ராயன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தனுஷ்.
ஒளிப்பதிவாளர் :- ஓம் பிரகாஷ்.
படத்தொகுப்பாளர் :- பிரசன்னா ஜி கே.
இசையமைப்பாளர் :- : ஏ. ஆர். ரஹ்மான்.
தயாரிப்பு நிறுவனம் :- சன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- கலாநிதி மாறன்.
ரேட்டிங் :- 2.5/5.
கதாநாயகன் தனுஷ் பெற்றோர் இல்லாமல் தனது தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயன் ஆகியோரை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து செல்வராகவன் துணையோடு பாஸ்புட் உணவகம் ஒன்றை நடத்திக் கொண்டு தம்பிகள், மற்றும் தங்கையை வளர்த்து வருகிறார் கதாநாயகன் தனுஷ்.
இந்த நிலையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் மிகப் பெரிய அளவில் கொலை மற்றும் மார்க்கெட்டில் வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமாதானத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் காவல்துறை அதிகாரியான பிரகாஷ் ராஜ், சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இரண்டு தாதாக்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி இருவரையும் போட்டுத் தள்ள முயற்சி செய்கிறார்.
அதன்படி சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இரண்டு தாதாக்களுக்கு ஆட்களுக்கு இடையே பாரில் மோதல் நடக்க இதில் எதிர்பாராதவிதமாக கதாநாயகன் தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் சிக்கி கொள்கிறார்.
இந்த பாரில் நடந்த மோதலில் தாதா சரவணனின் மகன் கொலை செய்யப்பட, தாதாவான சரவணன் தன் மகனை இழந்த கோவத்தில் கதாநாயகன் தனுஷ்யிடம் உனது தம்பி சந்தீப் கிஷன் எனது வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை இடுகிறார்.
ஆனால், கதாநாயகன் தனுஷ் தனது இரண்டு தம்பிகளோடு தாதா சரவணன் வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்கிறார்.
தாதா சரவணனை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் காவல்துறையினர், ஒரு பக்கம் தேட மற்றொரு பக்கம் தாதா எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் தேடுகிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் தனுஷ் வாழ்க்கை என்ன ஆனது? தன் இரண்டு தம்பிகள், சந்தோஷ் கிருஷ்ணன் காளிதாஸ் ஜெயராம் தங்கை துஷ்ரா விஜயன் ஆகியோரை கதாநாயகன் தனுஷ் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் ராயன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராயன் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.
ராயன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், ராயன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
தன் தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, கோபம் கொள்வது என தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெறிகொண்டு எழுவது என நடிப்பின் அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் சபாஷ் போட வைத்து இருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா. வில்லத்தனத்தில் மிகப்பெரிய அளவில் உள்ளது மிரட்டியிருக்கிறார்
கதாநாயகன் தனுஷ் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
கதாநாயகன் தனுஷ் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தனது அன்ணனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
துஷாரா விஜயன் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பு செய்து இருக்கிறார்.
கதாநாயகன் தனுஷ் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன குடி அடிதடி கொலை என துரு துருவான இளைஞனாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்து இருக்கிறார்
கதாநாயகன் தனுஷ் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
காளிதாஸ் ஜெயராம். எதார்த்தமான அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
இயக்குனர் செல்வராகவனின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
அபர்ணா பாலமுரளி சரவணன், வரலட்சுமி திலீபன்ஆகியோர் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை. பாடல்கள் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத்திற்கு பெரிய பலம்.
தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடிப்பிடித்து அழித்து பலியை தீர்த்துக்கொள்கிறார்.
அடிதடி, ரத்தம், வெறித்தனம் என திரைப்படம் மிகவும் ரத்தக்களறியாக வெறித்தனமாக உள்ளது.
கொலை எப்படி செய்வது என்று இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள உதவும் அருமையான திரைப்படம்.
கஞ்சா குடிக்கிகள் இந்த திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.
கூலிப்படைகள் கூட்டத்தோடு பார்த்து தன் தொழில்நுட்ப அறிவை மேலும் வளரும் வகையில் திரைப்படம் சூப்பர். அரசியல் ரௌடிஸிசம் மில்லியனர்களை போட்டு தள்ள ஊக்குவிக்கும் திரைப்படம்!
மொத்தத்தில் ராயன் திரைப்படம் 2.30 மணி நேர திரைப்படத்தில் 220 கொலைகள் ரவுடிசத்தை வளர்க்கும் வகையில் உள்ளது.