‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சதீஷ், சுரேஷ் ரவி, லிவிங்ஸ்டன், மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், விஜய் கணேஷ், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி, சாணக்கியன், ஜாவா சுந்தரேசன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரவீன் சரவணன்.
ஒளிப்பதிவாளர் :- கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ.
படத்தொகுப்பாளர் :-தினேஷ் பொன்ராஜ்.
இசையமைப்பாளர் :- எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்.
தயாரிப்பு நிறுவனம் :- தி மாபோகோஸ்.
தயாரிப்பாளர் :- பிரதீப் மகாதேவன்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா.
ரேட்டிங் :- 3.5./5.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிந்து வரும் கதாநாயகன் சதீஷ், கதாநாயகி மோனிகா சின்னகொட்லா இருவரும் காதலிக்கிறார்கள்.
கதாநாயகன் சதீஷ், கதாநாயகி மோனிகா சின்னகொட்லா இவர்கள் காதலுக்கு இரண்டு வீட்டில் உள்ள பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டும் இரு வீட்டாரும் இனைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
கதாநாயகன் சதீஷ், கதாநாயகி மோனிகா சின்னகொட்லா இவர்கள் இருவரில் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், கதாநாயகன் சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது.
கதாநாயகன் சதீஷ் நண்பர் மூலம் இந்த வீடியோவை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
கதாநாயகன் சதீஷ், கதாநாயகி மோனிகா சின்னகொட்லா நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்டு தான் குடிக்கவில்லை என்று பொய் சொன்னதற்கே காதலை துண்டித்த கதாநாயகி மோனிகா சின்னகொட்லாவுக்கு வீடியோ பற்றிய விசயம் கதாநாயகி மோனிகா சின்னகொட்லா தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், கதாநாயகன் சதீஷ் திருமணத்திற்கு முன்பாக எப்படியாவது அந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபடும் கதாநாயகன் சதீஷ் அவருடைய முயற்சி வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்திருக்கிறார்
காமெடி கதாநாயகன் என்றாலும், காமெடியை மிகச் சிறப்பாக பயணித்து கண்டதும் கதாநாயகியை காதல் கொள்வது தன்னுடைய காதலை காப்பாற்றுவதற்காக பொய் சொல்வதும், அந்த பொய்யினால் காதலில் ஏற்படும் பிரிவு, அந்தத் பிரிவை சரி செய்வதற்காக முயற்சி, செய்வது அதையடுத்து திருமண நேரத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள், என்று அனைத்து காட்சிகளிலும் தனது கதாபாத்திரத்தை மிக மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக சுரேஷ் ரவி நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து எந்தவிதமான குறையின்றி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரைப்படம் முழுவதும் பயணித்திருக்கும் கதாநாயகர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி, மற்றும் இருவருக்கும் இணையான கதாபாத்திரம் மட்டும் இன்றி, இருவரும் அனைத்து காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு காமெடி காட்சிகளில் சிரிக்க வைத்து காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.
இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தில் கதாநாயகியாக மோனிகா சின்னகோட்லா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக மோனிகா சின்னகொட்லா திரைப்படத்தின் தொடக்கத்தில் தலைகாட்டி, ஒரு பாடல் காட்சியில் வலம் வந்து, இறுதிக் காட்சியில் தலை காட்டியிருக்கிறார்.
இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக மானசா செளத்ரி நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி ஒரு சில இடங்களில் மட்டுமே தலை காட்டுவதோடு சரி, மற்றபடி திரைக்கதையில் அவருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை.
கதாநாயகர்களின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைத்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.
ஜாவா சுந்தரேசன், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்க உதவி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதையும் கலர்புல்லாக, காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கும் நிலையில் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்..
கதாநாயகன், சில பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை கலகலப்பாகவும் காமெடியாகவும் மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் பிரவீன் சரவணன்.
மொத்தத்தில், ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் காமெடி ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.











