சாலா திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.டி. மணிபால்
ஒளிப்பதிவாளர் :- ரவீந்திரநாத் குரு.
படத்தொகுப்பாளர் :- புவன்.
இசையமைப்பாளர் :- தீசன்.
தயாரிப்பு நிறுவனம் :- பீப்பிள் மீடியா ஃபேக்டரி.
தயாரிப்பாளர் :- டி ஜி விஷ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா.
ரேட்டிங் :- 3.25/5.
சிறுவயதில் கதாநாயகன் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.
உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தாதா அருள்தாஸின் எதிரி தாத்தாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் தாதா அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார்.
தாதா அருள்தாஸின் தான் இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே தாதா அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.
பார்களை நடத்தும் கதாநாயகன் தீரனுக்கும், பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் கதாநாயகி ரேஷ்மாவுக்கு கதாநாயகன் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இரு துருவங்களாக இருக்கும் இருவருக்கும் இவர்களுடைய நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.
இதற்கிடையே இந்த பார்வதி பாரை எடுத்து நடத்தினால் கெளரவமாக கருதப்படும் பார்வதி பாரை ஒன்றை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
தாதா அருள்தாஸ் மற்றும் கதாநாயகன் தீரன் இந்தப் பார்வதி பாரை சேலத்தில் எடுத்தார்களா? பார்வதி பாரை எடுக்கவில்லையா?
கதாநாயகி ரேஷ்மாவுக்கு கதாநாயகன் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சாலா திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார்.
சாலா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தீரன், ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடனத்திலும் குறைவில்லை.காதல் உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கும் கதாநாயகன் தீரன் தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
இந்த சாலா திரைப்படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
காதல் காட்சிகள் இல்லை என்றாலும் கதாநாயகனின் மனதில் இடம் பிடித்தது போல் தனது போராட்ட குணத்தால் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
கதாநாயகன் தீரன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு மூலம் மிக அருமையாகவும் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மக்களுக்கான நல்ல விசயத்தை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.மணிபால்.
மொத்தத்தில் இந்த ‘சாலா’ சமூகத்திற்கு தேவையான முக்கியமான திரைப்படம் என்பதை நிரூபித்திருக்கிறார்.











