சமரா திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/ 5.
நடிகர் & நடிகைகள் :- ரஹ்மான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்லியா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆரியன், தினேஷ் லம்பா, சோனாலி சூடான், டேரிஷ் சினாய், ஆபிரகாம், டாம் ஸ்காட், விஷால் பிரசன்னா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சார்லஸ் ஜோசப்.
ஒளிப்பதிவு :- சினு சித்தார்த்.
படத்தொகுப்பு :- டான் மேக்ஸ், ஆர்ஜே பாப்பன்.
இசையமைப்பாளர் :- தீபக் வாரியர், கோபி சுந்தர்.
தயாரிப்பு நிறுவனம்:- பீகாக் ஆர்ட் ஹவுஸ்.
தயாரிப்பாளர்கள் :- எம்.கே. சுபாகர்ன், அனுஜ் வர்கீஸ் வில்லியதாத்.
ரேட்டிங் :- 2.75/ 5.
மக்களைக் கொல்லும் மிக கொடூரமான கிருமி ஒன்றை உருவாக்கி அதை போரில் எதிர் நாட்டில் மோதும் சோளஜர்களை மற்றும் மக்கள் அனைவரையும் காலி செய்வதற்காக தன் உருவாக்கிய கிருமியை பயன் படுத்த முடிவு செய்கிறார் ஹிட்லர்.
ஆனால், தன் உருவாக்கிய கிருமியினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பை பார்த்து ஹிட்லரே பயந்து நடுங்க அந்த கிருமியை போரில் பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதோடு, முற்றிலுமாக அந்த கிருமியை முற்றிலுமாக அழித்து விட ஹிட்லர் முடிவெடுக்கிறார்.
கிருமியை தற்போது மறு உருவாக்கம் செய்யும் தீவிரவாதிகள் அதி பயங்கரமான கிருமியை பயன்படுத்தி இந்தியாவில் காலி செய்வதற்கு மிகப்பெரிய அளவில் மக்களிடையே அதிகளவில் பரப்ப முயற்சிக்கிறார்கள்.
அந்தக் கிருமியை பரப்ப முயற்சிக்கும் தீவிரவாதிகளின் முயற்சியை எப்படி முறியடிக்கிறார் கதாநாயகன் ரகுமான் என்பதும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கதாநாயகன் ரகுமான்
கண்டுபிடித்தாரா கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘சமாரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சமரா திரைப்படத்தில் கதாநாயகனாக ரகுமான் நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரகுமான் காவல்துறை அதிகாரியாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.
திரைக்கதையில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் வகையில் அவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
நூறு சதவீதம் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் பரத் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
பினோஜ் வில்லயா, சஞ்சனா திபு, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், டேரிஸ் ஜினோய், டாம் ஸ்காட், பிஷல் பிரசன்னா என அனைத்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், ஒளிப்பதிவு இமாச்சல பனி பிரதேசத்தின் பகுதிகளை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தீபக் வாரியரின் இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
சர்வதேச கதையை மிகவும் அருமையான திரைக்கதையால் மிகவும் தரத்திலான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சார்ல்ஸ் ஜோசப்.
மொத்தத்தில், இந்த ‘சமாரா’ அறிவியல் க்ரைம் கலந்த திரில்லர் திரைப்படம்.











