ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குட்டி ரசிகையுடன் ஜாலியாக விளையாடிய சூப்பர் ஸ்டார்.!!

சென்னை 11 செப்டம்பர் 2022 ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குட்டி ரசிகையுடன் ஜாலியாக விளையாடிய சூப்பர் ஸ்டார்.!!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கும் அவருடன் ஜாலியாக விளையாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது

இந்த ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இந்த ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இது தவிர நடிகை தமன்னா, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், நடிகர்கள் வஸந்த்ரவி, ஜெய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்ட பட்க்குழு, பின்னர் சென்னையிலேயே பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பிரம்மாண்டமான ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு உள்ளது.

அதில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படமாக ஜெயிலர் தயாராகி வருகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் குட்டி ரசிகை ஒருவர் அவரை காண ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருக்கிறார்.

இதை அறிந்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசி ஜாலியாக விளையாடி உள்ளார்.

இதையடுத்து அந்த குழந்தைக்கு ஒரு புத்தகத்தில் தன்னுடைய ஆட்டோகிராஃபை போட்டு பரிசாக கொடுத்துள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.