மகாராஜா திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நடராஜன் (நட்டி) முனுஷ் காந்த், அருள்தாஸ், வினோத் சாகர், திவ்ய பாரதி, சிங்கம்புலி, சச்சனா நெமிதாஸ், ‘பேபி’ ஷினிகா, ‘பாய்ஸ்’ மணிகண்டன், காளையன், கல்கி, பி.எல்.தேனப்பன், சரவண சுப்பையா, எஸ்.எஸ் ஸ்டான்லி, செல்வன் சேகர், வெற்றிவேல் ராஜா, மோகன்ராம், ஸ்ரீஜா ரவி, பேபி Y.A.ஹர்ஷினி, லிசி ஆண்டனி, சங்கீதா.வி, ‘போஸ்டர்’ நந்தகுமார், நம்பி, மணிமேகலை, சந்தோஷ், சூப்பர்குட்’ சுப்ரமணி, பூவையார், பிரதீப் கே விஜயன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘ஹலோ’ கந்தசாமி, ரேம், உமகஸ்தூரி, ஓம் கணேஷ், நாயகம், நிரஞ்சன், அருண், செல்லதுரை, சித்ரா, இந்து, குட்டி, லீலா, பிரியதர்ஷினி, சுரேஷ், சூர்யா, தமிழா அரசி, விஜய் பாபு, குருசாமி, துரை, முல்லை அரசி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நித்திலன் சாமிநாதன்.

ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்.

படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.

இசையமைப்பாளர் :- அஜனிஷ் B. லோக்நாத்.

தயாரிப்பு நிறுவனம் :- பேஷன் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி, கமல் நயன்.

ரேட்டிங் :- 4.5./5.

சலூன் கடையில் முடி திருத்தும் தொழில் செய்து வரும் கதாநாயகன் விஜய் சேதுபதி மனைவி திவ்யா பாரதி மற்றும் செல்ல மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி
தன் மனைவி திவ்யா பாரதியை ஒரு விபத்தில் இழந்து விடுகிறார்.

நடந்த அந்த விபத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதியின் செல்ல மகளின் உயிரை ஒரு இரும்பு குப்பை தொட்டி மூலம் உயிர் பிழைக்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி
விபத்து நடந்த அன்றிலிருந்து தன் மகளைக் காப்பாற்றியதால் அந்த இரும்பு குப்பை தொட்டிக்கு லட்சுமி என பெயர் சூட்டி அதை கடவுளாக பாவித்து தன் செல்ல மகளுடன் பாதுகாத்து வருகிறார்.

ஒருநாள் கதாநாயகன் விஜய் சேதுபதியின் மகள் பள்ளியில் நடக்கும் விளையாட்டு தொடர்பாக வெளியூருக்கு சென்றிருக்க, அப்போது ஒரு சில மர்ம நபர்கள் கதாநாயகன் விஜய் சேதுபதியை தாக்கிவிட்டு கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் இரும்பு குப்பை தொட்டியை தூக்கி சென்று விடுகிறார்கள்.

கதாநாயகன் விஜய் சேதுபதி தன் வீட்டில் வைத்திருந்த லட்சுமி என்னும் இரும்பு குப்பை தொட்டி காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சொல்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் புகாரை, காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்க மறுக்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி
விளையாட்டு தொடர்பாக வெளியூருக்கு சென்றிருக்கும் தனது மகள் வீட்டிற்கு திரும்புவதற்கு முன்பு லட்சுமி என்னும் அந்த இரும்பு குப்பை தொட்டியை கண்டு பிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகன் விஜய் சேதுபதி இரும்பு குப்பை தொட்டியை கண்டு பிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த மகாராஜா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மகாராஜா திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார் என கூறுவதை விட இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் செல்ல மகள் மீது பாசம் காட்டும் போது திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார்.

தன் மகள் படிக்கும் பள்ளியின்
பிரின்சிபல், தன் மகளிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் காட்சிகளிலும், புகார் எடுக்க மறுக்கும் போது காவல் நிலையத்தில் காட்சியிலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

கதையின் நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பின் மூலம் கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய அளவில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

அனுராக் காஷ்யப் தன் மனைவியிடம் ஒரு மாதிரியாகவும் மற்றவர்களிடம் ஒரு மாதிரியாகவும் தன் குழந்தையை மிகச் செல்லமாகவும் மிகவும் எதார்த்த நடிப்பு கொடுத்து ரசிக்க வைக்கிறது.

திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சியில் தனது மகள் தான் என்று தெரிந்தவுடன் அனுராக் காஷ்யப் நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார்.

அனுராக் காஷ்யபுடன் நண்பராக வரும் வினோத் சாகர்
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் கிளைமாக்ஸ் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

பாய்ஸ் மணிகண்டன் நடிப்பு மற்றும் சண்டை காட்சியில் நடிப்பின் மூலம். ஸ்கோர் செய்து இருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் திவ்யா பாரதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோருக்கு இந்தத் திரைப்படத்தில் பெரியதாக வேலை ஒன்றும் இல்லை.

அனுராக் காஷ்யப் மனைவியாக வரும் அபிராமி, கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

இதுவரை காமெடி கதாபாத்திரம் நடித்து வந்த சிங்கம் புலி எதிர்பாராத நடிப்பை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் மகளாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷைநிகா துணிச்சலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கல்கி போலீஸ் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவும் திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவின் மூலம் ஆக்சன்  காட்சிகள் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

இசையமைப்பாளர் அஜனிஸ் லோக்நாத் இசை மற்றும் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பயணித்திருக்கிறார்.

இந்த மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்கள் தேர்வு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் மிக அருமையாக உள்ளது.

ஒரு சாதாரண இரும்பு குப்பை தொட்டியை மையப்புள்ளியான கதையை வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன் சாமிநாதன்.

இந்த மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்கள் தேர்வு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் மிக அருமையாக உள்ளது.

மொத்தத்தில், இந்த ‘மஹாராஜா’ மக்கள் மனதில் மாபெரும் ராஜாவாக அமர்ந்து விட்டார்.