கிங் ஆஃப் கொத்தா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25/5.

நடிகர் & நடிகைகள் :- துல்கர் சல்மான், ஷபீர் கல்லாரக்கல், பிரசன்னா, கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரண் சக்தி, செம்பன் வினோத் ஜோஸ், ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, ரித்திகா சிங், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அபிலாஷ் ஜோஷி.

ஒளிப்பதிவு :- நிமிஷ் ரவி.

படத்தொகுப்பு :- ஷியாம் சசிதரன்.

இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான்.

தயாரிப்பு நிறுவனம் :- துல்கர் சல்மான், ஜீ ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- துல்கர் சல்மான்.

ரேட்டிங் :- 2.25/ 5.

வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் மிகப்பெரிய குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் ஊராக கொத்தா இருந்து வருகிறது.

பெரிய பெரிய குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா என்ற ஊர் தற்போது குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிடுகிறது.

கொத்தா என்ற ஊரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஷபீர், அங்கு கச்சா மற்றும் போதை பொருட்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து கொண்டு அந்த கொத்தா என்ற ஊரையே ரவுடிசம் செய்து கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்.

உயர் காவல்துறை அதிகாரியான பிரசன்னா பணி மாற்றம் செய்யப்பட்டு இந்த கொத்தா என்று ஊருக்கு வருகிறார்.

அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியான ஷபீரின் கொட்டத்திற்கு அடக்குவதற்கு முடிவு செய்து அவரைப் பற்றி முழு விபரங்களையும் விசாரிக்கிறார்.

ரவுடி ஷபீருக்கு முன்பு கொத்தா என்ற உரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கதாநாயகன் துல்கர் சல்மான் என்றும், அவரது நெருங்கிய நண்பர் தான் தற்போது இருக்கும் ஷபீர் என்றும் தெரிய வருகிறது.

ரவுடி சபீர் செய்யும் அராஜகங்களை எல்லாம் தெரிந்துகொள்ளும் உயர் காவல்துறை அதிகாரியான பிரசன்னா, ரவுடி சபீர் பயப்படும் ஒரே ஆளான கதாநாயகன் துல்கர் சல்மானை பற்றித் தெரிந்து கொள்கிறார்.

கொத்தாவை விட்டு சென்ற கதாநாயகன் துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவிற்கு வரவழைக்க உயர் காவல்துறை அதிகாரியான பிரசன்னா திட்டம் போடுகிறார்.

இறுதியில் ஊரை விட்டு சென்ற கதாநாயகன் துல்கர் சல்மான் கொத்தாவிற்கு வந்தாரா? கொத்தாவை விட்டு துல்கர் சல்மான் செல்ல காரணம் என்ன? துல்கர் சல்மானை கண்டு ரவுடி சபீர் பயப்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ஆக்ஷன் கதாநாயகனாக திரைப்படம் முழுக்க ஆக்ஷ்ன் காட்சிகளில் மற்றும் நட்பு காதல் பாசம் அனைத்திலும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இந்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஷபீர் மிகக் கொடூரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் மனதை கவரவில்லை.

90-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல்
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு மூலம் வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையில் ரித்திகா சிங் ஆடும் பாடல் தாளம் போட வைக்கிறது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.

கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து நிரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி.

ரவுடிசம் கதையை கையில் எடுத்த இயக்குனர் திரை கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

அடுத்தடுத்த வரும் காட்சிகள் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்து இருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

மலையாள சினிமாவில் இருக்கும் இயக்குனர் மீது தமிழக ரசிகர்கள் மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்ததுக்கு பிறகு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

மொத்தத்தில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் கிங் ஆஃப் ?

error: Content is protected !!