தெற்கத்தி வீரன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.25/5.
நடிகர் நடிகைகள் :- சாரத், அனகா, முருகா அசோக், நாடோடிகள் பரணி, மாரி வினோத், வேல ராமமூர்த்தி,
மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சாரத்.
ஒளிப்பதிவு :- என்.சண்முக சுந்தரம்.
படத்தொகுப்பு :- வி.ஜே.சாபு ஜோசப்.
இசை :- ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு நிறுவனம் :-சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர்:- சாரத்
ரேட்டிங் :- 1.25 / 5.
கடல் மற்றும் மீனவர்கள் சார்ந்த திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்களில் எவ்வளவு வந்திருக்கிறது.
அந்தத் திரைப்படங்கள் அனைத்தும் மீனவர்கள் மையமாக வைத்து கதை திரைக்கதை எழுதி இருந்தால் ரசிப்படியாக அமைந்திருக்கும்.
தமிழ் சினிமா உலக அளவில் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தெற்கத்தி வீரன் மாதிரியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்தால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு நகரவே நகராது.
ஆனால் இந்த தெற்கத்தி வீரன் திரைப்படத்தில் மீனவர் என்று ஒரு பாட்டில் மட்டும் தான் கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் கடல் சார்ந்த மீன்பிடி தொழில் செய்யும் முக்கியமான தொழிலதிபரின் மகன் கதாநாயகன் சாரத்.
இவர் நிறைய நல்ல காரியங்களையும் நல்ல விஷயங்களை செய்து வருபவர்.
இந்த ஊரில் என்ன பிரச்சினை நடந்தாலும் தட்டிக் கேட்கும் தன்மை கொண்டவர் கதாநாயகன் சாரத்.
நல்லது செய்வதில் மூலம் இவர் ஊரில் தொழிலதிபர் எம் எல் ஏ கவுன்சிலர் மந்திரி என அனைவரிடமும் பகையை சம்பாதித்து வைத்திருக்கிறார்.
இதனிடையே கதாநாயகி கதாநாயகன் அனகாவும் கதாநாயகன் சாரத்தும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ தொடங்குகின்றனர்.
அப்போது தான் கதாநாயகன் சாரத்தின் வாழ்க்கையில் இவர் சம்பாதித்து வைத்திருக்கும் பகைகள் அனைத்து தொழிலதிபர் எம் எல் ஏ கவுன்சிலர் மந்திரி இவர்கள் ரூபத்தில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது.
கதாநாயகன் சாரத் தான் செய்யாத கொலை வழக்கில் சிக்க வைக்கிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் சாரத் இந்த கொலை வழக்கில் இருந்து மீண்டாரா? மீளவில்லையா?
என்பதுதான் இந்த தெற்கத்தி வீரன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தத் தெற்கத்தி வீரன் திரைப்படத்தில் புதுமுக நடிகர் சாரத் இயக்கி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
இவரின் நடிப்பு பல இடங்களில் மிகவும் படும் மட்டமாக இருக்கிறது.
நடிப்பு மற்றும் இயக்கம் என்பதால் கவனிக்க வைக்க நடிப்பு மற்றும் அனைத்திலும் கவனிக்க தவறி விட்டார்.
நடிக்கவும் தெரியவில்லை வசன உச்சரிப்பு சரியாக வரவில்லை.
நடிக்க வேண்டும் என்றும் எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான தகுதியும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சாரத் நடிக்காமல் இருந்திருந்தால் வேறு யாராவது நடித்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்.
இந்த தெற்கத்தி வீரன் திரைப்படத்தில் அதான் நாயகி ஆக புதுமுக நடிகை அனகா நடித்துள்ளார்
அறிமுக நடிகையான அனகா தனக்கான கதாபாத்திரத்தை முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறார்.
அவருக்கு உரிய கதாபாத்திரத்தை மிகவும் அழகாக அருமையாக நடித்து கொடுத்திருக்கிறார்.
அசோக் பரணி, கபீர் துகான் சிங், , மதுசூதன் ராவ் ஆகியோரின் நடிப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைத்து உள்ளது.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.
வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு சுமாராகத்தான் இருக்கிறது.
கதை மற்றும் திரைக்கதை முன் பகுதி ரசிக்க வைத்தாலும் பின் முகம் சுளிக்க வைக்கிறது.
பல வேறு கதைகள் பல வில்லன்கள் என்பது திரைப்படம் பார்க்கும் மக்களின் கவனத்தை திசை திருப்பி சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ‘தெற்கத்தி வீரன்’ – திரைப்படம் தோல்வி கண்டவீரன்.