இங்க நான் தான் கிடங்கு திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, முனிஷ்காந்த் , விவேக் பிரசன்னா, பால சரவணன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் லொள்ளு சபா சேஷு, மனோபாலா, மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- ஆனந்த் நாராயண்.

ஒளிப்பதிவாளர் :- ஓம் நாராயண.

படத்தொகுப்பாளர் :- எம். தியாகராஜன்.

இசையமைப்பாளர் :- டி. இமான்.

தயாரிப்பு நிறுவனம் :- கோபுரம் ஃபிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :-  ஜி.என் அன்புச்செழியன், சுஷ்மிதா அன்புச்செழியன்.

தாய் தந்தை இழந்து அனாதையான கதாநாயகன் சந்தானம் சென்னையில் உள்ள தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பரிடம் கடன் வாங்கி கதாநாயகன் சந்தானம், ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.

தனக்கு சொந்தமான பிளாட் ஒன்று வாங்கியதால் கதாநாயகன் சந்தானத்திற்கு 25 லட்சம் ரூபாய் கடன் ஏற்படுகிறது.

யார் இந்த 25 லட்சம் ரூபாய் கடனை யார் தருகிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்து பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார்.

தொடர்ந்து பெண் தேடும் படலத்தில் இருக்கும் போது புரோக்கர் மனோபாலா மூலமாக கதாநாயகன் சந்தானத்திற்கு இரத்தினபுரம் ஜமீனின் பெண் சம்மந்தம் கிடைக்க ஜமீன் குடும்பத்தால் கதாநாயகன் சந்தானத்தின் 25 லட்சம் ரூபாய் கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்.

இரத்தினபுரம் ஊரில் உள்ள அனைவரும் கதாநாயகன் சந்தானத்தை மிகப்பெரிய அளவில் ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று கதாநாயகன் சந்தானத்திற்கு மிகப்பெரிய அளவில் மரியாதை செய்கின்றனர்.

இரத்தினபுரம் ஜமீனுக்கு தம்பி ராமையாவுக்கு ஒரு மகன் பால சரவணன் ஒரு மகள் கதாநாயகி ப்ரியாலயா குடும்பமாக இருந்து வருகிறார்கள்.

கதாநாயகி ப்ரியாலயாவை பெண் பார்த்தவுடன் நிச்சயம் செய்து அன்றே கதாநாயகன் சந்தானம் திருமணம் செய்து கொள்கிறார்.

அந்த ஜமீன் தம்பி ராமையாவின் மகள் கதாநாயகி ப்ரியாலயாவின் தாலி கட்டிய மறுகணம் தான் கதாநாயகன் சந்தானத்திற்கு தெரிகிறது ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வாங்கிய கடனுக்காக பேங்க் அதிகாரிகள் சீல் வைத்து விடுகிறார்கள்.

இதனை அறிந்து மனம் உடைந்த கதாநாயகன் சந்தானம். வேறு வழி இல்லாமல், தனது மனைவி கதாநாயகி ப்ரியாலயா, மாமனார் தம்பி ராமையாவையும் பால சரவணனை அழைத்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

தன் மனைவி கதாநாயகி ப்ரியாலயாவிடம் வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் சந்தானம், இவர்களை வைத்துக் கொண்டு இவர்களை எப்படி சமாளிக்கிறார்.

நண்பர்களிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை பிரச்சனையை எப்படி சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? என்பதுதான் இந்த இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் மீதிக்கதை.

இங்கு நான் தான் கிங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக காமெடி கிங் மேக்கர் சந்தானம் நடித்திருக்கிறார்

கதாநாயகன் சந்தானம், தான் தமிழ் திரைப்பட உலகில் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

தன் மாமனார் தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் திரைப்படத்தின் காமெடி ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதாநாயகன் சந்தானத்தின் எனர்ஜி லெவல் எந்த ஒரு இடத்திலும் குறையாமல் இருந்தது திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக ப்ரியாலயா நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து ஒவ்வொரு காட்சிக்கு கொடுத்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகி ப்ரியாலயா பல காட்சிகளில் சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்ப்ரஷனை ஆங்காங்கே கொடுத்து திரைப்படம் பார்க்கும் இளம் ரசிகர்களின் மனதில் பகிரென்று பற்றிக் கொண்டுவிட்டார்.

ஜமீனாக நடித்திருக்கும் தம்பி ராமையா, அவருடைய அனுபவ மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னாவின் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதுவும் தீவிரவாதியாக வரும் விவேக் பிரசன்னா இறந்து வெட்பாலியாக நடித்த காட்சிகளில் அருமையான நடிப்பை கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

மறைந்த அமரர் மனோபாலாவின் நடிப்பு திரைப்படத்தின், காமெடி காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

முனிஷ்காந்த், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் லொள்ளு சபா சேஷு, என திரைப்படத்தின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு கை கொடுத்திருக்கிறது.

இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் இமானின் மற்றும் ஓம் நாராயணின் இருவரும் மிகப்பெரிய தூண்களாக திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

எழிச்சூர் அரவிந்தன் வசனம் மற்றும் திரைக்கதையின் அதிவேகமான ஓட்டம் திரைப்படத்தினை அதிகமாகவே ஈர்க்க வைத்திருக்கிறது.

தீவிரவாதிகளின் காட்சிகள் அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் சப்போர்ட் இல்லாமல் தனியாக இருப்பதால் திரைப்படத்தில் அது ஒரு மிகப்பெரிய குறையாக அமைந்திருக்கிறது.

இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தில் என்னதான் சில குறைகள் இருந்தாலும் காமெடி கலாட்டாகளில் திரையரங்கம் முழுவதும் மக்களின் சிரிப்பு அலை அதிர வைத்திருப்பதால் பல குறைகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது.

மொத்தத்தில் – இங்க நான் தான் கிங்கு திரைப்படம் இந்த வார வசூலில் கிங்கு தான்.

ரேட்டிங்:- 3.75./5.

CLOSE
CLOSE
error: Content is protected !!