துக்குதுரை திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.75/5.

நடிகர் & நடிகைகள் :- யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- டென்னிஸ் மஞ்சுநாத்.

ஒளிப்பதிவாளர் :- ரவிவர்மா.

படத்தொகுப்பாளர் :- தீபக் எஸ் துவாரக்நாத்.

இசையமைப்பாளர் :- கே.எஸ். மனோஜ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஓபன் கேட் பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- அரவிந்த் வெள்ளைப்பாண்டியன்.

ரேட்டிங் :- 1.75/ 5.

கைலாசம் என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் விலை மதிப்புள்ள கிரீடம் ஒன்றை ராஜ குடும்பத்தின் கட்டிப்பாட்டில் வைத்து தலைமுறை தலை முறையாக பாதுகாத்து வருகிறார்கள்.

அந்த ராஜ குடும்பத்தின் கட்டிப்பாட்டில் வைத்து இருக்கும் கிரீடம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் கோவில் திருவிழாவில் மட்டும் மக்களிடம் காண்பிக்கப்படும்.

அந்த வகையில், ராஜ குடும்பத்தின் தற்போதையை தலைமுறையான மாரிமுத்து அந்த கிரீடத்தை பாதுகாத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் தற்போதையை தலைமுறையான ராஜ குடும்பத்தை சேர்ந்த
மாரிமுத்துவிடம் இருக்கும் கிரீடம் போலியானது எனவும், ஒரிஜினல் விலைமதிப்புள்ள கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய பாழடைந்த கிணற்றில் இருப்பதும், ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிய வருகிறது.

ஆனால், அந்த உண்மை தெரிந்த பிறகும், ராஜ குடும்பம் மற்றும் அந்த ஊர் மக்கள் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள்.

அந்த விலைமதிப்புள்ள கிரீடம் எப்படி அந்த ஊர் கிணற்றுக்குள் இருக்கிறது? கிணற்றின் மீதான அந்த கைலாசம் கிராமத்தில் உள்ள மக்களின் பயத்துக்கு என்ன காரணம்? கிணற்றில் இருக்கும் விலைமதிப்புள்ள கிரீடம் எடுக்கப்பட்டதா? விலைமதிப்புள்ள கிரீடம் எடுக்கபடவில்லையா? என்பதுதான் ‘தூக்குதுரை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் மிகவும் குறைந்த அளவு காட்சிகளே நடித்திருக்கும் யோகி பாபுக்கு அதிகம் வேலை இல்லை.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் யோகி பாபுவை மையமாக வைத்து கதாபாத்திரம் கதை திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு வழக்கமான தனது நக்கலான வசனங்கள் மூலம் சிரிக்க வைத்துள்ளார்.

யோகி பாபுக்கு ஜோடியாக இனியாவை போட்டு அவரையும் ஒரு சில காட்சிகளில் தலைகாட்ட வைத்திருக்கிறார்கள்.

பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி கடுமையாக உழைத்து ரசிகர்களை சிரிக்க வைக்க இருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் தீபக் எஸ்.துவாரகனாத், மிகவும் சுமார் ரகம்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், சிறப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் கே.எஸ். மனோஜின் இசையும் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

நகைச்சுவையான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படத்தை எப்படி நகர்த்தி செல்வது என்று தெரியாமல் இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத் திணறியிருக்கிறார்.

மொத்தத்தில் – இந்த ‘தூக்குதுரை’ திரைப்படம் திரைப்பட ரசிகர்களிடம் மனதில் பதியவில்லை.