‘ஒன் மேன் ONE MAN’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சங்ககிரி ராஜ்குமார் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சங்ககிரி ராஜ்குமார்.
ஒளிப்பதிவாளர் :- சங்ககிரி ராஜ்குமார்.
படத்தொகுப்பாளர் :- சங்ககிரி ராஜ்குமார்.
இசையமைப்பாளர் :- சங்ககிரி ராஜ்குமார்.
தயாரிப்பு நிறுவனம் :-
தயாரிப்பாளர் :- சங்ககிரி ராஜ்குமார்.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 4.5./5.
எது செய்தாலும் அதில் தனித்துவம் இருக்க வேண்டும் என நினைப்பவர்
மிக திறமையான படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார்.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் மாபெரும் முயற்சிதான் இந்த ‘ஒன் ‘, திரைப்படத்தில் கேமராவிற்கு முன்னாள் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் இவர் ஒருவரே! திரைப்படத்தில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இவர் ஒருவரே! தமிழ்த் திரைப்பட உலகில் இப்படியான ஒரு அட்டகாசமான முயற்சிக்காகவே முதலில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களுக்கு மாபெரும் வாழ்த்துகள்.
பல விதமான திறமைகள் உள்ள நான்கு இளைஞர்களுக்கு மல்டி டேலண்ட் விருது வழங்கவுள்ள நிகழ்ச்சிக்கு வாங்குவதற்காக நான்கு இளைஞர்கள் ஒரு காரில் பயணம் செல்கிறார்கள்.
விருது வழங்கும் விழா நடக்கும் அந்த நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்கு இளைஞர்கள் செல்லும் வழியில் அவர்கள் சென்ற கார் பழுதடைய சில பல தடைகள் ஏற்பட்டு காட்டுக்குள் இருக்கும் ஒரு முக்கியமான அறிவியல் ஆய்வகத்திற்குள் சென்று விடுகிறார்கள்.
அந்த அறிவியல் ஆய்வகத்திற்குள் நான்கு இளைஞர்கள் செய்யும் ஒரு காரியத்தால், உலகத்தில் உள்ள அனைவரும் மறைந்து விடுகிறார்கள்.
நான்கு இளைஞர்கள் செய்யும் அந்த காரியத்தால் நடந்தது என்ன? என்பதுதான் இந்த ‘ஒன் மேன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஒன் மேன்’ திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சங்கரகிரி ராஜ்குமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கான ஒப்பனை மற்றும் உடல்மொழி வசன உச்சரிப்பு வித்தியாசத்தை காண்பித்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ஒன் மேன்’ திரைப்படத்திற்கு தேவையான ஒளிப்பதிவு சவுண்ட் எபெக்ட், உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகளையும் திறம்பட செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சங்கரகிரி ராஜ்குமார் அவர்களே செய்திருப்பது திரைப்படத்தின் மீதான அவருடைய பெருங்காதலை உணர்த்துகிறது
ஹாலிவுட் திரைப்படங்களில் இருக்கக்கூடிய இந்த கதையில் நல்ல பேண்டஸி தன்மை இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்திருக்கலாம்.
பரவாயில்லை இருந்தாலும் இப்படி ஒருவர் மட்டுமே அனைத்தையுமே செய்ய முடியுமா? என்ற ஆச்சரியம் தான் திரைப்படம் முடியும் வரை நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
அந்த ஆச்சரியத்திற்காக மட்டுமே கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பாராட்டலாம் இப்படிப்பட்ட திறமைசாலிகளை தமிழ் திரைப்படம் துறையில் வரவேற்கலாம்! மேலும் திரைப்படம் முன் நிறுத்தும் பொதுமை நிறைந்த கருத்துக்கும் கூடுதலாக திரைப்பட படைப்பாளி சங்கரகிரி ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்
திரைப்படம் முடியும் கடைசி 5 நிமிடம் இந்த ஒன் திரைப்படத்தை திரைப்பட படைப்பாளி சங்கரகிரி ராஜ்குமார் தறி தனி ஒருவராக எடுத்து இய்க்கி நடித்ததை வீடியோவாக காட்டுகிறார்.
அந்த வீடியோவைப் பார்க்கும் போது இந்த திரைப்படத்தை கண்டு களிக்கும் அனைத்து ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன.
திரைப்பட உலகத்தை உயிராக நேசித்துள்ள இந்த மகத்தான கலைஞன் ஒருவனுக்காக இந்த உலக மக்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை கண்டு களிக்க வேண்டும்
இந்த ஒன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
மொத்தத்தில்’, இந்தத் ‘ஒன் மேன்’ திரைப்படம் போல் தமிழ் திரைப்பட உலகில் இத்தனை ஆண்டு காலங்களில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை இனிமேல் வரப்போவதும் இல்லை என்பதற்கான அடையாளம் இந்த ஒரு திரைப்படம்.











