‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நவீத் S ஃபரீத்.
ஒளிப்பதிவாளர் :- ரயீஷ்.
படத்தொகுப்பாளர் :- ராம் சதீஷ்.
இசையமைப்பாளர் :- ரெஞ்சித் உன்னி.
தயாரிப்பு நிறுவனம் :- அட்லர் என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- அட்லர் என்டர்டெயின்மென்ட்.
ரேட்டிங் :- 2.5/5.
கதாநாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர்கள் பல பெண்களை சென்று பார்க்க அனைத்து பெண்களும் கதாநாயகன் நிஷாந்த் ரூஷோவிற்க்கு இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையுடன் இருப்பதால் சொட்டை தலை என்ற காரணத்தால் நிகாரித்து விடுகிறார்கள்.
கதாநாயகன் நிஷாந்த் ரூஷோ இந்த கிராமத்திலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய வழுக்கைத் தலை என்ற காரணத்தால் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே கதாநாயகன் நிஷாந்த் ரூஷோவை திருமணம் செய்து கொள்ள கதாநாயகி ஷாலினி சம்மதம் தெரிவித்து விட, திருமண வேலைகள் இரு குடும்பத்தாரும் தடபுடலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில், கதாநாயகன் நிஷாந்த் ரூஷோ திடீரென்று திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
கதாநாயகன் நிஷாந்த் ரூஷோ திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் என்ன ?, இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையால் பாதிக்கப்பட்டு திருமண வாழ்க்கை அமையாமல் கதாநாயகன் நிஷாந்த் ரூஷோவிற்க்கு திருமணம் நடந்ததா இல்லை திருமணம் நடக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தில் கதாநாயகனாக நிஷாந்த் ரூஷோ, நடித்திருக்கிறார்.
நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இளம் கதாநாயகன் நிஷாந்த் ரூஷோ, இளம் வயதில் வழுக்கைத் தலையோடு இருப்பவர்களின் மன வலியை பிரதிபலிக்கும் விதத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக வழுக்கைத் தலை மேக்கப் அவருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது.
இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த ஒரு குறையில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் என திரைப்படம் முழுவதும் காமெடி நடிகர்கள் இருந்தும் திரைப்படத்தில் சிரிக்கும்படியான காட்சிகள் மிக மிக குறைவாகவே உள்ளது.
ஒளிப்பதிவாளர் ரயீஷ், ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.
தலையில் முடி இல்லாமல் வழுக்கைத் தலையால் அசிங்கப்படும் அவமானப்படும் பாதிக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையை இருக்கும் வலி இருப்பதாக சொல்லாமல் மிகவும் ஜாலியாகவும் காமெடியாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குநர் இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத்.
மொத்தத்தில், ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படம் மண்டையில் மயிர் இல்லாத ஆண்களுக்கு சமர்ப்பணம்.











