சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் வெளியீட்டுத் தேதி தள்ளி போகிறது.!

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் வெளியீட்டுத் தேதி தள்ளி போகிறதா.!?

சென்னை 23 ஏப்ரல் 2023 ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த திரைப்படம் முதலில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திரைப்படப்பணிகள் தாமதாக நடைபெற்று வருவதால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!