கேமரா எரர் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.25/5.

நடிகர் நடிகைகள் :- கதிர், பிரபாகரன், ஹரிணி பிரசன்னா, சிம்ரன், சமீர், அகரன்,சுதிர் ரெட்டி குஜ்ஜுலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அகரன்.

ஒளிப்பதிவு :-  எஸ்.பி.பாலாஜி.

படத்தொகுப்பு :- அகரன்.

இசை :- ஷரவன் கலை.

தயாரிப்பு :- விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர்:- துபாய் மிஷ்ரா.

ரேட்டிங் :- 1.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ திரைப்படத் துறையை பற்றி பல திரைப்படங்கள் வந்திருக்கிறது.

திரைப்பட துறையின் திரை மறைவில் நடக்கும் நடிகைகள் வாய்ப்பு தேடும் பெண்கள் மீதான பாலியல் அத்து மீறல்களை அப்பட்டமாய் காட்டும் திரைப்படங்களின் வரிசையில் கேமரா ஏரர்.

திரைப்பட உலகில் நடக்கும் அவலங்களை அப்படியே எடுத்து காண்பித்துள்ளார் இயக்குனர் அகரன்.

ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உள்ள கதையை திரைப்படம் ஆக்குவதற்காக நடிகர் மற்றும் நடிகைகளுடன் படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக மொத்த குழுவினரும் செல்கின்றனர்.

படப்பிடிப்புக்காக தேர்வு செய்த வீட்டில் சிலபல அமானுஷ்ய சம்பவங்கள் பரபரப்பாக நடக்கத் தொடங்குகின்றன.

தினந்தோறும் படப்பிடிப்பு நல்ல முறையில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் கிராமத்தில் ஒவ்வொரு நாளும் படக்குழுவினர் எண்ணிக்கையில் ஒவ்வொருவராக குறைந்து கொண்டே வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடந்து வரும் கிராமத்தில் படப்பிடிப்பிற்கு வந்த படக்குழுவினர்கள் குறைந்து கொண்டே இருப்பதை பார்த்து சந்தேகத்துடன் கவனிக்கையில் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் இறந்து போனவர்களின் ஆவிகள் படக்குழுவினர்களின் உடலில் கலந்துவிடுகின்றனர்.

படக்குழுவினர் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? படப்பிடிப்பை நடத்தி முடித்தார்களா? முடிக்கவில்லையா? என்பதுதான் இந்த கேமரா எரர் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த கேமரா எரர் திரைப்படத்தை அகரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகிகளில் ஒருவராக, வட இந்தியப் பெண் சிம்ரன் நடித்திருக்கிறார்.

புதுமுக நடிகை ஹரிணியின் அருமையாக நடித்திருக்கிறார்.

சுதிர், மற்றும் பிரபாகரன் கதைக் களத்துக்கேற்ற அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

லைட் மேனாக வரும் ஒகே டேக் ராஜேஷ். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்றாலும் காட்சிகளில் வந்து போவதே அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உள்ளது.

இசையமைப்பாளர் ஷரவன் கலை பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாரான ரகம்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.பாலாஜி ஒளிப்பதிவு மொபைல் கேமராவில் எடுத்தது போல் உள்ளது.

இந்த திரைப்படத்தில் இடைவேளைக்கு முன்பு மது, மாது என பெண்களை வேட்டையாடும் திரை துறையில் நடக்கும் இருண்ட பக்கத்தை காட்ட பயன்படுத்திக் கொண்ட இயக்குநர், இடைவேளைக்கு பின்பு அமானுஷ்யங்களின் வரவு, உயிர்பலி என காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குனர் அகரன்

திரைப்படத்துறை உள்ள பல இயக்குநர்கள் நடிகைகளையும் திரைத் துறையில் வாய்ப்பு தேடும் வரும் புதிய பெண்களையும் எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்பதை கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் அகரன்.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் அகரன் கதாநாயகன் என்பதால் என தனக்கான படுக்கை விரிப்பு மற்றும் முத்தம் கொடுக்கும் காட்சிகளை அதிகட அமைத்திருக்கிறார்.

இந்த கேமரா எரர் திரைப்படத்தின் இயக்குனர் அகரன் கதையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வசனம் எழுதாமல் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள  சொந்தமாக வசனங்கள் பேசி நடிக்க வைத்திருக்கிறார்  திரைப்படம் எடுத்த இயக்குனருக்கு கண்டிப்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்

காமம் என்பது இலை மறைவு காய் மறைவாக இருக்க வேண்டும் இந்த கேமரா எரர் திரைப்படத்தில் அப்பட்டமான வசனங்கள் வைத்திருப்பது கொஞ்சம் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் கேமரா எரர் திரைப்படம் இளைஞர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ரகம்.