லில்லிராணி திரை விமர்சனம் ரேட்டிங் :- 1.75 / 5.

நடிகர் நடிகைகள் :-  சாயா சிங், பேபி’ ராஃஅத் பாத்திமா, தம்பி ராமையா, துஷ்யந்த், ஜெயபிரகாஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஷ்ணு ராமகிருஷ்ணன்.

ஒளிப்பதிவு :- சிவ தர்ஷன்.

படத்தொகுப்பு :- பேஸ்வந்த் வெங்கடேஷ்.

இசை :- ஜெர்வின் ஜோஷுவா.

தயாரிப்பு :- கிளாப்பின் சினிமாஸ்.

ரேட்டிங் :- 1.75 / 5.

தமிழ் திரைப்பட உலகில் விலை மாதுக்கள் பற்றிய ஏராளமாக திரைப்படங்கள் வந்திருக்கிறது.

இந்த இந்த லில்லி ராணி திரைப்படத்தில் விலை மாதுவை வித்தியாசமாக கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.

விலைமாதுவாக இருக்கும் கதாநாயகி சாயாசிங் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

அந்த பெண் குழந்தைக்கு உடம்பில் ஒரு பிரச்னை இருக்கிறது.

அந்த பெண் குழந்தைக்கு வித்தியாசமான கேன்சர் நோய். அந்த நோயை தீர்க்க இரத்த சம்பந்தமான யாராவது ஒருவர் உதவி தேவைப்படுகிறது.

ஆனால் அப்படி யாரும் கதாநாயகி சாயா சிங்குக்கு இல்லை.

அந்த பிரச்சனையை தீர்க்க இந்த குழந்தையின் தந்தை வர வேண்டும் என கூறுகிறார் மருத்துவர்.

கதாநாயகி சாயாசிங்கிடம் யாரெல்லாம் உறவு கொண்டார்களோ அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்,

அதனால் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

இதனால் கதாநாயகி குழந்தையின் தந்தையை ஊர் முழுக்க தேடுகிறாள்

நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தக் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்கிறார் கதாநாயகி சாயாசிங்.

அதன்பின் தம்பி ராமையா
கதாநாயகி சாயாசிங்கடமிருந்து பணம் பறிக்க திட்டம் போடுகிறார்,

அதே நாளில் கதாநாயகி சாயாசிங் வேறு ஒருவருடன் இருந்திருக்கிறார்.

கடைசியில் அந்த குழந்தை இருக்கும் பிரச்சனை குணமானதா ? குணமாகவில்லையா ? மற்றும் தம்பி ராமையாவின் திட்டம் நிறைவேறியதா ? நிறைவேறவில்லையா ? என்பதுதான் இந்த லில்லி ராணி திரைப்படத்தின் மீதி கதை

இந்த லில்லி ராணி திரைப்படத்தில் கதையின் நாயகியாக விலைமாது வாங்கவும் சாயாசிங் நடித்துள்ளார்.

திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சாயா சிங், விலை மாதுவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உடல் மொழியில் கவர்ச்சியில்லாமல், காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் கதையின் நாயகி சாயா சிங் கதாபாத்திரத்தை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆனால் பலான காட்சிகள் எதுவும் திரைப்படத்தில் இல்லாததால் அதனால் தான் இந்த விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டிருப்பார் போல் தெரிகிறது‌.

தம்பி ராமையா உதவி ஆய்வாளராக திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அமைச்சரின் மகனாக துஷ்யந்த், பேபி ர ஃஅத் பாத்திமா, மந்திரியாக ஜெயபிரகாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

விலைமாதுக்களுக்கு மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.

சில காட்சிகளில் திரைக்கதையின் வேக தடை இருந்தாலும், விலை மாது சம்பந்தப்பட்ட அழுத்தமான கதை என்பதால் சொல்ல வந்த கதையை அனைவரும் ரசிக்கும்படியாக தெள்ளத் தெளிவாக சொல்லவில்லை.
சிறு வயதில் சிறு குழந்தைகள்

சொப்பு பாத்திரங்கள் வைத்து சமையல் செய்வது போல் இருக்கிறது இந்த லில்லி ராணி திரைப்படம்

இயக்குனர் நல்ல கதையை மெனக்கட்டு யோசித்த இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கும். ‌

ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம்.

ஒளிப்பதிவாளர் சிவா தர்ஷனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜெர்வின் ஜோஷுவாவின் இசையும் சேரனின் பின்னணி இசையும்  சுமாராகதான்உள்ளது.

மொத்தத்தில் ‘லில்லி ராணி’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியவள்..