நூடுல்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.

நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் உத்தமன், ஷீலாராஜ்குமார், ஆழியா, ஷங்கர், திருநாவுக்கரசு, ஜெயந்தி, ஹரிதா, யஷ்வந்த், சூரஜ், மீரா ஸ்வேதா, பிரகாஷ், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ், அருவி மதன் ஷோபன் மில்லர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மதன் தக்ஷிணாமூர்த்தி.

ஒளிப்பதிவு :- T. வினோத் ராஜா.

படத்தொகுப்பு :- சரத்குமார்.

இசையமைப்பாளர் :- ரமேஷ் கிருஷ்ணன் எம் கே – ராபர்ட் சற்குணம்.

தயாரிப்பு நிறுவனம் :- ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- பிரகனா அருள் பிரகாஷ், சுருளி ராஜ் டி எம்.

ரேட்டிங் :- 3./ 5.

உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளரான இருக்கும் கதாநாயகன் ஹரிஷ் உத்தமன் மனைவி கதாநாயகி ஷீலா ராஜ்குமார், மகள் ஆழியா குடும்பம், மற்றும் முதல் தளத்தில் உள்ள குடும்பம், இரண்டாவது தளத்தில் உள்ள குடும்பம், எல்லாம் ஒன்று சேர்ந்து வாராவாரம் சனிக்கிழமை இரவு மொட்டை மாடியில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக அரட்டை அடித்து  விளையாடி கொண்டிருக்கிறார்கள்.

தூங்க விடாமல் தொந்தரவு என்று பக்கத்து வீட்டார் யாரோ ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்க காவல்துறை ஆய்வாளர் மதன் மற்றும் ஏட்டு சோபன் மில்லருடன் வந்து அவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார்.

அந்த அனைவரையும் விசாரித்து வர, அவர்கள் பேச்சில் இரண்டு பக்கமும் அவரவர் நியாயத்தை மட்டும் பேசும்  நிலையில் பிரச்னை பெரிதாக  ஆணவமான, மனசாட்சி இல்லாத , வில்லங்கமான அந்த காவல்துறை ஆய்வாளர் மதன் அதை பெரிய ஈகோ பிரச்னையாக்குகிறார்.

இறுதியில் கதாநாயகன் ஹரிஸ் உத்தமன் வீட்டில் நடந்த பிரச்சினை என்ன காவல்துறை ஆய்வாளர் மதன் இடம் இருந்து பழி வாங்கலில் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த நூடுல்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நூடுல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஸ் உத்தமன், குடும்பத்தை பாதுகாத்து காவல்துறை அதிகாரியின் பழிவாங்கலுக்கு உட்படும் நடிப்பை கண்களினாலே வெளிப்படுத்தி  கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்

இந்த நூடுல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷீலா ராஜ்குமார், இதிலும் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான தனது அசத்தலான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் அவருடைய ஒவ்வொரு அசைவுமம் காட்சிகளை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.

மேல் வீட்டில் வசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜெயந்தி, மஹினா, ஏட்டுவாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது நடிப்பு மூலமாக திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, ஆரம்பத்தில் கெத்தாகவும், வேகமாகவும் பேசிவிட்டு பிறகு படபடப்பாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கையே குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

வழக்கறிஞராக வரும் வசந்த் மாரிமுத்துவின் பயம் கலந்த நடிப்பு திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவருமே மிக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

கொடூர காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் மதன் மிரட்டி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் டி வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் வீட்டை விட்டு கேமரா வெளியில் சென்று இருக்கிறது.

அவ்வளவு சின்ன இடத்தில் இரவு நேர காட்சிகள் என்பதால் லைட்டிங் மிகவும் அருமையாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி வினோத் ராஜா.

கதை முழுவதும் ஒரு வீட்டுக்கள் அதிலும் சிறு அறைகளுக்குள் பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் நடிகர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி.வினோத் ராஜா.

இசையமைப்பாளர்கள் ரமேஷ் கிருஷ்ணன் எம் கே – ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை கதையோடு பயணித்து இருக்கிறது.

ஒரு இரவில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை ஒரு வீட்டில் கதையை  முடித்து கச்சிதமாக காட்சி படுத்தியிருக்கும் இயக்குனர் மதனின் திறமை பாராட்டுக்குரியது.

நடிகர்களின் ரியாக்‌ஷன்கள் தான் படத்தின் பலம் என்பதை மிக சரியாக புரிந்துக்கொண்டு காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

நல்ல ஒரு கதைக்கு மிகப்பெரிய பட்ஜெட் மிகப்பெரிய நடிகர்கள் தேவையில்லை என்பதற்கு இந்த நூடுல்ஸ் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தமிழ் திரைப்பட உலகில் நடிகராக வெற்றி பெற்ற நடிகர் மதன் தற்போது இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கும் இயக்குனர் மதன் தக்ஷிணாமூர்த்திக்கு தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக மிகப் பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது

மொத்தத்தில் நூடுல்ஸ்  திரைப்படம் குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து சுவைக்கலாம்.