மூன்றாம் மனிதன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5 /5.
நடிகர் & நடிகைகள்:- இயக்குனர் கே பாக்யராஜ், சோனியா அகர்வால், இயக்குனர் ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மதுரை ஞானம, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம்தேவ்.
ஒளிப்பதிவாளர் :- மணி வண்ணன்.
படத்தொகுப்பாளர் :- துர்காஸ்.
இசையமைப்பாளர் :- வேணு சங்கர் & தேவ் ஜி – அம்ரிஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- ராம்தேவ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ராம்தேவ் மதுரை C.A. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் D. சாந்தி ராஜகோபாலன்.
ரேட்டிங் :- 2.5 /5.
மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவனுக்கு ஆட்சியர் பரிசு வழங்குவதை நியூஸ் சேனலில் காவல்துறை அதிகாரியான கே பாக்யராஜ் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அந்த நிகழ்வுக்காக வரும் அந்த மாணவரின் தந்தை, இயக்குனர் ராம்தேவ் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று அங்குள்ளா தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து மது குடிக்கிறார்.
இப்படி ஒரு அறிமுக காட்சியை வைத்து ரசிகர்களின் கவனத்தை ஆரம்பத்திலேயே ஈர்த்துவிடும் இயக்குநர் ராம்தேவ், அதன் பிறகு கொலை மற்றும் அதன்பின் காவல் துறை அதிகாரி கே பாக்யராஜின் விசாரணையை தொடங்கி, திரைப்படத்தை வேகமாக திரைப்படத்தை தொடங்குவது மிக சிறப்பு.
சோனியா அகர்வாலின் கணவர் கை வேறு கால் வேறு முண்டம் வேறு தலை வேறுவாக மிகவும் கொடூரமான நிலையில் கொலை செய்யப்படுகிறார்.
சோனியா அகர்வாலின் கணவரின் கொலையை பற்றி புலன் விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
சோனியா அகர்வாலின் கணவரின் கொலையை செய்தற்றவள் யார்? காவல்துறை அதிகாரியான பாக்கியராஜ் அந்த கொலைக்கரணை கண்டு பிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த மூன்றாம் மனிதன் திரைப்படத்தின் மீதிக்கதை.
அந்தக் கொலையை துப்பு துலுக்கும் காவல்துறை அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்து இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
சோனியா அகர்வால் ஆரம்பத்தில் திரைப்படம் பார்க்க ரசிகர்களில் கவனம் ஈர்த்தாலும், அதன் பிறகு அவருக்கு கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வேலை இல்லாமல் இருக்கிறது.
சோனியா அகர்வாலுக்கு
கொடுக்கப்பட்ட குறைவான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ராம்தேவ் நடித்திருக்கிறார்.
எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ராம்தேவ் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
பிராணாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம்தேவ், மதுவுக்கு அடிமையானவர் எனற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அறிவுப்பூர்வமான வசனம் பேசி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.
கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் திரைப்படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மணிவண்ணன் ஒளிப்பதிவின் மூலம் கதைக்கு ஏற்றபடி திரைப்படமாக ஆக்கியிருக்கிறார்
இசையமைப்பாளர்கள் வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசை மற்றும் பின்னணி இசை ராம்தேவின் வரிகளில் பாடல்கள் கேட்கும்படியும், புரியும்படியும் அருமையாக உள்ளது.
மதுவால் ஏற்பட்ட இழப்பும், கள்ள உறவால் ஏற்படும் இழப்பும் நாட்டில் அதிகம் என்பதை இயக்குனர் ராம் தேவ் இந்த திரைப்படத்தின் மூலம் மிக அருமையாக எடுத்து கூறியிருக்கிறார்.
சொல்ல வந்த கதை மற்றும் திரைக்கதையில் கைதட்டல் கொடுக்கலாம், அதை சரியாக திரைக்கதையின் மூலம் சொல்லியிருந்தால் திரையரங்கில் ரசிகர்கள் எழுந்து நின்றே கைதட்டல் கொடுத்திருப்பார்கள்.
மொத்தத்தில் மூன்றாம் மனிதன் திரைப்படம் சந்தோஷமான குடும்பத்தில் கள்ளக்காதலால் மூன்றாவது மனிதன் நுழைந்தால் நல்ல குடும்பம் என்னவாகும் எனக் கூறியிருக்கிறார்.











