“குண்டான் சட்டி” திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- குப்பன், சுப்பன், குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பி.கே. அகஸ்தி.

அனிமேஷன் ஸ்டுடியோ :- வர்ஷா டிஸ்க்மீடியா.

படத்தொகுப்பு :- பி.எஸ். வாசு.

இசையமைப்பாளர் :- எம்.எஸ். அமர்கீத்.

தயாரிப்பு நிறுவனம்:- செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர்.எஸ்.ஏ.
கார்த்திகேயன்.

ரேட்டிங் :- 3.5/ 5.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் சிறு வயதிலிருந்து இணை பிரியாத உயிர் நண்பர்களாக ஊர் பாராட்டும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார்கள்.

குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஒரே நேரத்தில் இருவரும் வீட்டிலும் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஒரே நேரத்தில் இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறக்கிறது

குப்பனுக்கு மட்டும் வித்தியாசமான தோற்றத்துடன் ஆண் குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது.

இருவர் குழந்தைகளுக்கும் இருவர் குடும்பத்தாரின் குலதெய்வத்தின் பெயரை குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் மற்றவர்களின் குண்டானும், சட்டியும் கேலிகளுக்கு ஆளாகிறார்கள்.

கேள்விகளை பொருட்படுத்தாமல் வருத்தப்படாமல் படிக்கும் பள்ளியில் முதல் மாணவர்களாக மாணவர்களாக குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் மிகவும் நன்றாக படிக்கிறார்கள்.

ஒருநாள் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு செல்ல பூசாரி அம்மனிடம் இனிமேல் உனக்கு நான் எப்படி பூஜை செய்வது என தெரியவில்லை என கண்கலங்கி கொண்டிருக்கிறார்.

அதைக் கேட்ட குண்டேஸ்வரனும், சட்டிஸ்வரனும் பூசாரி இடம் என்ன பிரச்சனை என்று கேட்க கிராமத்தில் உள்ள பண்ணையாரை பற்றி சொல்கிறார்.

கிராமத்தில் உள்ள கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் வைத்திருக்கும் பண்ணையார் கோவிலுக்கு கொடுக்க வேண்டியதை வேண்டியதை கொடுக்காமல் ஏமாற்றி வரும் பண்ணையாருக்கு பாடம் புகட்டுகிறார்கள்.

அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு மளிகை பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் குண்டேஸ்வரன் சட்டிஸ்வரன் இருவரின் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள்.

குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர இருவரையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விட்டு விடுகிறார்கள்.

இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.

குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் இருவரும் மீண்டும் கிராமத்துக்குள் வரும் இவர்களால் அந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, மளிகை வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் காப்பாற்றப்பட்டார்களா? காப்பாற்றப்படவில்லையா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? நிவாரணம் கிடைக்கவில்லையா? என்பதுதான் குண்டான் சட்டியின் மீதிக்கதை.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த நல்ல கருத்தையும் மாணவ பருவத்திலேயே அறிவுறுத்தினால் பிற்காலத்தில் வாழ்வியல் முறை சிறப்பாக அமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தி .

7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருப்பது அனைவரின் ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.

தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்கிறார்.

சிந்தித்த கதை களத்தை தன்னுடைய தந்தையிடம் கூற உடனே மறுப்பேதும் கூறாமல்தானே முன் வந்து தயாரித்திருக்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தியின் தந்தை டாக்டர். எஸ்.ஏ  கார்த்திகேயன்

இசையமைப்பாளர் எம்.எஸ். அமர்கீத் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் அற்புதமான உள்ளது.

மொத்தத்தில் இந்த குண்டான் சட்டி திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திரையிடுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

error: Content is protected !!