குற்றப்பின்னணி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ‘ராட்சசன்’ சரவணன், தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- என்.பி. இஸ்மாயில்.

ஒளிப்பதிவாளர் :- சங்கர் செல்வராஜ்.

படத்தொகுப்பாளர் :- நாகராஜ்.டி.

இசையமைப்பாளர் :- ஜித்.

தயாரிப்பு நிறுவனம் :- பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஆயிஷா அக்மல்.

ரேட்டிங் :- 2.75/5.

திண்டுக்கல் மாவட்டம் அருகில் பழனியில் உள்ள வீடுகளில் தண்ணீர் கேன் போடுவது, பால் வியாபாரம் செய்து வருவது என கதாநாயகன் சரவணன் அந்த ஊரில் வாழ்ந்து வருகிறார்.

அதே சமயத்தில் அந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சிவா அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் கள்ளத் தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சிவா கள்ளத்தொடர்பில் இருக்கும் அந்த பெண் அவளுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

இந்த கொலையை வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சிவா தான் செய்திருப்பார் என்று அக்கம் பக்கத்தினர் கூற, காவல்துறையினர் வட்டி தொழில் செய்து வரும் சிவாவை தீவிரமாக தேடி வருகிறது.

அதே சமயம், வண்டி தொழில் செய்து வரும் சிவாவிடம் அந்த பெண்ணையும் தான்தான் கொன்றதாகவும் உன்னையும் நான் தான் கொல்லப்போகிறேன் என கூறுகிறார்.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் வட்டி தொழில் செய்து வரும் சிவாவை கதாநாயகன் சரவணன் கொன்று விடுகிறார்.

கதாநாயகன் சரவணன். எதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்தார் வட்டி தொழில் செய்து வரும் சிவா எதற்காக கொலை செய்தார் கொலைகள் செய்த கதாநாயகன் சரவணன் காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா? என்பதுதான் இந்த குற்றப் பின்னணி திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த குற்றப்பின்னணி திரைப்படத்தில் கதாநாயகனாக ‘ராட்சசன்’ சரவணன் நடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் சரவணன் வில்லனாக நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

கதாநாயகனாக ‘ராட்சசன்’ சரவணன் நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட அந்த கதாபாத்திரமாகவே மிக அருமையாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் பெற்ற செல்ல மகள் மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும், தனக்கு துரோகம் செய்தவர்களை பழி வாங்கும் இடமாகட்டும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் என பல காட்சிகளில் தனது நடிப்பு ராட்சசனை போல தனது நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்..

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சிவா அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக பயணித்திருக்கிறார்.

மேலும், திரைப்படத்தில் எஸ் ஐ கதாபாத்திரத்தில்,  நடித்திருப்பவரும் கதாநாயகன் சரவணனின் மனைவியாக நடித்திருப்பவர், என பலரும் தங்களது கதாபாத்திரங்களை மிக பொருத்தமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜித்வின் இசையில் பாடல்கள் பின்னணி இசை கதையோடு பயணம் புரிந்து நம்மையும் கதைக்குள் நம்மை பயணிக்க வைத்திருக்கிறார்.

ஒருவனின் வாழ்வியலில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி அழகான கதையை கையில் எடுத்து அதை நல்லதொரு படைப்பாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் என்.பி. இஸ்மாயில்.

”திரும்பி வருவேன் திருந்தி வருவேன்னு நினைக்காத…” இந்த ஒற்றை வசனத்துக்காகவே இயக்குநர் என்.பி. இஸ்மாயிலை மிகப்பெரிய அளவில் பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில் – இந்த குற்றப் பின்னணி கள்ளக்காதலருக்கு எதிரான திரைப்படம்.