டீன்ஸ் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ராதாகிருஷ்ணன் பார்த்திபன், யோகி பாபு, தீபேஸ்வரன் ஜி, ஃபிராங்கின்ஸ்டன், கே.எஸ். தீபன், விஸ்ருதா ஷிவ், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், அஸ்மிதா மகாதேவன், டி.அம்ருதா, உதயபிரியன். கே, பி.கிருத்திகா, டி.ஜான் போஸ்கோ, ரோஷன், பிரஷிதா நசீர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

ஒளிப்பதிவாளர் :- காவ்மிக் ஆரி.

படத்தொகுப்பாளர் :- ஆர். சுதர்சன்.

இசையமைப்பாளர் :- டி.இமான்.

தயாரிப்பு நிறுவனம்:- பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி & அகிரா ப்ரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

ரேட்டிங் :- 2.5/5.

ஒரே குடியிருப்பில் வசிக்கும் சிறுவர் சிறுமிகள் 12 பேர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் பேசுவது போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்க அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி இருக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக கூறுகிறார்.

அந்த கிராமத்தில் உள்ள பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர் சிறுமிகள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் மற்றொரு சிறுவனை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

கிராமத்துக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி பயணித்துக் கொண்டிருக்கும் போது சாலையில் நடக்கும் போராட்டத்தால் சிறுவர் மற்றும் சிறுமிகள் செல்லும் பஸ்ஸில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, சிறுவர் மற்றும் சிறுமிகள் பஸ்சை விட்டு இறங்கி காட்டுப்பாதையில் நடந்தே கிராமத்திற்கு செல்கிறார்கள்.

அப்போது 13 சிறுவர் மற்றும் சிறுமிகளில ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும் பணியில் ஒவ்வொருவராக மாயமாகி விடுகிறார்கள்.

என்ன நடக்கிறது என்று தெரியாமலும் புரியாமலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் அனைவரும் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணி என்ன? மாயமான சிறுவர் சிறுமிகள் கிடைத்தார்களா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த டீன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டீன்ஸ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தீபேஸ்வரன் ஜி, ஃபிராங்கின்ஸ்டன், கே.எஸ். தீபன், விஸ்ருதா ஷிவ், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், அஸ்மிதா மகாதேவன், டி.அம்ருதா, உதயபிரியன். கே, பி.கிருத்திகா, டி.ஜான் போஸ்கோ, ரோஷன், பிரஷிதா நசீர், சிறுவர், மற்றும் சிறுமியர்கள் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி அனைத்து காட்சிகளிலும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் பார்த்திபன், மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்து காமெடி என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சோதிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு யோகி பாபு தேவையில்லை என தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி காட்சியில் பிரமாண்டத்தை ஒளிப்பதிவு மூலம் காண்பித்து இருக்கிறார்

இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

இசையமைப்பாளர் டி.இமானின் பின்னணி இசையிலும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிவதோடு, காவல்துறை விசாரணை, கிராமத்தில் குறி சொல்லும் பெண், பாட்டி, என கதையோடு ஒட்டாமல் பயணிக்கும் கதாபாத்திரங்களும், அவர்களுக்கான காட்சிகளும் திரைப்படம் பார்க்க ரசிகர்களின் பொறுமையை மிகப்பெரிய அளவில் சோதிக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் சாகசம் இல்லாத பயணம்.