’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தேவிபிரசாத் ஷெட்டி.
ஒளிப்பதிவாளர் :- ஹேமந்த்.
படத்தொகுப்பாளர் :- ஷஷாங்க் நாராயணா.
இசையமைப்பாளர் :- நவனீத் ஷாம்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃப்ளையிங் எலிஃபண்ட் ஸ்டோரி டெல்லர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார், அரவிந்த் ஷெட்டி.
மக்கள் தொடர்பு :- ஸ்ரீ வெங்கடேஷ்.
ரேட்டிங் :- 3.5./5.
’சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18’ மற்றும் ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘செகண்ட் ‘கேஸ் ஆஃப் சீதாராம்’.
இதற்க்கு முன்பு வந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், இந்த திரைப்படத்தை பார்ப்பவர்களை கண்டிப்பாக கவரக்கூடிய விதத்தில் இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
ஆனேகுடா காவல் நிலையத்தில் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரியாக கதாநாயகன் விஜய் ராகவேந்திரா ஆனேகுடா காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜய் ராகவேந்திரா குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தை வயதுடையவர்களை மட்டும் கை மற்றும் கால்களை இரும்பு முள் கம்பிகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, உடல் முழுவதும் கடுமையான பல இடங்களில் கூர்மையான கத்தியால் குத்திக் தாக்குதலுக்கு உள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உடற்கூராய்வு தகவல்கள் தெரிவிப்பதோடு, மனநலம் பாதித்த ஒருவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும், என மருத்துவர் திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
உடற்கூராய்வு செய்யும் மருத்துவரின் தகவல் மற்றும் ஒரே மாதிரியான கொலை ஆகிய இரண்டு விசயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, இப்படியாப்பட்ட கொடூர கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளியை தேடும் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் விஜய ராகவேந்திரா, கொலையாளியை இந்தக் கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளியை காவல்துறை அதிகாரியான கதாநாயகன் விஜய் ராகவேந்திரா கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?,
இப்படி கொடூரமான முறையில் கொலை செய்யும் கொலைகளுக்கான பின்னணி என்ன ? என்பதுதான் இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய ராகவேந்திரா, நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் விஜய ராகவேந்திரா, காவல்துறையினரின் உடல் மொழியை தன்னுடைய நடிப்பின் மூலம் கனக்கச்சிதமாக வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.
இந்த கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, வித்தியாசமான மிரட்டலான கதாபாத்திரத்தை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் வியக்கும்படியான பாராட்டு பெறுகிறார்.
தங்கையாக நடித்திருக்கும் உஷா பண்டாரி, அருமையாக நடிக்க கூடிய காட்சிகளில் கூட மிக அளவாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் ஒளிப்பதிவு முலம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை திரைப்படத்தின் மீதான கவனம் சிதறாமல் திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் நவநீத் ஷாமி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே பயணித்து திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
தொடர் கொலைகள் மற்றும் அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியின் முயற்சிகள், திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து முடிவு காட்சிகள் வரை படு சுவாரஸ்யமாக இருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி.
மொத்தத்தில், ’செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் பஞ்சமில்லை.











