பேட்டைக்காளி இணையத்தொடர் விமர்சனம் ரேட்டிங் :- 4/5

நடிகர் நடிகைகள் :- கிஷோர், வேலராமமூர்த்தி, கலையரசன், ஆண்டனி, ஷீலா, பாலா ஹாசன்
லவ்லின் சந்திரசேகர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம்:- லா.ராஜ்குமார்.

ஒளிப்பதிவு :- வேல்ராஜ்.

படத்தொகுப்பு :-  ஆர். சுதர்சன்.

இசை :- சந்தோஷ் நாராயணன்.

தயாரிப்பு :- கிர்ஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி.

தயாரிப்பாளர்:- வெற்றி மாறன்.

ரேட்டிங் :-  4 /5

100 % சதவீதம் தமிழ் என்கிற ஸ்லோகனுடன் சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம், பெருமையோடு வெளியிட்டிருக்கும் இணையத் தொடர்தான் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் லா.ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ‛பேட்டைக்காளி’ இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

இந்த ‘பேட்டைக்காளி’. 8 பாகங்களாக உருவாகியுள்ள இந்த இனையத்தொடரின் முதல் பாகம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு பாகம் என்று இதுவரை ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு என்றாலே மதுரையை சார்ந்தை விசயமாக பார்க்கப்படும் பேசப்படும், நினைவூட்டப்படும் இணையத் தொடர், பேட்டைக்காளி மதுரையின் அடுத்த உள்ள மாவட்டமான சிவகங்கையில் தொடங்குகிறது.

சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையை சுற்றி இணையத் தொடரின் கதை அமைந்திருக்கிறது.

தாமரைக் குளத்துப் பண்ணையில் விவசாய கூலிக்காரர்களாக தலைமுறை தலைமுறையாக வேலை செய்து வருபவர்கள் முல்லையூர் ஊர் மக்கள்.

ஒரு கட்டத்தில் இவர்கள் சுயமாக வாழ வேண்டும் என்று நினைத்து தங்கள் உருவாக்கிய நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் இருந்து ஒரு சிறு பகுதியை பிரித்து தர சொல்லி பண்ணையாரிடம் ஊர் மக்கள் பிரித்து தர சொல்லி பண்ணையாளர்களிடம் கேட்கிறார்கள். .

தன்னிடம் பண்ணையில் விவசாய கூலிக்காரர்களாக இருந்தவர்கள் முதலாளி ஆவதை விரும்பாத பண்ணையார் நிலங்களை பிரித்துக் கொடுக்க முடியாது என் கூறி விடுகிறார்கள்.

இதனால் முல்லையூர் மக்கள் வெளியேறி மாடு வளர்த்து முன்னேறி வருகிறார்கள்.

அந்த மாடுகள் தான் அவர்களின் சொத்தாகவும் வாழ்வாரதாகவும் மாறிவிடுகின்றது.

அப்படி பரம்பரையாக வந்த ஊர் பண்ணையார் இருக்கும் வேலராமூர்த்தியின் வீட்டில் வளர்க்கும் காளையை எந்த ஒரு மாடு பிடி வீரர்களும் அடக்க முடியாது.

இதனால், அவருக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் மிகப்பெரிய மரியாதை கிடைக்கிறது.

அதே சமயம், எந்த காளையாக இருந்தாலும் அதை அடக்க கூடிய திறமையான மாடுபிடி வீரரான கலையரசன் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் வேலராமூர்த்தியின் வீட்டில் வளர்க்கும் காளையை அடக்க கூடாது, என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

ஆனால், ஊர் கட்டுப்பாட்டையும் மீறி கலையரசன், பண்ணையார் வேலராமமூர்த்தியின் காளையை அடக்கி விடுகிறார்.

அதனால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட அந்த பிரச்சனையை தொடர்ந்து கலையரசன் கொல்லப்படுகிறார் அந்தக் கொலையை செய்தது யார்?

ஷீலா ஆற்றில் வந்த ஒரு சின்ன கண்ணுகுட்டி வளர்த்து அதற்கு வேட்டைகாளி பெயர் வைத்து வளர்த்து களத்தில் இறங்குகிறார்.

அப்படி ஷீலாவை ஆண்டனி சந்திக்கும் போது திருமணத்தைப் பற்றி பேசுகிறார்.

ஷீலாவுக்கும் ஆண்டனிக்கும் திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த இனையத்தொடரின் மீதிக்கதை.

கதாநாயகனாக கலையரசன் நடித்திருக்கிறார்.

மாடுபிடி வீரர் வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன் மிக அருமையாக நடித்துள்ளார்.

அந்த அவர் அடக்கும் காளையை போல் நடிப்பில் வேகத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

அவர் அடக்கும் காளை பிடிக்கும் போது உண்மையாகவே மாடுபிடி வீரராக மாறி இருக்கிறார்.

இதில் மற்றொரு கதாநாயகனாக ஆண்டனி நடித்திருக்கிறார்

கலையரசனின் மாமாவாக கிஷோர் நடித்திருக்கிறார்.

மிகத் தொடரில் தனது அறிமுக காட்சியிலேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறார்.

மாடுகளை வளர்த்துக் கொண்டு
இளைஞர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் கிஷோர்,

கலையரசனுக்காக ஏழு நாட்டு பஞ்சாயத்தில் சவால் விடும் காட்சியில் கண்களில் கோபம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் காட்டியிருக்கும் நிதானம் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

ஊர் பண்ணையாராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்பான நடிப்பாக கொடுத்திருக்கிறார்.

கதையில் உள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருந்தாலும், அவரது நடிப்பு ஒரே மாதிரியாக இருப்பது வெறுப்படைய செய்கிறது.

ஊர் பண்ணையார் வேலராமமூர்த்தியின் மகனாக நடித்திருக்கும் பாலா ஹாசன், வில்லன்களில் மறு உருவமாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

தந்தையின் செயலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும், பிறகு தந்தையின் அதிகாரம் தனது கைக்கு வந்த பிறகு மாறும் காட்சிகளில் நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் பாலா ஹாசன்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மேற்பார்வையில் இசைப்பணிகள் நடைபெற்றுள்ளது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை இணைய தொடருக்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு இதுவரை திரையில் காட்டாத ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்தியிருக்கிறது.

நிஜ ஜல்லிக்கட்டு போட்டியை ஒளிப்பதிவில் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் மிக அருமை

ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது.

இயக்குனர் லா. ராஜ்குமார், ஆரம்பத்தில் சாதியை மையப்படுத்தி கதையை நகர்த்தினாலும், அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அதை நேசிக்கும் மனிதர்கள், அவர்களுக்கு இடையே இருக்கும் அரசியல் என்று இதுவரை பார்த்திராத ஒரு இணைய தொடர் நம்மை கவனிக்க வைக்கிறார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கி இருக்கும் இயக்குனர் லா ராஜ்குமார் அவர்களே பாராட்டியாக வேண்டும்.

இணையத் தொடரின் மூன்றாம் பாகம் கைப்பற்றுவதற்கான போட்டி மற்றும் சூழ்ச்சியை மையப்படுத்தி நகர, நான்காம் பாகத்தில் ‘பேட்டைக்காளி’ யார்? என்ற உண்மை தெரிய வருவதோடு, பேட்டைக்காளியின் வரவு அடுத்தடுத்த இணைய தொடர் பாகங்கள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்படுகிறது.

மொத்தத்தில் இந்த பேட்டைக்காளி இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடிக்கும்.