லியோ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75/5.
நடிகர் & நடிகைகள் :- விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், பாபு ஆன்டனி, திரிஷா, பிரியா ஆனந்த், பேபி இயல், மடோனா செபஸ்டியன்,
கிரண் ரத்தொடி, ஜார்ஜ் மரியான், மேத்தீவ் தாமஸ், மாயா S. கிருஷ்ணன், சாண்டி, தினேஷ், அபிராமி வெங்கடாச்சலம், ஜனனி குணசீலன், ஜாஃபர் சாதிக் வஸந்தி, சாந்தி மாயதேவி, டேனியல் ஸ்மித், ராமகிருஷ்ணன், சச்சின் மணி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- லோகேஷ் கனகராஜ்.
ஒளிப்பதிவாளர் :- மனோஜ் பரம அம்சா.
படத்தொகுப்பு :- பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம்:- 7 ஸ்கிரீன்
ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- S.S.லலித் குமார், ஜெகதீஷ், பழனிசாமி.
ரேட்டிங் :- 2.75./ 5.
மாநகரம், திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகம் அறிமுகமானார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி, இயக்கிய அவர் இந்தத் திரைப்படம் ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதன் பின்பு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தையும் இயக்கினார் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிகளுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜயுடன் கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் தான் லியோ.
இந்த லியோ திரைப்படம் அறிவித்த நாள் முதல் இன்று வரை மிகப்பெரிய அளவில் ஹைப்பை அதிகரித்து வந்த நிலையில், இன்று அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இமாசசல் பிரதேசத்தில் கதாநாயகன் விஜய் தன் மனைவி திரிஷா, மற்றும் மகன், மேத்யு தாமஸ் மகள் பேபி இயல், ஆகியோருடன் காஃபி ஷாப் நடத்தி கொண்டு மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் விஜய் அது மட்டுமல்லாமல் இவர் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அமைதியாக செல்லும் கதாநாயகன் விஜய் வாழ்க்கையில் மிஸ்கின் மற்றும் சாண்டி திருட்டு கும்பலின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒருநாள் இரவு தன் காபி ஷாப் மூடிய பின்பு சாண்டி மற்றும் மிஷ்கின் அவருடைய நண்பர்கள் கதாநாயகன் விஜய்யின் காபி ஷாப்பில் சென்று அங்கு உள்ள பெண் ஊழியர் மற்றும் தன் மகள் பேபி இயல் துப்பாக்கி முனையில் நிற்க வைத்து தப்பாக நடக்க சாண்டி முயற்சி செய்கிறார்கள்.
அப்போது கதாநாயகன் விஜய் தனது காபி ஷாப்பில் உள்ள பணத்தை சாண்டியிடம் கொடுத்து விட்டு பிரச்சினை எதுவும் வேண்டாம் என கெஞ்சி கேட்கிறார்.
ஆனால், சாண்டியின் அட்டகாசம் எல்லை மீறவே காபி ஷாப்பில் உள்ள பெண் ஊழியரிடம் தப்பாக நடக்க முயற்சி செய்ய அவர்கள் அனைவரையும் கதாநாயகன் விஜய் கோபம் கொண்டு துப்பாக்கியால் அவர்களை சுட்டு கொன்றுவிடுகிறார்.
இதனால் இமாசல்பிரதேச காவல்துறையினர் கதாநாயகன் விஜய் மீது கொலை வழக்குப்பதிவு கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள்.
கதாநாயகன் விஜய் தன்னுடைய தற்காப்புக்காகதான் இந்த ஐந்து பேரையும் கொலையை செய்தார் என்று கூறி அவரை கோர்ட் நிரபராதி என்று அவரை விடுதலை செய்து விடுகிறது.
அதுவரை உலகிற்கு யார் என்று தெரியாமல் இருந்த கதாநாயகன் விஜய் இந்த சம்பவத்தின் மூலம் அந்த இமாசல்பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிறார்.
அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் பாராட்டப்படும் கதாநாயகன் விஜய், அரசின் வீரதீரசெயல் விருதுக்கு அவரை நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைகப்படுகிறார்.
மேலும் இதனால் கதாநாயகன் விஜயின் புகைப்படம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் வெளியிடப்படுகிறது.
கதாநாயகன் விஜயின் புகைப்படம் வந்த பத்திரிக்கை சஞ்சய் தத் கையில் கிடைக்க இது லியோ தாஸ் போன்று இருக்கும் கதாநாயகன் விஜய்யை தேடி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள அவருடைய காபி ஷாப்புக்கு வில்லன் சஞ்சய்தத் வருகிறார்.
இறுதியில் கதாநாயகன் விஜய்யை தேடி எதற்காக வில்லன் சஞ்சய் தத் வருகிறார்? லியோதாஸ் என்றால் யார்? லியோ தாஸ்க்கும் கதாநாயகன் விஜய்க்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த ‘லியோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லியோ திரைபடத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே வேறுபாடு காண்பித்து மிக சிறப்பாக இந்த திரைப்படத்திலும் வழக்கம் போல் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
காதல், அன்பு, ஆக்ஷன் என அனைத்து விதத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி திரிஷா, கதாநாயகன் விஜய்க்கு உறுதுணையாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.
வில்லன் சஞ்சய் தத் தன் மிரட்டும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
வில்லன் சஞ்சய் தத் தம்பியாக அர்ஜுன் அவருடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் கொடுத்து.
பாரஸ்ட் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் மிகவும் அருமையாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், பாபு ஆன்டனி, பிரியா ஆனந்த், பேபி இயல், மடோனா செபஸ்டியன், கிரண் ரத்தொடி, மனோ பாலா, ஜார்ஜ் மரியான், மேத்தீவ் தாமஸ், மாயா S. கிருஷ்ணன், சாண்டி, தினேஷ், அபிராமி வெங்கடாச்சலம், ஜனனி குணசீலன், ஜாஃபர் சாதிக் வஸந்தி, சாந்தி மாயதேவி, டேனியல் ஸ்மித், ராமகிருஷ்ணன், சச்சின் மணி, ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம அம்சா இமாசலப்பிரதேசத்தின் அழகை தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவரும் வகையில் காட்டியுள்ளார்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இன்னும் கொஞ்சம் அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒகே என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் உள்ள மாஸான இசை மற்றும் பின்னணி இசை இந்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் இல்லை.
கிராபிக்ஸ் காட்சிகளை அனைத்து உலக தரத்தில் அமைத்துள்ளனர்.
முதல் பாதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டு இரண்டாம் பாதியில் சற்று சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கதையே இல்லாத கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் திரைக்கதையில் கவனம் செலுத்தாதது மிகப்பெரிய அளவில் வருத்தமளிக்கிறது.
கதாநாயகி திரிஷா கதாநாயகன் விஜய்யின் காட்சிகள் இன்னும் கொஞ்சம் மிக அழுத்தமாக அமைத்திருக்கலாம் அப்படி மிகவும் அழுத்தமான அமைந்த காட்சி லிப் லாக் காட்சி மட்டுமேதான்.
திரைப்படத்தில் உள்ள நிறைய எமோஷன் காட்சிகள் அனைத்தும் படம் பார்க்கும் நமக்கு சிரிப்பைதான் ஏற்படுகிறது.
திரை உலக பிரபலங்களை தனது லியோ திரைப்படத்தில் இறக்கி அனைவரையும் வீணடித்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மொத்தத்தில் லியோ திரைப்படம் ஆக்சன் அதிகம் விறுவிறுப்பு கம்மி குடும்பத்துடன் பார்க்க முடியுமா? முடியாது?











