சைரன் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, யுவினா, அழகம் பெருமாள், அஜய், பாண்டியன், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- அந்தோணி பாக்யராஜ்.

ஒளிப்பதிவாளர் :- S.K. செல்வ குமார்.

படத்தொகுப்பாளர் :- ரூபன்.

இசையமைப்பாளர் :- G.V பிரகாஷ் குமார் – சாம் C.S.

தயாரிப்பு நிறுவனம்:- ஹோம் மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர் :- சுஜாதா விஜய்குமார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரான கதாநாயகன் ஜெயம் ரவி தன் செய்யாத கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியான சிறை தண்டனைக்குப் பிறகு இரண்டு வாரம் பரோலில் வெளியே வரும் கதாநாயகன் ஜெயம் ரவி தனது விட்டிற்கு வருகிறார்.

அம்மா இல்லாத வளர்ந்த தன் மகள் யுவினா வீட்டிற்கு வரும் தந்தை கதாநாயகன் ஜெயம் ரவியின் அவர் மீது கடும்போகத்தில் இருக்கிறார்.

வீட்டில் இருக்கும் அனைவரும் கதாநாயகன் ஜெயம் ரவியை பார்க்க ஆசையாக இருக்கும்போது, கதாநாயகன் ஜெயம் ரவியின் மகள் யுவினா கொலைகார தந்தையை பார்க்க மாட்டேன் எனக் கூறி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

தனக்கு கிடைத்த பரோலில் தன் குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழி வாங்கவும் முயற்சி செய்கின்றார்.

இதற்கிடையில் கதாநாயகன் ஜெயம்ரவி சில பெரிய புள்ளிகளை சந்திக்கிறார்.

கதாநாயகன் ஜெயம்ரவி சந்திக்கும் பெரும்புள்ளிகள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த கொலைகளுக்கு காரணம் கதாநாயகன் ஜெயம்ரவி தான் ன என்று காவல்துறை ஆய்வாளராக இருக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அவரை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால், நடந்த கொலைகளை தான் செய்யவில்லை என்று அதற்கான சரியான ஆதரங்களை நீதிபதி முன்பு கதாநாயகன் ஜெயம் ரவி சமர்ப்பித்து தப்பித்துவிடுகிறார்.

உண்மையில் பெரும்புள்ளிகளை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் யார்? கொலையாளி காவல்துறை ஆய்வாளர் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா?  என்பதுதான் “சைரன்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சைரன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கதாபாத்திரத்திலும் நடுத்தர வயது கதாப்பாத்திரத்திற்கு மிகவும் கனகச்சிதமாக பொருந்திப் இருக்கிறார்.

அவரது நடிப்பும் வசன உச்சரிப்பின் மூலம் திலகன் கதாப்பாத்திரத்தை திரைப்பட ரசிகர்கள் மனதில் பதிகிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவி இரண்டு விதமான தோற்றங்களில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த சைரன் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் மிக அழகான காவல்துறை அதிகாரியாகவும் மிடுக்காகவும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

சீரியஸான காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் என்பதால்  கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இந்தக் கட்சியிலும் கொஞ்சம் கூட சிரிக்காமல் நடித்துள்ளார்.

கதாநாயகன் ஜெயம் ரவியுடன் ஷேடோ காவல் அதிகாரியாக பயணிக்கும் யோகிபாபு பல இடங்களில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றார்.

ஆனால் யோகிபாபுவின் கதாப்பாத்திரம் திரைக்கதையின் ஓட்டத்திற்கு மிக பலமாக அமைந்திருக்கிறது.

ஃப்ளாஷ் பேக்கில் கதாநாயகன் ஜெயம் ரவியின் மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் மாற்றுத்திறனாளி போல் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜெயம் ரவியின் தாய் கதாப்பத்திரத்தில் வரும் துளசி, கொடுக்கப்பட்ட சில காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வரும் அழகம் பெருமாள், காவல்துறை உயர் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, அஜய் என மொத்தம் மூன்று வில்லன்கள். மூன்று பேரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் ரூபன் படத்தொகுப்பில் திரைப்படத்திற்கு கூடுமானவரை பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்  எஸ்.கே. செல்வகுமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஷாம்.சி.எஸ் பின்னணி இசையை அதிகளவில் சத்தமின்றி அளவாக கையாண்டிருக்கிறார்.

பழிவாங்கும் கதைகள திரைப்பட உலகில் ஏராளமாக பார்த்து விட்டோம் அனால் இந்த சைரன் திரைப்படத்தில் தந்தை மகள் பாசம், சமூக நீதி, சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனப்போராட்டம்  ஆகியவற்றை திரைக்கதையில் புகுத்தி, அதை கமர்ஷியலாக இயக்கி இருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

அறிமுக இயக்குநர் அந்தோனி பாக்கியராஜ். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியதால் முதல் திரைப்படத்தில் முத்திரை பதித்திருக்கிறார்.

இந்த சைரன் திரைப்படத்தில் வரும் வசனங்கள் “ஒரு நல்லவனை நல்லவனாக நடிக்க வச்சிட்டீங்களே”, “சாதி இல்லனு சொல்றவன் என்ன சாதி என்று தேடாதீங்க” போன்ற வசனங்கள் திரைப்படம் பார்க்கும் திரை ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து உள்ளது.

மொத்தத்தில் சைரன் திரைப்படம் ஜெயம் ரவி ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!