‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், மாஸ்டர் அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெற்றிச்செழியன்.
ஒளிப்பதிவாளர் :- அர்ஜுன் ரவி.
படத்தொகுப்பாளர் :- ரஞ்சித் சி.கெ.
இசையமைப்பாளர் :- தினேஷ் ஆண்டனி.
தயாரிப்பு நிறுவனம் :- வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர் :- வேலாயுதம்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM).
வெளியீட்டு தேதி :- 25 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து, சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தைப் பதிவு செய்யும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
சென்னையில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும், அபர்ணதி தனது கணவர் லிங்கேஷ் இழந்து தனது ஒரே மகன் அஸ்வினை நல்லபடியாக படிக்க வைத்து எப்படியாவது வக்கீலாக உருவாக்க வேண்டும் என்பதுதான் அபர்ணதியின் கனவோடு வாழ்ந்து வருகிறார்.
அரசு பள்ளியில் படித்து வரும் மாஸ்டர் அஸ்வினுக்கு படிப்பை விட செஸ் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் அதிகளவில் இருக்கிறது.
தனது மகன் மாஸ்டர் அஸ்வினுடன் நீ படித்து வக்கீல் ஆக வேண்டும் என கூறுகையில் எனக்கு செஸ் விளையாட்டு தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறுகிறான்
கதாநாயகி அபர்ணதி தன் மகனை செஸ் விளையாட்டில் ஐந்து இடங்களில் நடக்கும் செஸ் விளையாட்டில் எப்படியாவது வெற்றி வெற்றி பெற்றால் மட்டுமே தன்னுடைய மகன் மாஸ்டர் அஸ்வின் உலக அளவில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என கனவுக்காக போராடுகிறார்.
மகன் மாஸ்டர் அஸ்வினை கிராண்ட் மாஸ்டராக ஆக்க விடாமல் பலவிதமான தடங்கல்கள் வருகிறது.
மாஸ்டர் அஸ்வினுக்கு செஸ் விளையாட்டை சொல்லிக் கொடுக்க யாருமில்லாததால் அபர்ணதியே செஸ் விளையாட பயிற்சியை சொல்லிக்கொடுக்கிறார்.
பலவிதமான தடங்கல்களை மீறி அபர்ணதி தன்னுடைய மகன் மாஸ்டர் அஸ்வின் உலக அளவில் கிராண்ட் மாஸ்டராக வெற்றி பெற்றானா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின மீதிக்கதை.
இந்த ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி மிக ஆழமான உணர்வுகளை தன் அருமையான நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
கதையின் கருவாக மாஸ்டர் அஸ்வின் நடிப்பு மூலம் திரைப்படத்தின் தூணாக அமைந்திருக்கிறார்
மாஸ்டர் அஸ்வின் நடிப்பு மூலம் காவல் நிலையத்தில் தன்னுடைய ஆசிரியரை செஸ் விளையாட அழைக்கும் காட்சியில் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார்.
கதையின் நாயகியின் ஜோடியாக கநடித்திருக்கும் லிங்கேஷ் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வெற்றிச் செழியன், சுரேஷ் மேனென், தமிழரசி, அன்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இயல்பை மீறாமல் நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் கதைக்குப் போதுமான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
கனவு, வறுமை, தாயின் தியாகம், சமூகத் தடைகள் மற்றும் சதுரங்கப் போட்டி ஆகியவற்றை இணைத்து கதை இப்படிப்பட்ட கதைகளில் உணர்ச்சிகளை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இயல்பாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்வது முக்கியம். குறிப்பாக சதுரங்கப் போட்டிகளின் காட்சிகளும் தாய்–மகன் உறவும் திரைக்கதையுடன் சரியாக இணைந்தால் திரைப்படத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.
திறமை தான் காலத்திற்கும் நிற்கும் என்றாலும், திறமையை நிரூபிக்கும் சூழல் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை என்பதை கமர்சியல் அம்சத்தோடு பேச முயற்சித்துள்ளார் இயக்குநர் வெற்றிச்செழியன்.
மொத்தத்தில், இந்த ‘தி கிராண்ட் மாஸ்டர்’ சதுரங்கக் களத்தில் சாதிக்கும் மகனின் கனவு… அதற்காக போராடும் தாயின் வாழ்க்கை.











