எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2./5.
நடிகர் & நடிகைகள் :- மதன் தக்ஷிணாமூர்த்தி, ஷரத், அய்ரா, கஞ்சா கருப்பு, சோனா ஹைடன், நரேன், இளையராஜா எஸ், முத்து வீரா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹரி உத்ரா.
ஒளிப்பதிவு :- வினோத் ராஜா.
படத்தொகுப்பு :- கிஷோர்.எம்.
இசையமைப்பாளர் :- ஏ.ஜெ. அலிமிர்ஸாக்.
தயாரிப்பு நிறுவனம்:- உத்ரா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- செ.ஹரிஉத்ரா, டாக்டர் எஸ் பிரித்தி சங்கர், ஆர் உஷா.
ரேட்டிங் :- 2./5.
அந்த ஊரில் மரக்கடை வைத்து நடத்தும் மிகப் பெரிய ரவுடியான நரேன் பாசமான தம்பியான இளையவை ஒருநாள் இரவு வாத்தியார் கால்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த வீரரான கதாநாயகன் ஷரத் இளையாவின் தலையை வெட்டி கொன்று காவல்துறை வாகனம் மீது வீசிவிடுகிறார்.
வாத்தியார் கால்பந்தாட்ட குழுவை சேர்ந்த அனைவருக்கும் நரேனின் தம்பியான இளையவை கொலை செய்தது ஒட்டுமொத்த கால்பந்தாட்ட குழுவில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகிறது.
மிகப் பெரிய ரவுடியான நரேன் தன் தம்பி இளையாவை கொலை செய்தவர்களை பழி தீர்ப்பதற்காக தனது அடி ஆட்களை அனுப்பி வைக்கிறார்.
அந்த கிராமம் முழுவதும் நரேனின் அடி ஆட்களை வாத்தியார் கால்பந்தாட்ட குழுவில் உள்ளவர்களை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த கிராமம் முழுவதும் தேடிக் கொண்டே இருக்க ஒருவழியாக கண்டுபிடித்து வாத்தியார் கால்பந்தாட்ட குழுவில் உள்ளவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்படும்போது, அனைத்து ரெளடிகளையும் கால்பந்தாட்ட குழுவினர் அடித்து துவம்சம் செய்து விடுகிறார்கள்.
அதன்பின் மிகப்பெரிய ரெளடியான நரேனை தேடிச் அவருடைய இடத்திற்கு வாத்தியார் கால்பந்தாட்ட குழுவில் உள்ள அனைவரும் சொல்கிறார்கள் அதன்பின் நடந்தது என்ன என்பதுதான் இந்த எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு
திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படத்தில் ஷரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷரத், தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் அதிகளவில் வசனங்களை பேசுவது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு.
கதாநாயகன் நடித்திருக்கும் சரத் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கதாநாயகனாக தமிழ் திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்த பிறகு இப்படியான வசனங்களை பேசினால் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கதாநாயகனாக நடித்திருக்கும், ஷரத் மிகவும் தீவிரமாக நடிப்புப் பயிற்சி பெற்று பின்பு நடிகன் என்று வெளியில் கூறிக் கொள்ளலாம்.
குழுவில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் அதே மாதிரியான கதாபாத்திரத்தை மீறி அளவில் நடிப்பை கொடுத்து அனைத்து காட்சிகளை கெடுத்து இருக்கிறார்கள்.
இளையாவாக நடித்திருக்கும் இளையராஜாவும் கதாநாயகன் ஷரத்தும் அறிமுகமாகும் ஆக்சன் காட்சி மிகவும் யதார்த்தமாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் நரேன், தனது முரட்டுத்தனமான உடம்பை வைத்துக் கொண்டு எதார்த்தமான நடிப்பை கொடுக்காமல் நடிக்கத் தெரியாதவர்களை நடிக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
வில்லன் நரேனுக்கு வலது கையாக வரும் ஆதேஷ் பாலா, தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நடிகர் மதன் தக்ஷிணாமூர்த்தி தனக்கு கொடுக்கப்படுவதை மிகவும் அற்புதமாகவும் அருமையாகவும் அந்த கதாபத்திரத்திற்கு நடிப்பின் மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.
நல்ல ஒரு அருமையான நடிகரிடம் திக்கி திக்கி பேசும் கதாபாத்திரம் கொடுத்து ஓவர் ஆக்டிங்கை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
இந்த எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படத்தில் கதாநாயகியாக அய்ரா நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு அதிக அளவில் ஒண்ணும் வேலை இல்லை.
கதாநாயகியாக அழகாக வந்து அருமையான நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா ஒளிப்பதிவு இரவு நேர காட்சி என்பதால் மிகவும் அருமையாக அசத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஜெ. அலிமிர்ஸாக் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை ஓகே ரகம்.
ஏதோ ஒரு கதையை எடுத்துக்கொண்டு வலுவிழந்த திரைக்கதை அமைத்து ஆங்காங்கே இல்லை பல இடங்களில் தடுமாறிச் இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
ஒடுக்கப்பட்டவர்கள், மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கிழ் சாதி மேல் சாதி கொண்ட திரைப்படத்தை எனது பங்கிற்கு நானும் எடுக்கிறேன் என்று ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
மொத்தத்தில், எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் கதைக்களத்திலும் அனைவரும் நடிப்பு களத்திலும் எனர்ஜி என்பது இல்லவே இல்லை.











