இராக்கதன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.5./ 5.

நடிகர் & நடிகைகள் :- வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், தினேஷ் கலைசெல்வன், விக்னேஷ் பாஸ்கர், காயத்ரி ரெமா, சாம்ஸ், சஞ்சனா சிங் நிழல்கள் ரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தினேஷ் கலைச்செல்வன்.

ஒளிப்பதிவு :- மானஸ் பாபு.

படத்தொகுப்பு :- கோபி கிருஷ்ணன்.

இசை :- ஏ.பிரவீன் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :-  மருதம் புரொடக்‌ஷன்.

தயாரிப்பாளர்கள் :- மேக் பாஸ்கர்,
ராணி ஹென்றி சாமுவேலு, காரைக்கால் எம்.ஏ.ஜி.பாஸ்கர்

ரேட்டிங் :- 1.5./ 5.

கதாநாயகன் விக்னேஷ் பாஸ்கர் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் ஆசைப்படுகிறார்.

கதாநாயகன் விக்னேஷ் பாஸ்கருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் தனக்கு மாடலிங் துறையில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

மாடலிங் ஏஜென்சியின் உரிமையாளரான ரியாஸ்கானின் பார்வை கதாநாயகன் விக்னேஷ் பாஸ்கர் மீது படவே மாடலிங் துறைக்கு அழைத்து பணக்கார வீட்டு பெண்களுக்கு ஆண் விபச்சாரனாக செயல்பட வைக்கிறார்.

ஒரு பக்கம் பணம் கொட்ட கொட்ட பெண்களின் பழக்கமும் அதிகரிக்கிறது.

அந்த வாய்ப்பு கிடைத்து சில மாதங்களில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கதாநாயகன் விக்னேஷ் பாஸ்கர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

அவரது அருகில், அந்த ஓட்டலின் மாடலிங் ஏஜென்சியின் உரிமையாளரான ரியாஷ் கானும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த இரட்டை கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணி என்ன இந்த இரட்டை கொலையை செய்தவர் யார்? இந்த இரட்டைக் கொலையை செய்த கொலையாளியை காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த இராக்கதன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் பாஸ்கர் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கர் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம்.

எப்போதும் ஏதோ சிந்தனையில் இருப்பதாகவே அவரது முகம் இருக்கிறது.

வில்லனாக நடித்து வந்த வம்சி கிருஷ்ணா, போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

காக்கி உடை அணியவில்லை என்றாலும் சிறப்பு அதிகாரியாக நடிப்பில் காவல்துறையின் கம்பீரத்தை நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்.

விசாரணை அதிகாரியாக வரும் வம்சி கிருஷ்ணா ஆனால் இவர் காவல்துறை அதிகாரி போலவே இல்லை.

நீண்ட தாடி தலைமுடி வைத்து மாடலிங் மேனாகவே காட்சியளிக்கிறார்.

காவல்துறை அதிகாரி என்றால் தாடி முடி இருக்கக் கூடாது என்று இயக்குனருக்கு தெரியுமா? தெரியாதா?

ரியாஸ்கானுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கான கேரக்டரில் ரியாஸ்கான் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி என்ற பெயரில் ஆண்களுக்கு அலையும் பணக்கார சபல பெண்ணாக சஞ்சனா சிங். காயத்ரி ரெமா ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள்.

மானஸ் பாபுவின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

இசையமைப்பாளர் பிரவீன் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்தான்.

ஒரு துறையில் இருக்கும் மறு பக்கங்களை தைரியமாக காட்சிகளைஎழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன்.

மாடலிங் துறை என்ற மாயை உலகத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை வெளி உலகத்திற்கு சொல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் இராக்கதன் திரைப்படம் சுமார்.

error: Content is protected !!