நோக்க நோக்க திரைவிமர்சனம் ரேட்டிங் ;- 2.5/5.

நடிகர் நடிகைகள் :- அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, கஞ்சா கருப்பு, ஜோதி ராய், ஜாக்குவார் தங்கம், சுரேஷ், பாவனா, அபி, பேபி, அமுல்யா, பேபி ஜனன்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆர்.முத்துகுமார்.

ஒளிப்பதிவு :-  விஜய் முத்துசாமி.

படத்தொகுப்பு :- . அரவிந்த்.

இசை :- ஆல்டிரின்

தயாரிப்பு நிறுவனம் :- ஆர் புரொடக்ஷன்ஸ் – avp சினிமாஸ்

தயாரிப்பாளர்:- முத்துகுமார்.

ரேட்டிங் :- 2.5 / 5

2016 நவம்பர் 8, தேதி அன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கணக்கில் வராத கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க இந்திய ரிசர்வ் வங்கியால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

முன்னறிவிப்பு இல்லாமல் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு மூலமாக நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய அரசாங்கம் பண மதிப்பிழப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த போது ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டனர்.

ஆனால் பணக்காரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் நடிகர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக பழைய நோட்டுகள் அனைத்தையும் மற்றி கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக் கொண்டனர்.

ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கையானது இந்தியாவில் இது முதல் முறை கிடையாது.

கடந்த 1946-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1000, 10,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அன்றைய அரசாங்கம் அறிவித்தது.

கடந்த 1954-ம் ஆண்டு 1000, 5000, 10,000 புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன.

அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசாங்கம், இந்த நோட்டுகளை ரூபாய் செல்லாது என அறிவித்தனர்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நேர்மையான நிருபரான ஜோதிராய் இருந்து வருகிறார்.

இந்தியாவில் பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த நேரத்தில் பணக்காரர்கள் எளிதாக பணமாற்றுதலை செய்ய, ஏழை எளிய மக்கள் வங்கிகளின் வெளியே வரிசையாக வீதியில் நின்று அவதிப்படுவதையும், அதன் பின்னணியில் நடந்த சட்ட விரோத பண மாற்றுதலை கண்டுபிடிக்கிறார்..

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில்; இருப்பவர்கள் இந்த பணம் மாற்றுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சில சமூக விரோதிகளால் அந்த பெண் நிரூபரை ஜோதி ராய் அவருடைய பெண் குழந்தையையும் படுகொலை செய்து விடுகின்றனர்.

அந்த கொலை நடக்கும் இடத்தில் தொலைந்து போன செல்போன் மெமரி கடலில் அந்த வீடியோ இருப்பதை தெரிந்து கொள்கிறார் கதாநாயகன் அர்ஜுன் சுந்தரம்.

நிருபர் ஜோதிராய் மற்றும் குழந்தையை கொலை செய்த குற்றவாளிகளிடம் பேரம் பேசி பல கோடி லஞ்சம் பெற்று கதாநாயகி சிந்தியாவுடன் வசதியாக வாழ ஆசைப்படுகிறார் .

நிருபர் ஜோதிராயின் இறந்த பெண் குழந்தை தனது தாயையும் தந்தையும் கொலை செய்த குற்றவாளிகளை, கயவர்களையும் பேயாக உருமாறி எப்படி பழி பழிவாங்கினாலா? வாங்க வில்லையா?கடவுள் அவளுக்கு இந்த ரூபத்தில் உதவுகிறார்? என்பதுதான் இந்த நோக்க நோக்கதிரைப்படத்தின் மீதி கதை.

இந்த நோக்க நோக்க திரைப்படத்தில் அர்ஜுன் சுந்தரம் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அர்ஜுன் சுந்தரம் மிக அருமையாக நடித்துள்ளார்.

இந்த நோக்க நோக்க திரைப்படத்தில் சிந்தியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு, காமெடி செய்கிறேன் என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் நம்மை சோதிக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்து இருக்கும் பத்திரிகைத் தொடர்பாளர் கணேஷ்குமார் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி தோற்றத்தில் கணேஷ் குமார் மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

ஜோதி ராய், ஜாக்குவார் தங்கம், சுரேஷ், பாவனா, அபி, பேபி, அமுல்யா, பேபி ஜனன்யா, ஆகியோர் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்பதால் சில காட்சிகளில் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் முத்துசாமியின் ஒளிப்பதிவு சுமாராக உள்ளது.

இசையமைப்பாளர் ஆல்ட்ரின் இசையை மட்டும் பாடல்கள் பின்னணி இசை அனைத்துமே சுமாரா தான் இருக்கிறது.

விஜய் முத்துசாமி ஒளிப்பதிவு, பவர் புஷ்பராஜின் சண்டைப் பயிற்சி ஆல்ட்ரின் இசை, ஆகியவை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்

வசன உச்சரிப்பு, மற்றும் நடிப்பில் தடுமாற்றங்கள் தெரிகிறது.

திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பண மதிப்பிழப்பு அறிவிப்பின் கோர முகத்தைக் காட்டும் கதை எழுதிய இயக்குனருக்குப் பாராட்டுகள் .

மொத்தத்தில் நோக்கு நோக்க திரைப்படம் பார்க்கலாம்.