கருடன் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சூரி, சசிகுமார், சமுத்திரகனி, உன்னி முகுந்தன், ரோஷினி ஹரி பிரியன், ரேவதி ஷர்மா, ஆர்.வி.உதயகுமார், பிரிகிடா சாகா, ஸ்வேதா நாயர், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ், வடிவுக்கரசி, முத்துராமன், ராஜேந்திரன் மைம் கோபி, ரோஷனி ஹரிப்ரியன், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- R.S. துரை செந்தில்குமார்.

ஒளிப்பதிவாளர் :- ஆர்தர் A. வில்சன்.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ. ராகவ்.

இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- லார்க் ஸ்டுடியோஸ் – கிரஷ் ரூட்ஸ ஃபில்ம் கம்பெனி.

தயாரிப்பாளர்கள் :- கே.குமார்
இயக்குநர் வெற்றி மாறன்.

ரேட்டிங்:- 4.25../5.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் காக்கிச்சட்டை, நடிகர் தனுஷ் நடிப்பில் கொடி, பட்டாசு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் “கருடன்”.

கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் இவர்கள் மூவரையும் சிறு வயது முதல் வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.

கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராக வடிவுக்கரசி இருந்து வருகிறார்.

கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், அந்த கோவிலின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

தாய் தந்தை இல்லாத தன்னை வளர்த்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்லதொரு விசுவாசியாகவும் கதாநாயகன் சூரி இருந்து வருகிறார்.

தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோம்பை அம்மன் கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், வலம் வரும் இவர்கள் பராமரித்து வரும் கோம்பை அம்மன் கோவில் நிலம் ஒன்று சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அமைச்சர் ஆர் வி உதயகுமார் அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.

அதனால், அந்த அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் ஆளான மைம் கோபி கோவிலின் நிர்வாகத்திற்குள் அனுப்ப நினைக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரியான சமுத்திரக்கனி வைத்து அமைச்சர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளும் பிளவுகளும் ஏற்படுகிறது.

அமைச்சர் ஆர்.வி உதயகுமார் உன்னி முகுந்தனுக்கு பணத்தாசையை காண்பிக்க தன் மனைவியின் பணத்தாசையிலும் திசை மாறி செல்கிறார்.

இறுதியில் அமைச்சர் அறிவு உதயகுமாரின் கோவில் நிலத்தை அபகரிக்கும் திட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? விசுவாசத்திற்கும் நியாயத்திற்குமான போராட்டத்தில் கதாநாயகன் சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? என்பதுதான் இந்த கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

சொக்கன் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும் விசுவாசியாகவும் மிகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

இரண்டாவது முறையாக கதையின் நாயகனான சூரி சூரியாவாக மாஸ் காண்பித்து ஃபயர் எமோஜிக்களை பறக்கவிட்டு அதிரடி காண்பித்து இருக்கிறார்.

கதாநாயகன் சூரி, அபார நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு காட்சிகளிலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

கதாநாயகன் சூரி அதே நேரம் திரைப்படத்தில் காமெடி தேவைப்படும்போது சிரிக்க வைத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை உற்சாகமடைய செய்து இருக்கிறார் கதாநாயகன் சூரி இதே போல் காலாகாலத்திற்கு இப்படியே பயணிக்க வாழ்த்துகள்!

சசிகுமாரின் குடும்பத்தை மகன் மனைவியை காக்கும் போதும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

குறிப்பாக கதாநாயகன் சூரி உன்னி முகுந்தனிடம் உண்மை சொல்லும் காட்சிகளின் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளில் ஆக்சன் கதாநாயகர்கள் எப்படி எல்லாம் ஆக்சன் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்களோ அதைப்போல கதாநாயகன் சூரியும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த கருடன் திரைப்படத்தில் கதாநாயகியாக ரேவதி சர்மா நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரேவதி ஷர்மா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த கருடன் திரைப்படத்தில்  ஆதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், நட்புக்கு அடையாளமாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

சசிகுமாரின் எதார்த்தமான நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்து இருக்கிறது.

கருணாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உன்னி முகுந்தன், மிகவும் அருமையாக இந்த கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்.

நண்பனை பகைத்து கொள்ளும் போதும், குடும்ப சூழ்நிலையை உணரும் போதும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மிக அருமையாக நடித்திருக்கிறார்.

அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் வி உதயகுமார், மிரட்டலான நடிப்பு கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

தியேட்டர்காரர் மைம் கோபியின் நடிப்பு மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்வேதா நாயர் தன் கணவர் சசிகுமார் நினைத்து உருகும் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.

ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா சாகா, துஷ்யந்த் ஜெயப்ரகாஷ், வடிவுக்கரசி, முத்துராமன், ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகபபெரிதும் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனின் தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப் பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தையும் ஒளிப்பதிவின் மூலம் பதிவு செய்துள்ளது

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில்
கைகொடுத்திருக்கிறது.

மாஸான இருக்கும் கோயில் திருவிழா மற்றும் அனைத்து காட்சிகள் இந்த திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகமாக தென்பட்டாலும், பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் மாஸ் காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பஞ்சவர்ணக் கிளியே பாடல் வழியாக ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.

கதையின் நாயகனான சூரியின் கதாபாத்திரத்தை பெரிய அளவில் மிகைப்படுத்தாமல் அழகாக வடிவமைத்து இருக்கிறது இயக்குநர் அனைத்து  கதாபாத்திரங்களிடையே மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ஏஸ் துரை செந்தில்குமார்

தமிழகத்தில் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை மையமாக வைத்து இந்த கருடன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.ஏஸ் துரை செந்தில்குமார்.

மொத்தத்தில் – விசுவாசமிக்க கருடனை திரையரங்குகளில் சென்று குடும்பத்துடன்   கண்டிப்பாக  தரிசிக்கலாம்.