சத்திய சோதனை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25/ 5..

நடிகர் & நடிகைகள் :- பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா,  ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வ முருகன், ஹரிதா, பாரதி, ராஜேந்திரன், ஞானசம்பந்தம், முத்துப்பாண்டி, கர்ண ராஜா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுரேஷ் சங்கையா.

ஒளிப்பதிவு :- ஆர்.வி. சரண்.

படத்தொகுப்பு :- வெங்கட் ராஜன்.

இசை :- ரகு ராம். எம், தீபன் சக்கரவர்த்தி.

தயாரிப்பு நிறுவனம்:- சூப்பர் டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- சமீர் பாரத் ராம்.

ரேட்டிங் :- 3.25/ 5.

தமிழக தென்மாவட்டத்தில உள்ள பேயப்பட்டி கிராமத்தில்  அந்த ஊரில் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை நடந்து விடுகிறது.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் கதாநாயகன் பிரேம் ஜி, ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார்.

உடனே அந்த கொலை செய்யப்பட்ட டெட் பாடியை ஒரு ஓரமாக இழுத்து வைத்து விட்டு அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், மொபைல் போன் மற்றும் கழுத்தில் கிடக்கும் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார்.

அங்கு சமயம் பார்த்து காவல் நிலையத்தில் கொலை செய்த குற்றவாளிகள் சரணடையும், கொலை செய்யப்பட்டவர் உடலில் ஏகப்பட்ட 50 பவுன் தங்க நகைகளை அணிந்திருந்ததாக கூறுகிறார்கள்.

இதனால், கதாநாயகன் பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல் துறையினர், மற்ற அனைத்து நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? கொலை செய்யப்பட்ட உடலில் இருந்து அவ்ளோ நகையும் எடுத்தது யார்?அப்பாவியான கதாநாயகன் பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதுதான் இந்த சத்திய சோதனை திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சத்திய சோதனை திரைப்படத்தில் கதாநாயகனாக பிரேம்ஜி அமரன் நடித்திருக்கிறார்.

பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடித்தாலும் பிரதீப் என்ற அப்பாவித்தனமான இளைஞர் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல், குறைவான காட்சிகள் வந்தாலும் அவருடைய வேலையை அருமையாக செய்திருக்கிறார்.

காவல்துறையை சேர்ந்த காவலர்கள் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் சேர்ந்து திரைப்படத்தை தன் தோலில் தாங்கி பிடித்திருக்கிறார்கள்.

நீதிபதியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், தவறே செய்யாதவர்களை லைசன்ஸ் இல்லாதவர்கள் ஹெல்மெட் போடாதவர்கள் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் ஒனவே பாதையில் சென்றவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவல்துறையினரை வைத்து செய்யும் விதமாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்

கதாநாயகன் பிரேம்ஜியின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணாராஜா, பெண் கவலராக நடித்திருக்கும் ஹரிதா, காவல்துறை இன்பார்மராக நடித்திருக்கும் ராஜேந்திரன், நீதிமன்றத்தில் நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அனைத்து நடிகர்களும் மிக எதார்த்தமாக நடித்து திரைப்படத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.

குறிப்பாக காவல்துறை துணை ஆய்வாளராக நடித்திருக்கும் முத்துப்பாண்டி திரைப்படத்தில் கடுகடுவென கோவக்கார துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.

முத்துப்பாண்டிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் திரைப்படத்தின் இறுதி காட்சியில் நீதிபதி கூறும்  வசனத்தால் முத்துப்பாண்டிக்கு ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல் வரிகள் கேட்கும்படியாக  இருக்கிறது.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எளியவருக்கு சட்டம் என்றுமே உதவாது, என்பதை அழுத்தமாக பதிவு செய்து கதை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் சங்கையா இந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லிருப்பது இயக்குனர் சுரேஷ் சங்கையாவிற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சத்திய சோதனை திரைப்படம் கண்டிப்பாக வயிர் குலுங்க சிரிக்க வைக்கும்.

error: Content is protected !!