பாட்னர் திரைவிமர்சனம் ரேட்டிங்;+ 2.5/5.

நடிகர் & நடிகைகள் :- ஆதி பினிசெட்டி, யோகி பாபு, ஹன்சிகா மோத்வானி, பல்லக் லல்வாணி, ஜான் விஜய், முனீஸ்காந்த், ரவி மரியா, ரோபோ ஷங்கர், தங்கதுரை, அகஸ்டின், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மனோஜ் தாமோதரன்.

ஒளிப்பதிவு :- ஷபீர் அஹமத்.

படத்தொகுப்பு :- பிரதீப் E. ராகவ்.

இசையமைப்பாளர் :- சந்தோஷ் தயாநிதி.

தயாரிப்பு நிறுவனம்:- ராயல் ஃபார்டுனா கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- கோலி சூர்ய பிரகாஷ்.

ரேட்டிங் :- 2.5/ 5.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த கதாநாயகன் ஆதி இறால் பண்ணை தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கி இறால் பண்ணை ஆரம்பித்து நஷ்டம் ஏற்பட்டுவிட கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர் கடனை கொடு இல்லை என்றால் உன் தங்கச்சியை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கண்டீசன் போடுகிறார்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் ஆதி கடனை திரும்ப அழைப்பதற்காக சென்னைக்கு நண்பர் யோகி பாபு இருப்பதால் அவர் வேலை வாங்கி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கதாநாயகன் ஆதி சென்னைக்கு கிளம்பி வருகிறார்.

ஆனால் யோகிபாபு கடத்தல் மற்றும் திருட்டு தொழிலில் ஈடுப்பட்டு சம்பாதித்து வருகிறார்.

கடன் பிரச்சனையால் தனது நண்பர் யோகி பாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் கதாநாயகன் ஆதி.

அப்போது விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை சிப்பை திருடுவதற்காக ஜான் விஜய் சென்னைக்கு வருகிறார்.

அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க கதாநாயகன் ஆதியும், யோகி பாபுவும் செல்கிறார்கள்.

விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை திருட சொல்லும் போது யோகிபாபுவிற்கு ஒரு ஊசி செலுத்தப்படுவதால் அவர் ஹன்சிகா மோத்வானி உருவத்திற்கு மாறிவிடுகிறார்.

அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக விஞ்ஞானி பாண்டியராஜனை தேடிப் போக, அவரை அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார்.

இறுதியில் யோகிபாபு மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா? விஞ்ஞானி பாண்டியராஜின் கண்டுபிடிப்பை திருடுவதற்கான காரணம் என்ன? இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் இந்த பார்ட்னர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பார்ட்னர் திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்பட உலகில் கம்பேக் கொடுத்துள்ள ஆதி தனது எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்த பாட்னர் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் பல்லக் லல்வாணி, இருவரும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.

பல்லக் லல்வாணி, அழகாக வந்து அவருடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி யோகிபாபுவாக மாறுவதால் யோகிபாபு போன்று நடிப்பதற்கு முயற்சி செய்து பாராட்டை பெறுகிறார்.

ரோபோ சங்கர் காமெடி என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேத்துகிறார்.

ஜான் விஜய், முனீஸ்காந்த், ரவி மரியா, தங்கதுரை, அகஸ்டின், ஆகியோர் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷபீர் அகமது ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் கேட்கும் ரகம்.

குடும்ப செண்டிமெண்ட், திருட்டு, அறிவியல் ஆராய்சி என திரைக்கதையை வடிவமைத்துள்ள இயக்குனர் மனோஜ் தாமோதரன் சீரியஸான இடத்திலும் காமெடியை புகுத்தியிருப்பது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

திரைப்படம் மிகவும் சிறப்பாக இருந்தாலும் ஒரு சில காட்சிகள் ரோபோ சங்கரின் காமெடி சுவாரஸ்யத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில் பாட்னர் திரைப்படம் ஒருமுறை திரையரங்கம் சென்று பார்க்கலாம்.

error: Content is protected !!