வாழை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பொன்வேல், ராகுல், ஜானகி, திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பத்மன், ஜே.ஏஸ்.கே. சதீஷ்குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மாரி செல்வராஜ்.
ஒளிப்பதிவாளர் :- தேனி ஈஸ்வர்.
படத்தொகுப்பாளர் :- சூரிய பிரதமன்.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாரயணன் .
தயாரிப்பு நிறுவனம் :- டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்.
தயாரிப்பாளர்கள் :- திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்.
ரேட்டிங் :- 2.75/5.
நடிகர் கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமாகி தனுஷ் நடிப்பில் கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் திரைப்பட உலகில் தலைசிறந்த இயக்குனராக மாரி செல்வராஜ் தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை.
இயக்குனர் மாரி செல்வராஜின் முந்தைய திரைப்படங்கள் சாதிய ஆதிக்க கொடுமைகளை அலசி ஆராய்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த திரைப்படத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் இந்த வாழை திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
கதையின் நாயகன் பொன்வேல் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த நிலையில், தாய் மற்றும் அக்காவுடன் வளர்ந்து வருகிறான்
கதையின் நாயகன் பொன்வேல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் நெருங்கிய நண்பன் என்றால் அது சேகர் மட்டும் தான்.
பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தாய் மற்றும் அக்காவுடன் சேர்ந்து வாழை தார்களை சுமந்து செல்லும் வேலைக்கு தனது தாயின் கட்டாயத்தினால் அந்த வேலைக்கு செல்கிறான்.
அப்படி செய்வது அந்த கதையின் நாயகன் பொன்வேல் வாழை தார்களை சுமக்கும் வேலை செய்வதற்கு சுத்தமாக விரும்பவில்லை.
தன் குடும்ப கஷ்டத்துக்காக வாழை தார்களை சுமக்கும் வேலைக்கு கதையின் நாயகன் பொன்வேல் செல்கிறான்.
ஒரு நாள் தனது தாயை ஏமாற்றி விட்டு வாழை தார்களை சுமக்கும் வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு ஆண்டு விழா என்பதால் நடன ஒத்திகைக்காக சென்று விடுகிறான்.
கதையின் நாயகன் பொன்வேல் சந்திக்கும் பலப்பிரச்சனைகளும், அன்றைய தினத்தில் அந்த ஊரில் நடக்கும் மிகப்பெரிய அளவில் நடக்கும் சோகமும் தான் இந்த வாழை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வாழை திரைப்படத்தில் கதையின் நாயகனாக பொன்வேல் நடித்துள்ளார்.
கதையின் நாயகன் சிவனைந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல், தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார்.
தான் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர் பூங்கொடி தனக்கு புத்தகத்தில் பூவையும் கொடியும் வரைந்து பூங்கொடி டீச்சர் என கூறும் கதையின் நாயகனாக பொன்வேல் எனக்கு மிகப்பெரிய அளவில் பிடிக்கும் என்று கூறிக்கொண்டு அவர் அவனுடைய ஆசிரியர் பூங்கொடியுடன் பயணப்படுவது மிகவும் அருமையாக இருக்கிறது.
குடும்பத்துடன் தாய் அக்கா அவர்களுடன் சேர்ந்து வாழைத்தார் சுமக்கும் பணிக்கு செல்ல பிடிக்காமல் பயந்து நடிப்பது, கமலஹாசனை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடிப்பை கொடுத்துள்ளார்.
கதையின் நாயகன் பொன்வேல் நண்பன் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகுல், மண்ணின் மனம் மாறாமல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகன் பொன்வேல் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிகிலா விமல் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திருநெல்வேலி வட்டார தமிழ் பேசி அனைவரும் மிகவும் எதார்த்தமாக நடித்து கதாபத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மூலம் அந்த ஊரின் பசுமையையும், மக்களின் எளிமையையும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தி யிருக்கிறார்.
வாழைத்தார்களை ஏற்றி வரும் அந்த லாரி விபத்துக்குள்ளாகும் காட்சியை திரைப்படமாக்கிய விதம் நேர்த்தியாக உள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
திரைப்படத்தில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒப்பாரி பாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இதயத்தை கனக்கச் செய்கிறது.
அவர் இயக்கிய முந்தைய திரைப்படங்களில் ஜாதி அரசியலை அதிரடியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த துயரமான சம்பவத்தை மையமாக கொண்டு இந்த வாழை திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை, அமைந்துள்ளதால் இந்த வாழை திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் எந்தவிதமான அரசியலையும் பேசாமல், தனது வாழ்வில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை வைத்துக்கொண்டு, இந்த சமூகத்தில் இருக்கும் உழைப்பாளிகளை அலட்சியமாக நடத்தும் முதலாளிகள் பற்றி மேலோட்டமாக பேசியிருக்கிறார்.
மொத்தத்தில் இந்த வாழை திரைப்படம் வாழைதார்களை சுமக்கும் எளிய மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை மிகவும் அற்புதமாக கூறயிருக்கிறார்.











