‘இந்தியன் பீனல் லா’ (IPL) திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கிஷோர், TTF வாசன், அபிராமி, குஷிதா கல்லாப்பு, நரேன், திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரீஷ் பெராடி, சிங்கம்புலி. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – கருணாநிதி.

ஒளிப்பதிவாளர் – எஸ்.பிச்சுமணி.

படத்தொகுப்பாளர் – பிரகாஷ் மப்பு.

இசையமைப்பாளர் – அஸ்வின் விநாயகமூர்த்தி.

தயாரிப்பு நிறுவனம் – ராதா பிலிம் இன்டர்நேஷனல்.

தயாரிப்பாளர் – ஜி.ஆர். மதன் கிருஷ்ணன்.

ரேட்டிங் – 2.5./5.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கதாநாயகன் கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்கின்றனர்.

கதாநாயகன் கிஷோர் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனத்தில் சிறு பிரச்சனை காரணமாக வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டு தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

புட் டெலிவரி செய்து வரும் டிடிஎப் வாசன், கதாநாயகன் கிஷோரின் தங்கையை காதலித்து வருகிறார்.

ஒரு நாள் கதாநாயகன் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது.

விபத்து ஏற்பட்டதிலிருந்து கதாநாயகன் கிஷோருக்கு இனி கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதே சமயம் மதுரை சிட்டியில் காவல்துறை ஆய்வாளராக இருக்கும் போஸ் வெங்கட் ரோட்டில் நின்று லஞ்சம் வாங்குவதை ஒரு இளைஞன் கைபேசியில் வீடியோ எடுப்பதாக சந்தேகப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைந்து மிகவும் கடுமையான முறையில் தாக்குகிறார்.

காவல் நிலையத்தில் உள்ள சிறையில் அந்த இளைஞனை மிக கொடூரமாக தாக்கியதால் அந்த இளைஞன் மரணம் அடைந்து விடுகிறான்.

சிறையில் இறந்த இளைஞனின் கைபேசி எடுத்து ஆராயும் போது உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் சர்ச்சையான ஒரு வீடியோ இருப்பதை கண்டு காவல்துறைய ஆய்வாளர் போஸ் வெங்கட் அதிர்ச்சியடைகிறார்.

காவல்துறை ஆய்வாளராக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒரு இளைஞனை அடித்து கொலை செய்ததை கொலை பழியை கதாநாயகன் கிஷோர் மீது சுமத்தி அவரை காவல்துறையினரிடம் சிக்க வைக்கிறார்.

இறுதியில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் கொலை வழக்கில் இருந்து கதாநாயகன் கிஷோர் மீண்டாரா?, மீளவில்லையா?, சிறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் கொலை வழக்கில் கதாநாயகன் கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த ‘இந்தியன் பீனல் லா’ IPL திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்

குடும்பத்தின் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, காவல்துறையினரிடம்  அடி வாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் நடிப்பில ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கதாநாயகனாக டிடி எஃப் வாசன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டிடி எஃப் வாசன் நடனம் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டிடி எஃப் வாசனை இந்த திரைப்படத்தில் பெரிதாக பயன்படுத்தவில்லை என தோன்றுகிறது.

கதாநாயகனாக நடித்திருக்கும் டிடி எஃப் வாசன் நடிப்பிலும் நடனத்திலும் ஆக்சன் காட்சிகளுக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட வேண்டும் இனி வரும் காலங்களில் அனைத்திற்கும் பயிற்சி எடுத்து நடித்தால் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரலாம்.

இந்த இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் படித்திருக்கும் அபிராமி, குஷிதா கல்லாப்பு, நரேன், திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரீஷ் பெராடி, சிங்கம்புலி என அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சுமணி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகதான் பின்னணி இசையில் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

திரைப்படத்தில் தேவையில்லாத காட்சிகள் திரைப்படத்திற்கு பலவீனமாக உள்ளது.

இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் திரைக்கதையிலும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் திரைப்படத்தை ரசித்திருக்கலாம்.

காவல்துறையினரால் சிறையில் நடக்கும் இறப்புகளை மையமாக வைத்து கதையை எழதிய இயக்குனர் கருணாநிதி முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி சுமாராங திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி.

மொத்தத்தில் ‘இந்தியன் பீனல் லா’ IPL திரைப்படம் உண்மை சம்பவத்தை உரக்க கூறி இருக்கலாம்.

error: Content is protected !!