிதம்பரம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தயாளன்.

ஒளிப்பதிவாளர் :- ஜெகன் ஜெயசூர்யா.

படத்தொகுப்பாளர் :- ஹரி குமரன்.

இசையமைப்பாளர் :- பாலசுப்ரமணியன் ஜி
ராஜரவிவர்மா.

தயாரிப்பு நிறுவனம் :- ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி.

தயாரிப்பாளர்கள் :- பெருமாள் ஜி, ஜெகன் ஜெயசூர்யா, இணை தயாரிப்பாளர்கள் : ஜெக சிற்பியன், வருண்குமார், ஆதவன், உமர் ஃபரூக், மணி கண்ணன்.

ரேட்டிங் :- 3.75/5.

கொடைக்கானல் மலைமீது உள்ள மலை கிராமத்திற்கு சாலை மற்றும், மருத்துவ மண்ணை மற்றும் கடைகள் இல்லாத மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் கதாநாயகன் ஆதவன், தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டும் தங்களை சந்திக்க வரும் அரசியல்வாதிகள் கேள்வி கேட்பதோடு, அவர்களுடன் வந்த வனத்துறை அதிகாரிகள் அனைவருடனும் ஊர் மக்கள் அனைவரும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

குறிப்பாக அந்த மோதலில், வனத்துறை அதிகாரி சார்லஸ் வினோத், மீது செருப்பு ஒன்று விழ அதிகளவில் கோபமடையும் வனத்துறை அதிகாரி சார்லஸ் வினோத் கதாநாயகன் ஆதவனை  பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் ஆதவன் மனைவி  தனது நிறைமாத கர்ப்பிணி கதாநாயகி ஷீலா தனியாக விட்டு விட்டு, மலையை விட்டு கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் ஒன்று சேர்ந்து கதாநாயகன் ஆதவனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கதாநாயகன் ஆதவனின் மனைவி ஷீலாவிற்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட, போக்குவரத்து வசதியும் மருத்துவமனையும் அந்த கிராமத்தில் இல்லாததால் கதாநாயகி ஷீலாவை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து அதிகளவில் ஏற்படும் நிலை உருவாகிறது.

வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் சிக்கி கொள்ளும் கதாநாயகன் ஆதவன் தன்னுடைய உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, மறுபக்கம் தனது கர்ப்பிணி மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற கிராம மக்கள் அனைவரும் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருக்கும் கதாநாயகி ஷீலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? அனுமதிக்கப்படவில்லையா?

கதாநாயகி ஷீலாவிற்கு குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்களா?

கதாநாயகன் ஆதவன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் இருந்து உயிர் தப்பினாரா? உயிர் தப்பில்லையா?
என்பதுதான் இந்த “கெவி” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “கெவி” திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதவன் நடித்திருக்கிறார்.

மலையன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதவன், கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, மிகச் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரி மற்றும் காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை கலங்கடித்து விட்டார்.

கதாநாயகன் ஆதவன் ஒவ்வொரு முறையும் தப்பித்து மீண்டும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் சிக்கும் போது, பார்வையாளர்கள் மனம் பதபதைக்கிறது.

இந்த “கெவி” திரைப்படத்தில் கதாநாயகியாக ஷீலா நடித்திருக்கிறார்.

நிறைமாத கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி ஷீலா, எப்போதும் போல் அருமையாகவும்  இயல்பாகவும், மிகவும் பாவமாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விடுகிறார்.

கதாநாயகி ஷீலா, பிரசவ வலியால் துடிப்பதும், தனது கணவர் பக்கத்தில் இல்லையே என துடிப்பதும்  டோலியில் பயணித்தாலும், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

கதாநாயகி ஷீலாவின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

கடுக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன், ஒவ்வொரு காட்சிகளிலும் குறிப்பாக இறுதிக்கட்ட காட்சியில் குழந்தை இறந்ததை தனது மாமாவிடம் எப்படி கூறப்போகிறேன் என அழும் காட்சிகளில் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.

பயிற்சி மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்குலின், வனத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி, மருத்துவமனை ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உமர் ஃபரூக் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும்  கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா, ஆபத்தான மலை கிராமங்களையும், அந்த கிராமத்தில் வாழும் மக்களின் வலியையும் மிகச் சிறப்பான ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிக பலமாக அமைந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி-ன் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் இந்த திரைப்படத்திற்கு மிகவும் நேர்த்தியாக இசையமைத்திருக்கிறார்.

என்னதான் தற்போது விஞ்ஞான உலகம்  வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில் தற்போதுள்ள  நவீன காலக்கட்டத்திலும், மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வலியையும், அவர்கள் அன்றாட சந்திக்கும் உயிர் பலியையும் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மழை வாழ் மக்களை சந்திக்கும் ஆட்சியாளர்கள் பற்றியும் மிக  தைரியமாகவும் எதார்த்தமாகவும் இயக்கி உள்ளார் இயக்குநர் தமிழ் தயாளன்.

மொத்தத்தில், ‘கெவி’ திரைப்படம் மலைவாழ் மக்களின் அழக் குரல்.

CLOSE
CLOSE
error: Content is protected !!